அழிந்துவரும் நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு (Dugong)

சில விலங்குகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாழ்விடப் பாதுகாப்பு காரணமாக, அவற்றின் எண்ணிக்கை மெதுவாக அதிகரித்துள்ளது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன. அத்தகைய ஆறு விலங்குகளின் கதைகளை பார்ப்போம்

டால்பின்கள் போன்றே இருக்கும் கடல் பசுக்கள் கடற்பாசிகளை மட்டுமே உணவாக உட்கொள்ளும் இது ஒரு தாவர வகை பாலூட்டியாகும்.

ராமநாதபுரம் மாவட்டம் கடற் பகுதியில் கடற்பசுகளை பாதுகாக்க தமிழக அரசு கடல் பசு பாதுகாப்பு திட்டத்தை தொடங்கி உள்ளது.

ஜாகுவார் (Jaguar)(பேந்தீரா ஒன்கா) இது சிங்கம் மற்றும் புலிக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரும்பூனை  இனமாகும்

ஜாகுவரின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் மஞ்சள் நிற கோட்டில் உள்ள கருப்பு புள்ளிகள் ஆகும் இது மனிதர்களின் விரல் ரேகை போல தனித்துவம் மிக்கது.

ஜாகுவார்கள் சிறந்த நீச்சல் வீரர்கள் ஜாகுவார்களின் தாடை மிகவும் வலிமையானது இது ஆமைகளின் ஓடுகளை கூட துளைக்கும்

உகாண்டாவின் மகாஹிங்கா கொரில்லா தேசிய பூங்காவில் மலை கொரில்லாக்களின் எண்ணிக்கை 1980 களிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் மகிழ்ச்சியான  செய்தி

மலை கொரில்லா காடுகளின் அழிவு  வேட்டையாடப்படுதல் காரணமாக அழிவின் விளிம்பில் இருந்தன.காடுகளை பாதுகாத்து வேட்டையாடுதலை தடுப்பதன் மூலம் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நமது பகுதியில் காணப்படும் நாரை போன்ற தோற்றத்தினுடைய பிட்டர்ன் எனப்படும் பறவை தனது நீண்ட கழுத்து, கொக்கு போன்ற  கூர்மையான மூக்கு  மற்றும் ஒளிர்வண்ண உடலுடன் தனித்துவமான தோற்றத்தைக் கொண்டது

இது பொதுவாக ஈரநிலங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் ஆறுகளின் அருகே காணப்படும் பறவைகள்

சைகா மான் (Saiga Antelope) என்பது உண்மையிலேயே அழகான மற்றும் தனித்துவமான ஒரு விலங்கு. அதன் பெரிய வீங்கிய மூக்குதான் அதை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்துகிறது

மில்லியன் கணக்கான சைகா மான்கள்   வேட்டையாடுவதற்கு முன்பு பூமியில் சுற்றித்திரிந்தன கடந்த காலங்களில் அதிக அளவில் வேட்டையாடப்பட்டதால் இது அழிவின் விளிம்பு நிலைக்கு சென்றது

உலகின் அரிதான பாம்புகளில் ஒன்றான ஆன்டிகுவான் பந்தய வீரர்

உலகின் அரிதான பாம்புகளில் ஒன்றான ஆன்டிகுவான் பந்தய வீரர் மீண்டும் கர்ஜித்து வந்துள்ளார் 1995 இல் 50 இல் இருந்து இன்று 1100 க்கும் மேலாக, ஆன்டிகுவா பாம்புகள் உள்ளன

இந்த உயிரினங்கள் மீட்கப்பட்டதாக UNEP அறிவித்தது

வாழ்விட பாதுகாப்பு சட்டவிரோத வேட்டையை ஒழித்தல் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுதல் பல்லுயிர்ப் பன்முகத்தன்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்