சமூக தணிக்கை Social Audit (அறிக)
சமூக தணிக்கை
தணிக்கை என்ற சொல் மிகவும் முக்கியமானது நமது குடும்பத்தில் வரவு ஏற்ற வகையில் செலவு செய்வது மிகவும் அவசியம் ஆனால் செலவு செய்ததை இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் நாங்கள் தற்போது எங்கள் குடும்பத்திற்காக ஒரு நிலத்தை வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் விலையை விசாரித்து உரிய தொகையை செலுத்தி நிலத்தை வாங்குவோம்.
நிலத்தை சரியான விலைக்கு வாங்கியிருக்கிறோமா அல்லது குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக செலவு செய்து நிலத்தை வாங்கியிருக்கிறோமா? நிலத்தின் தற்போதைய மதிப்பையும் நிலத்தை வாங்கியபோது அதன் மதிப்பையும் கணக்கிட்டு நிலத்தை வாங்குவதற்கு உரிய முறையில் பணம் செலவழித்திருக்கிறோமா என்பதைச் சரிபார்ப்பதுதான் தணிக்கை ஆகும்
தணிக்கை செய்வதன் மூலம், உங்கள் பணத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதை பற்றி ஒரு தெளிவான பார்வையை பெற முடியும், இது எதிர்காலத்தில் நிதி சார்ந்த சிறந்த முடிவுகளை எடுக்க உதவும்.
சமூக தணிக்கை இலக்குகள்
சமூகத் தணிக்கை என்பது சமூகப் பொறுப்பிற்கான அதன் இலக்குகள் அல்லது அளவுகோல்களை நிறுவனம் எவ்வளவு சிறப்பாக அடைகிறது என்பதற்கான மதிப்பீடாகும்.
1992 ஆம் ஆண்டின் 73 மற்றும் 74 வது அரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம் சமூக தணிக்கையின் கருத்து இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டது.
மாநில/மத்திய அரசுகள் செயல்படுத்தும் வளர்ச்சித் திட்டங்கள் அந்த திட்டங்ககளுக்கு வழங்கப்பட்டுள்ள நிதியானது முறையாக மக்களுக்கு அல்லது பயனாளிகளுக்கு சென்று அடைந்துள்ளதா என்று அந்த திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளிகளை கொண்டே தணிக்கை செய்வதே சமூக தணிக்கை முறையாகும்.
தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கம் (SASTA)
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சரியான செயல்பாட்டைக் கண்காணிக்கவும், மகாத்மா காந்தி தேசிய ஊரகத்தின் நிதியைப் கிராம ஊராட்சிகள் சரியாக பயன்படுத்துகின்றனவா என்பதை அறியவும் தமிழ்நாடு சமூகத் தணிக்கைச் சங்கம் தமிழ்நாடு சங்க பதிவுச் சட்டம் 1975 இன் கீழ் மாநில அரசால் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலை உறுதித் திட்டத்தை முறையாக செயல்படுத்தி, அதன் பயனாளிகளுடன் சமூக தணிக்கை நடத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு வருகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் படி (MGNREGA) ஒவ்வொரு கிராம ஊராட்சிலும் இச்சட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை/வேலைகளை மாநில அரசாங்கம் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சமூக தணிக்கை மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
சமூக தணிக்கையின்படி பயனாளிகளே தங்கள் செய்த பணிகளை தணிக்கை செய்ய கூட்டங்கள் நடத்தப்பட்டு தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்
தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கம் (SASTA) நோக்கம்
தணிக்கை விதிகள் 2011 இன் பிரிவு 3(1) இன் படி சமூக தணிக்கை அடிப்படையில் சமூக தணிக்கை வள அலுவலர்களின் வழிகாட்டுதலின் கீழ் மக்களால் (பயனாளிகள்) மூலம் மேற்கொள்ளப்படுகிறது. சமூக தணிக்கையின் நோக்கம் நிதிச் செலவை மட்டுமல்ல, திட்டத்தின் செயல்முறையையும் சமூக சமத்துவமின்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் கண்ணோட்டத்தில் ஆராய்வதாகும்.
சமூக தணிக்கை தகவல் பரிமாற்றம், கல்வி, தகவல் தொடர்பு ஆகியவற்றின் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை அதிகப்படுத்தும் வளர்ச்சி திட்டங்களின் செயல்பாடுகளை திட்டமிடுதல், பணிகளை தேர்வு செய்தல், அமல்படுத்துதல், செயல்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றில் பொதுமக்களின் பங்கேற்பிணை அதிகப்படுத்தவும் அவசியமாகிறது.
சமூகத் தணிக்கை மூலம், நிறுவனம் தன்னுடைய சமூக முயற்சிகள் பற்றிய தகவல்களை பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் இதன் மூலம் சமூக செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என்ற நோக்கில் (PMAY(G), MDM, RURBAN, 15th FC) போன்ற பிற திட்டங்களுக்கும் சமூக தணிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளது