உங்கள் இலக்குகளை ஏன் அடையவில்லை?உண்மையான காரணம் என்ன?
உங்கள் சொந்த இலக்குகளை நீங்கள் ஏன்? அடையவில்லை என்பதற்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியுமா?
மனிதன் தன் வாழ்வில் பல்வேறு நிலைகளை அடைய பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறான். ஒருவர் தனது ஏழ்மையில் இருந்து சிறந்த வாழ்க்கையை நடத்த தனது உடலாலும் மனதாலும் ஒரு திட்டத்தை உருவாக்கி அந்த இலக்கை நோக்கி பயணிக்கும்போது பல்வேறு தடைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக அவர் தனது இலக்கை நிர்ணயித்த பிறகு, அவர் தேவையான உடல் வலிமை அல்லது மன வலிமையைப் பெற வேண்டும் பின்னர் திட்டமிடல் மிகவும் முக்கியமானது. அதை நோக்கி பயணிக்கும் போது ஒருவேளை மூன்று அல்லது நான்கு மாதங்கள் நோய்வாய்ப்பட்டால் அந்த இலக்கில் மனிதன் பின்வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒரு மனிதன் தனது இலக்குகளை அடைய முடியாததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
பல்வேறு உளவியலாளர்கள் இதற்குப் பல காரணங்களைக் கூறுகிறார்கள் அவை பின்வருமாறு
பயம்
உடல்நலப் பிரச்சினைகள்
வறுமை
வேலை சூழல்
இயலாமை
குடும்ப சூழல்
இதே போன்ற காரணங்கள் இருந்தாலும், அவை முக்கியமாக உளவியல் எதிர்வினையைக் குறிக்கின்றன
உளவியல் எதிர்வினை
ஏறக்குறைய அனைவருக்கும் இந்த வகையான மன நிலை உள்ளது ஏன்? என்னிடம் கூட இருக்கிறதா இது ஆங்கிலத்தில் உளவியல் எதிர்வினை என்று அழைக்கப்படுகிறது (Psychological reactance) என்று அழைபார்கள் மக்கள் தங்கள் சுதந்திரமானமன செயல்பாடுகள் நடத்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல், தடுத்தல், இழப்பு போன்று நிலைகளை அனுபவிக்கும் போது இது போன்ற மனநிலை வெளிப்படுகிறது. இது நமது தேர்வு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுவதால் தூண்டப்படுகிறது.இது கோபம் மற்றும் விரக்தி போன்ற எதிர்மறை உணர்ச்சிகளுக்கு வழிவகுக்கும். வற்புறுத்துதல் அல்லது அழுத்தத்தை எதிர்க்க இது நம்மை ஊக்குவிக்கும் தடைசெய்யப்பட்ட அல்லது ஊக்கமளிக்காத நடத்தைகளில் ஈடுபடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
பொதுவாக மக்கள் தங்களின் சில தனிப்பட்ட சுதந்திரங்கள் இருப்பதாக உறுதியாக அறிந்திருக்கிறார்கள் மேலும் அந்த சுதந்திரத்தைத் திருப்திப்படுத்தத் தேவையான நேரங்கள் ஆயினும் அதை அவர்களால் பெற முடியாத இருக்கிறது அல்லது குறைந்தபட்சம் தங்களால் அதை பெற முடியாது என்று உணரலாம் கடையில் ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்க வற்புறுத்துவது கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்திக்கப்படுவது பள்ளியில் மொபைல் போன் உபயோகிப்பது தடை செய்யப்படுவது அனைத்தும் விரும்பியபடி செயல்படுவதற்கான சுதந்திரத்திற்கு எதிரான நிலை ஆகும் எதிர்வினை செயல்பாட்டுக்கு வருவது இங்குதான் ஒரு நபர் தங்கள் விருப்பங்களை எதிரான கருத்துக்கள் அல்லது வரம்பை கட்டுப்படுத்துவதாகவோ உணரும்போது எதிர்வினை ஏற்படுகிறது.
இது மோசமானதல்ல நிலை இல்லை இதை எவ்வாறு எதிர்கொள்ளவது? உளவியல் எதிர்வினை சில நேரங்களில் நாம் செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்வதிலிருந்து சில சமயங்களில் நாம் செய்ய விரும்பும் விஷயங்களைச் செய்வதிலிருந்து நம்மைத் தடுக்கலாம்.
எனவே நம்பிக்கை உடன் செயல்படுங்கள் வெற்றி நமதே