கிராம ஊராட்சியின் நிலைக்குழுக்கள்/ Standing committees
கிராம ஊராட்சியின் நிலைக்குழுக்கள்
மூன்றடுக்கு ஊராட்சிகள் கிராம ஊராட்சி, வட்டார ஊராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சிகள் தங்களுக்கு சட்டப்படி வழங்கப்பட்ட கடமைகளையும், பணிகளையும் சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்காக பல்வேறு குழுக்களை அமைத்து அவற்றின் ஆலோசனைகள் பெறலாம் குழுவின் பரிந்துரைகளை பெறலாம். அதன் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளலாம்.
தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 பிரிவு 95ன் கீழ் கிராம ஊராட் சியின் வளர்ச்சிக்காக கிராம பஞ்சாயத்து நிர்வாகம் இந்த ஐந்து வகையான குழுக்களை அமைக்கலாம்.
- நியமனக் குழு
- வேளாண்மை மற்றும் நீர்பிரி முகடு குழு
- வளர்ச்சி குழு
- பணிகள்குழு
- கல்விகுழு
நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்வு
- 1994 தமிழ்நாடு ஊராட்சி சட்ட பிரிவு 95-படி கிராம ஊராட்சியில் அமைக்கப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிலைக்குழுக்கள் உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும்.
- நியமன குழுவில் தலைவர் தவிர இரண்டு ஊராட்சி உறுப்பினர்கள் மட்டுமே அதாவது வார்டு மெம்பர் இருக்க வேண்டும்.
- மற்ற இதர குழுவில் அரசு அலுவலர்கள், கிராம ஊராட்சி உறுப்பினர்கள் அவர்களை தவிர கிராமத்தைச் சேர்ந்த நபர்களும் இருக்கலாம்.
- ஒவ்வொரு குழு அமைக்கப்படும் போது அரசின் அரசாணையில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு குறையாமல் உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும்.
- ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களில் பங்கு பெறலாம்.
- ஒரு உறுப்பினர் 3 குழுக்களுக்கு மேல் தலைவர் பதவியில் பணியாற்றக்கூடாது
கிராம ஊராட்சி தலைவர் அனைத்து குழுக்களின் பதவி வழி உறுப்பினர் ஆவார் - அத்தகைய எல்லா பதவிகளுக்கும் பொருத்தமான நபர்கள் நியமன குழுவின் மூலம் தமிழ்நாடு ஊராட்சியில் சட்டப் பிரிவு 13 படி தேர்வு செய்யப்பட வேண்டும்
இது தவிர பல்வேறு குழுக்கள் சில குறிப்பிட்ட நோக்கத்திற்காக வரன் முறைக்கு உட்பட்டு பணிகளை நிறைவேற்றுவதற்கும் கடமைகளை செய்வதற்கும், அதிகாரத்தை செலுத்துவதற்கும் வேறு சில குழுக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் முன் அனுமதியுடன் ஏற்படுத்தப்படலாம் தேவையேற்படின் ஒரு குறிப்பிட்ட பொருள் தொடர்பாக பரிசீலனை செய்து அறிக்கை அல்லது ஆலோசனை வழங்குமாறு கோரி இருப்பின் அதன்பொருட்டு குழு அமைக்கலாம். இவ்வாறு அமைக்கப்படும் குழுக்களின் பதவிக்காலம் ஆறு மாதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. ஏற்படக்கூடாது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 11 ஆவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 29 இனங்களை சார்ந்த பிற துறைகள் மத்திய, மாநில அரசின் திட்டங்களை ஒருங்கிணைத்து விரிவான திட்டமிடலாக அமைவதுடன் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொண்டு உள்ளூர் அளவில் அதை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த குழுக்கள் அமைக்கப்படுகின்றன.