நீலகிரி வரையாடுகள் தினம் Oct-7
வரையாடுகள் (Tahr)
உலகம் முழுவதும் மூன்று வகையான வரையாடுகள் காணப்படுகின்றன இந்தியாவில் இமாலயன் வரையாடு மற்றும் நீலகிரி வரையாடுகள் ஆகிய இரண்டு இனங்கள் இந்தியாவில் காணப்படுகின்றது. மற்றொரு வகையான அரேபியன் வரையாடு அரேபிய தீபகற்பத்தின் பாலைவனத்தில் காணப்படுகிறது. இந்த மூன்று இனங்களும் ஆசிய கண்டத்தில் காணப்படும் காட்டு ஆடுகளின் இனமாகும். ஆசிய கண்டத்தில் பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், இரான், அரேபியதீபகற்பம் போன்ற நாடுகளில் வரையாடுகள் காணப்படுகின்றன.
இந்த உயிரினங்களின் முக்கியமான பிரச்சனைகள் என்னவென்றால், இந்த இனங்கள் அனைத்தும் அழிவின் விளிம்பில் உள்ளன, மேலும் இந்தியாவில் அவற்றைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நீலகிரி வரையாடுகள் (Nilgiri tahr)
ஆசியாவில் உள்ள மூன்று வரையாடுகளின் இனங்களில் தென்னிந்தியாவில் உள்ள ஒரே இனம் நீலகிரி தஹ்ர் ஆகும். தமிழ்நாட்டின் மாநில விலங்கு நீலகிரி Nilgiri tahr (Nilgiritragus hylocrius) வரையாடு ஆகும். இந்த நீலகிரிவரையாடுகளின் முக்கியமான இருப்பிடம் தமிழநாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியான குறிப்பாக நீலகிரி ஆனைமலை மலைப்பகுதியில் இந்த நீலகிரிதஹ்ர் காணப்படுகிறது. இந்த வரையாடுகள் புல்வெளிகள் மற்றும் சோலை காடுகள் போன்ற பகுதியில் தங்களின் வாழ்விடங்களாக கொண்டுள்ளன.
நீலகிரி வரையாடுகள் தங்கள் அடர்த்தியான கருப்பு நிற ரோமங்கள் மற்றும் பெரிய வளைந்த கொம்புகளுக்கு பெயர் பெற்றவை. ஆண்களுக்கு இனங்களுக்கு மட்டுமே கொம்புகள் உள்ளன அவை 60 செமீ வரை வளரக்கூடியவை வரையாடுகள் சமூக கூட்டமாக வாழும் விலங்குகள் இனம் ஆகும் இவைகள் 12-17 வரை கொண்ட எண்ணிக்கையில் உள்ள மந்தைகளில் வாழ்கின்றன. இவைகள் புல், இலைகள் மற்றும் பழங்களை உண்ணுகின்றன.
காட்டு ஆடுகளின் இனத்திலேயே நீலகிரி வரையாடுகள் தான் மிகவும் பெரிய உடலமைப்பை கொண்டவை ஆகும். இந்தியாவில் காணப்படும் மற்றொரு காட்டாடு இனமான இமாலய வரையாடுகள் விட உருவத்தில் சற்று பெரியது இந்த நீலகிரி வரையாடு ஆகும். இதன் மற்றொரு சிறப்பு இயல்புகள் மிக உயரமான 3500முதல்4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைபாகுதியில் உள்ள செங்குத்தான பாறை பகுதியில் வசிக்கும் சிறப்பியல்புகள் கொண்டவை ஆகும். இவைகள் பெரும்பாலும் குழுக்களாக வாழும் தன்மை கொண்டவை.
டாக்டர்.டேவிடார்
1963 ஆம் ஆண்டு டாக்டர்.டேவிடார் என்ற வனவிலங்கு ஆர்வலர் நீலகிரி தாஹர் திட்டத்தை தொடங்கினார் நீலகிரி வரையாடுகள் அவற்றின் வாழ்விட இழப்பு மற்றும் வேட்டையாடுதலால் அச்சுறுத்தப்படுகின்றன இந்த இனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் அப்போது நீலகிரி மலை நிலப்பரப்பில் உள்ள பகுதிகளில் வரையாடுகளின் கணக்கெடுப்பை திரு. டேவிடார் எடுத்தார் மேலும் நீலகிரியில் சுமார் 400 நீலகிரி வரையாடுகள் இருப்பதாக அறிவித்தார் அவர் 1975-ம் ஆண்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் முழுவதும் நீலகிரி தஹர் பற்றிய விரிவான ஆய்வு நடத்தினார் மற்றும் சுமார் 2,200 வரையாடுகள் இருப்பதாக மதிப்பிட்டார் அவர் எழுதிய ‘Whispers from the wild’, ‘The Cheetal Walk-Living in the Wilderness’ and ‘The Toda and The Tahr’ என்ற புத்தகம் வரையாடுகளின் பாதுகாப்பு குறித்த அவரது சிந்தனை இருந்தது.
மனித-விலங்கு மோதலைத் தவிர்ப்பது
விலங்கியல் துறை பேராசிரியராகப் பணிபுரிந்த டேவிட், நீலகிரி தார் ஆடு குறித்த பெரிய ஆய்வை மேற்கொண்டார்.அது மட்டுமின்றி, நீலகிரியில் வாழும் மக்களுக்கு, மனித-விலங்கு மோதலைத் தவிர்ப்பது குறித்து பல்வேறு யோசனைகளை அரசுக்குத் தெரிவித்தார்.
அக்டோபர்-7 ஆம் தேதியை நீலகிரி தஹ்ர் (Nilgiri tahr) தினமாக
டேவிடார் வனவிலங்குப் பாதுகாவலர் நினைவாக கௌரவிக்கும் வகையில் அவருடைய பிறந்தநாளில் அக்டோபர்-7 ஆம் தேதியை நீலகிரி தஹ்ர் (Nilgiri tahr) தினமாக அரசு தேர்வு செய்து அந்த நாளை வரையாடுகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை
காடுகளில் 3,122 “நீலகிரி தஹர்கள்” இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக, நீலகிரி தஹ்ர் மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும்பகுதியில் வசிப்பதாக அறியப்பட்டது ஆனால் இன்று அது ஒரு சிறிய பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது மாபெரும் நீலகிரி வரையாடுகள் காப்பாற்ற எழுவோம்.
நீலகிரி தஹ்ர் திட்டத்தின் உறுப்பினர்கள், மாநில விலங்கின் பாதுகாப்பு நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரும் நாட்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளனர்
வரையாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், பல நாடுகள் அவற்றைப் பாதுகாக்க முயற்சிக்கின்றன. வாழ்விடப் பாதுகாப்பு, வேட்டையாடுவதைத் தடை செய்தல், இனப்பெருக்கத்தை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும். இவைகள் இயற்கைச் சூழலின் சமநிலையைப் பேணுவதில் சதுப்பு நிலங்கள் பாதுகாத்தல் போன்றவற்றில் முக்கியப் பங்காற்றுவதால், அவற்றைப் பாதுகாப்பது அவசியம்.