தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் -1994 ஓர் பார்வை
ஒரே இடத்தில் அமர்ந்து உண்மையான ஜனநாயகத்தை உருவாக்க முடியாது. அதை கிராமத்தில் உள்ள மக்களிடம் இருந்து செய்ய வேண்டும். (மகாத்மா காந்தி)
நீங்கள் இதுவரை சந்திக்காத ஒரு ஏழை மற்றும் பலவீனமான நபரின் முகத்தை நினைத்து நீங்கள் நினைப்பது போல் அவர்/அவள் எதையும் பெறப் போகிறாளா? வறுமையில் இருந்து அவர் தனது சொந்த வாழ்க்கை மற்றும் விதியின் மீது கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவாரா? வேறு வார்த்தைகளில் கூறுவதானால் மில்லியன் கணக்கான ஏழை மற்றும் பட்டினி மக்களுக்கு இது சுதந்திரத்தை கொண்டு வருமா? ஓர் கிராம ஊராட்சியின் வளர்ச்சி என்பது பங்கேற்பு முறையில் உள்ள கோட்பாட்டின் மூலம் மில்லியன் கணக்கான மக்களின் பசி மற்றும் பட்டினிக்கான தீர்வு என்பது சுதந்திரமான உள்ளூர் அரசாங்கத்தின் தலைமையிலான நிர்வாகத்தினால் மட்டுமே அதுவும் பரவலாக்கப்பட்ட திட்டமிடல் செயல்முறை மூலம் திறம்பட அடைய முடியும் என்று நம்பினார்.
73-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம்
சுதந்திரத்திற்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்க அரசு முடிவு செய்தது. 1984 -89 வரை அமரர் திரு ராஜீவ் காந்தி அவர்கள் பாரத பிரதமராக இருந்தபோது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 64-வது திருத்தமாக பஞ்சாயத்து ராஜ் என்ற சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்தார் கிராம அளவில் மக்களாட்சி தத்துவத்தை கொண்டு செல்வதே இந்த “பஞ்சாயத்து ராஜ்” சட்ட திருத்தத்தின் நோக்கம் ஆகும். அச்சட்டம் மக்களவையில் வெற்றி பெற்றது ஆனால் மாநிலங்கள் அவையில் போதுமான ஆதரவு இல்லாத நிலையில் தோல்வி அடைந்தது.திரு.ராம்விலாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி 64வது சட்ட திருத்த மசோதாவில் சில மாற்றங்களை சேர்த்து 1991- 96 வரை பிரதம மந்திரி ஆக இருந்த திரு. பி. வி. நரசிம்ம ராவ் அவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 73-வது சட்ட திருத்தமாக பஞ்சாயத்து ராஜ் சட்டத்தையும் 74வது சட்ட திருத்தமாக நகர்ப்பலிகா சட்டத்தையும் கொண்டு வந்தார்.
அதனடிப்படையில் 73-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 1992-ம் ஆண்டு இயற்றப்பட்டது. 73வது சட்டத்திருத்தம் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகளையும் சட்டங்களையும் இயற்ற வேண்டும் என்று ஆணையிடுகிறது.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்-1994
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 22-04-1994 அன்று 73வது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் அமலுக்கு வந்தது. இதில் மூன்றடுக்கு உள்ளாட்சி முறை அமலுக்கு வந்து அதன்படி கீழ்க்கண்ட ஊராட்சிகள் உருவாக்கப்பட்டன.
1)கிராம ஊராட்சி
2)வட்டார ஊராட்சி
3) மாவட்ட ஊராட்சி
என மூன்றடுக்கு ஊராட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஊராட்சி என்ற பொதுப்படையான சொல் மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளுக்கு பொருந்தும்
- மூன்று அடுக்கு ஊராட்சி அமைப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக செயல்படும்.
- ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்கான இடங்கள் நிரப்பப்படும் கிராம ஊராட்சி தலைவர்கள் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார் வட்டார மற்றும் மாவட்ட ஊராட்சிகள் தலைவர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
- மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மற்றும் காலி இடம் ஏற்பட்ட இடங்ககளில் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளாட்சிப் பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படும்.
- மொத்த மக்கள் தொகை அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விகிதாசார அடிப்படையில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பதவிக்கான சுழற்சி முறையில் கூடிய இட ஒதிக்கீடு கொண்டு நிரப்படும் (சட்டபிரிவு 11 20 32 மற்றும் 52)
- மொத்த பதவி மற்றும் தலைமை பதவி இடங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு சுழற்சி முறை உடன் கூடிய கூடிய இட ஒதுக்கீடு செய்யும் முறையை கொண்டு நிரப்படும்.
- பெண்களுக்கான இட ஒதுக்கீடு 50% சதவீதமாக இருக்க வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது அரசாணை எண் 60 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நாள் 23-5-2016.
- கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் உள்ள அடக்கிய கிராம சபை என்ற அமைப்பு அமைத்தல் (சட்டப்பிரிவு 3(1))
- ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொடர்ந்து தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் என்ற தன்னாட்சி அமைப்பினை ஏற்படுத்துதல்.
- மாநில நிதி ஆதாரங்களை ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்து அளித்திட பரிந்துரை செய்யும் வகையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில நிதி ஆயத்தினை ஏற்படுத்துதல
இந்திய அரசியலமைப்பு மற்றும் மாநில பஞ்சாயத்து ராஜ் சட்டம் ஊராட்சிகளுக்கு உள்ளூர் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதிக்கான பரவலாக்கப்பட்ட திட்டமிடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.