உலக சுகாதார நிறுவனம் சர்வதேச சுகாதார நெருக்கடியாக குரங்கம்மை பரவலை அறிவித்தது

இந்தியாவில் குரங்கம்மை பெருந்தொற்று பரவல் மத்திய அரசு உறுதி 

ஆப்பிரிக்க நாடான காங்கோவில்  குரங்கு தட்டம்மை உலகம் முழுவதும் பரவியதை அடுத்து, உலக சுகாதார நிறுவனம் தொற்றுநோய் அவசர நிலையை அறிவித்துள்ளது. இந்த தொற்றுநோயில் 450 பேர் இறந்தனர்

1958ல், டென்மார்க்கில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்குகளில் இருந்து இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது 2017 இல் உறு மாறிய வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளில் பரவத் தொடங்கியது,

ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் வகையைச் சேர்ந்த வைரஸ்கள் குரங்கம்மை நோயை உண்டாக்குகின்றன. இந்த வைரஸ் இரண்டு வகையான மரபணுக்களைக் கொண்டுள்ளது, கிளேட் 1 மற்றும் கிளேட் 2. ஆகும்

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கிளேட் 1பி புதிய திரிபு உருவானது இது அதிக ஆபத்தானது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்,

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, 2022 இல் 110 நாடுகளில் 87 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 112 பேர் இறந்தனர். மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக பரவி வருகிறது

குரங்கு அம்மை நோயின் ஆரம்ப அறிகுறிகளில் காய்ச்சல்  தலைவலி, முதுகுவலி, தசை வலி, கொப்புளங்கள் மற்றும் உடல் முழுவதும் புண்கள் ஆகியவை ஆகும்

நோய்த்தொற்றுகளில் உடலில் குறிப்பாக வாய், கண்கள் மற்றும் பிறப்புறுப்புகளில் புண்கள் தோன்றும் பொதுவாக உள்ளங்கை பாதங்கள் வரை புண்கள் ஏற்பட வாய்ப்புள்ளது

நோய்த்தொற்று பொதுவாக 14 நாட்கள் முதல் 21 நாட்கள் வரை நீடிக்கும், பின்னர் அது தானாகவே சரியாகிவிடும்.ஆனால் இந்த திரிபு பற்றி இன்னும் பல தெரியாத தகவல்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

இது பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு மூலம் பரவுகிறது, அதாவது உடலுறவு கொள்வதன் மூலம், தோலுடன் தொடர்பு கொள்வதன் மூலம், பரவுகிறது.

வைரஸ் சுவாசக் குழாய், கண்கள், மூக்கு மற்றும் வாய் வழியாக உடலில் பரவுகிறது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் படுத்திருக்கும் படுக்கை ஆடைகள், துண்டுகள் போன்றவற்றைத் தொடுவதால் நோய் பரவுகிறது.

விலங்கு இனங்கள் அணில்,எலி ,குரங்குகள் போன்ற சிறிய பாலூட்டிகள் இந்த நோய்க்கு ஆளாகின்றன, எனவே செல்லப்பிராணிகளுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பெரியம்மை நோய்க்கு கண்டுபிடிக்கப்பட்ட டெகோர்வில்லா தடுப்பூசி இந்தத் தொற்று நோய்க்கான சிகிச்சையாக பயன்பாட்டில் உள்ளது மற்றும் WHO வழிகாட்டுதல்களின்படி பிற சிகிச்சை முறைகள் வழங்கப்படுகின்றன

உலக அளவில் ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை கட்டுப்படுத்த நாம் சிறப்பான மற்றும் வலிமையான முயற்சியுடன் செயல்பட வேண்டும் என்று WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்

வருமுன் காப்போம் விழிப்புடன் இருப்போம்