உள்ளூர் அளவிலான நீடித்த நிலைத்த வளர்ச்சிகான கருப்பொருட்கள் (LSDG) புரிதல்
மக்கள்— செழிப்பு —அமைதி ⇒ 2030
SDG = LSDG
உலகில் உள்ள 191 நாடுகள் ஒன்றிணைந்து நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) – 17 இலக்குகள் மற்றும் 169 குறீயிடுகள் 2030 ஆம் ஆண்டுக்குள் உலகில் உள்ள அனைத்து மக்களும் அமைதி, செழிப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அடைய வேண்டும் என்பதற்காக ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகள் உருவாக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
2030ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகள் அனைத்தும் இந்த இலக்குகளை அடைய வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். தற்போதைய கரோனா பேரிடரின் போது ஏற்பட்டுள்ள பல்வேறு இடர்களைச் சரிசெய்யும் வகையில் இந்தியாவில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடு என்ற முறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை கிராம ஊராட்சி அளவில் செயல்படுத்த பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. அதன்படி பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் (MoPR) மறுசீரமைக்கபட்ட ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபியான் திட்டத்தின் (RRGSA) மூலம் SDGகளை அடைய உறுதி பூண்டுள்ளது.
localisation development sustainable goals (LSDG)
இந்தியாவில் 60 சதவிகித மக்கள் கிராமங்களில் வசித்து வருகின்றனர் எனவே அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இதை கிராம ஊராட்சி அளவில் செயல்படுத்த பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மேற்கொண்ட முயற்சிகளின் படி ஒரு வல்லுநர் குழுவை (expert committee) அமைத்தது. இக்குழு கள அளவில் குறிப்பாக கிராம ஊராட்சிகள் அளவில் இந்த 17 இலக்குகளை எவ்வாறு அடைவது என்பது குறித்து நாடு தழுவிய அளவில் ஆய்வுகளை மேற்கொண்டு. அதன் அறிக்கையை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திடம் வழங்கியது. அந்த வல்லுனர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அந்த அறிக்கையின் 2030 ஆம் ஆண்டிற்குள் 17 என்ற இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் (sustainable development goals (SDG) அவர்கள் ஒன்பது கருப்பொருள் பகுதிகளில் மாற்ற பரிந்துரைத்தனர். அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த ஒன்பது உள்ளூர்மயமாக்கல் வளர்ச்சி நிலையான இலக்குகள் (localisation development sustainable goals (LSDG) மாற்றி பரிந்துரைத்துள்ளது. அதன் படி 9 – உள்ளூர் அளவிலான கருப்பொருட்கள் (LSDG) அதற்காக உள்ளூர் குறியீடுகள் (local indicators) மற்றும் உள்ளூர் இலக்குகளை (local targets) அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்த பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மக்கள் பங்கேற்பு முறை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் திட்டமிடல் மூலம் 9-கருப் பொருட்களின் உள்ளூர இலக்குகள்(local targets), உள்ளூர் குறியீடுகளையும் (local indicators) அடைந்து உலக அளவிய நீடித்த நிலைத்த வளர்ச்சி இலக்குகளை (SDG)- 2030க்குள் அடைவதன் மூலம் சிறந்த அளவில் வளர்ச்சியை கொடுக்க முடியும்.
9 – உள்ளூர் அளவிலான கருப்பொருட்களாக (LSDG)
வறுமையில்லாத மேம்படுத்தப்பட்ட வாழ்வாதாரம் கொண்ட கிராம ஊராட்சி | 1 |
நலவாழ்வு கிராம ஊராட்சி | 2 |
குழந்தைகள் நேய கிராம ஊராட்சி | 3 |
நீரில் தன்னிறைவு அடைந்த கிராம ஊராட்சி | 4 |
தூய்மையான மற்றும் பசுமையான கிராம ஊராட்சி | 5 |
உட்கட்டமைப்பில் தன்னிறைவு அடைந்த கிராம ஊராட்சி | 6 |
சமூக நீதி மற்றும் சமூக பாதுகாப்பு உள்ள கிராம ஊராட்சி | 7 |
நல் ஆளுமை உள்ள கிராம ஊராட்சி | 8 |
மகளிர் நேய கிராம ஊராட்சி | 9 |
இந்த உள்ளூர் குறியீடுகள் (local indicators) மற்றும் உள்ளூர் இலக்குகளை (local targets) இலக்கின் மூலம் இந்தியாவில் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் மற்றும் இந்த இலக்குகளை அடைவது சாத்தியம் ஆனால் எளிதானது அல்ல. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், 2030க்குள் அனைவருக்கும் வளமான மற்றும் அமைதியான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.