இந்திய அரசு (GoI) பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் நிவர்த்தி) சட்டம் -2013 ஐ இயற்றியுள்ளது
சட்டத்தின்படி பெண்கள் பணிபுரியும் இடங்கள் என்பது அரசு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனம், தொண்டு நிறுவனங்கள், வீடு, சிறிய மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள்
விளையாட்டு பயிற்சி நிறுவனங்கள்,பெரிய மருத்துவமனைகள், கூட்டுறவு சங்கங்கள், சேவை அளிப்பவர்கள் குறிப்பாக பெண்கள் பத்து பேருக்கு மேல் பணிபுரியும் பணியிடங்கள்
குறிப்பிடப்பட்ட பணியிடங்கள், வீட்டுப் பணிப் பெண்கள் வணிகம் அல்லது வேலை செய்யும் இடம் உட்பட பத்துக்கும் குறைவான நபர்களுக்கான வேலை அல்லது தங்கும் இடங்களாகும்.
பாலியல் துன்புறுத்தல் என்பது தொடுதல், தொட முயற்சித்தல், பாலியல் வேண்டுகோள், ஆபாசப் படங்களைக் காட்டுதல், மொபைல் ஃபோன் மூலம் ஆபாசப் படங்களைக் காட்டுதல், .
உள்ளூர் புகார் குழுக்களை அமைத்தல். நான்கு பேர் கொண்ட உள்ளூர் குறைதீர்க்கும் குழு அமைக்கப்படும் வேண்டும் . குழுவின் உறுப்பினர்கள் மூன்றாண்டுகளுக்கு குறையாமல் பணியாற்ற வேண்டும்
மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளூர் குறைதீர்க்கும் குழுக்கள் செயல்பட வேண்டும். இச்சட்டத்தை செயல்படுத்த மாவட்ட சமூக நல அலுவலர்கள் உதவுவார்கள்.
நிறுவனங்களின் கடமைகள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். துணை விதி 4 பிரிவு (1) இன் படி பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனைகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்