தரமான கல்வி/Quality Education

அனைத்து தரப்பு மக்களை உள்ளடக்கிய தரமான சமமான கல்வியை உறுதி செய்தல் மற்றும் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை கிடைப்பதை உறுதி செயதல்

கல்வி அறிவைத் தருகிறது, கற்பனையை வளர்க்கிறது மற்றும் சுயமரியாதைக்கு வழிவகுக்கிறது. இது மனித வளர்ச்சிக்கான திறவுகோலாகும் மற்றும் வாய்ப்புகளின் உலகத்தைத் திறக்கிறது இது ஒரு முற்போக்கான ஆரோக்கியமான சமூகத்திற்கு பங்களிப்பதை நம் ஒவ்வொருவருக்கும் சாத்தியமாக்குகிறது. கற்றல் ஒவ்வொரு மனிதனுக்கும் நன்மை பயக்கும் மற்றும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

கல்வி ஒரு மனிதனை உயர்த்தும் என்பதற்கான உண்மை சம்பவத்தை உங்கள் முன் வைக்கிறேன்.

இந்த கதை சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக நடந்தது. தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறிய கிராமம் அங்கு ஒரு குடும்பத்தில் தந்தை அரசு உத்தியோகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர். அவருடைய மூத்த மகன் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்னர் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அங்கு அவர் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம் 12-ம் வகுப்பு வரை தமிழ் மொழியில் படித்து வந்தவர் அவருக்கு கல்லூரியில் சேர்ந்தவுடன் பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மொழியில் இருந்தது.

அதுவும் அவர் படித்த 12 ஆம் வகுப்பு பிரிவு அறிவியல் பாடத்தை மையமாகக் கொண்டது. கல்லூரியில் சேர்ந்த பிறகு அந்த பாடப்பிரிவில் கணிதமும் இருந்தது. கணிதம் அவர் 12 ஆம் வகுப்பில் படிக்கவில்லை ஆகவே மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்து வந்த நாம் எப்படியாவது முன்னேற வேண்டும் என்று நோக்கில் தினந்தோறும் அந்த கணித பாடத்திற்கென்று தனியாக நேரம் ஒதுக்கி அதை படித்து வந்தார். அவர் அந்த மூன்று ஆண்டு காலத்தில் அந்த கணித பாடத்தில் வெற்றியும் பெற்றார், பின்னர் மேற்படிப்புக்காக அருகில் உள்ள நகரத்திற்கு சென்றார் அங்கு அவர் தன்னுடைய மேற்படிப்பை முடித்தார் அடுத்ததாக அவர் முனைவர் பட்டத்திற்கு முயற்சி செய்தார் முனைவர் பட்டமும் படிப்பதற்கான சூழ்நிலை கிட்டியது அப்போது குடும்ப வறுமையின் காரணமாக தந்தை மிகவும் கஷ்டப்பட்டு தன் மகனுடைய வாழ்க்கை முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் முனைவர் படிப்பையும் படிக்க வைத்தார். இப்போது அவர் மகன் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் ஏழ்மை குடும்பத்திலிருந்து அரசு உத்தியோகத்தில் ஊழியராக இருந்த அந்த தந்தையின் மகன் முனைவர் பட்டம் பெற்று கல்லூரியில் பேராசிரியராக இருப்பது அந்த குடும்பத்தில் மாற்றம் ஏற்பட்டது , தற்போது அந்த மகன் சொந்த வீடு, கார் என சகல வசதிகளோடு வசித்து வருகிறார். அவர் படிக்கும் போது ஏற்பட்ட கஷ்டங்கள் கல்லூரிக்கு பணம் கட்டுவது என்றாலும் தன்னுடைய படிப்பிற்காக எவ்வாறு கடினமாக உழைத்தார் என்பது அவருடைய வாழ்க்கை தரமான கல்விக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் பல்வேறு விதமான வளர்சிகளை அடைவதற்கு பொருளாதார, சமூக-பாதுகாப்பு, சுகாதாரம், வேலை போன்ற பல்வேறு வளர்ச்சி நிலை அடைவதற்கு கல்வி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது அது மட்டும் இல்லாமல் புதிய தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் தொழில் மேம்பாடு தொழிலில் பல்வேறு புதிய நிகழ்வுகளை செய்வதற்கு கல்வி மனிதனின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

இந்தியாவில் கல்விக்கு முன்னுரிமை அளித்து 2009 ஆம் ஆண்டு இலவச கட்டாய கல்வி சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டு 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும்  கட்டாய கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டு கல்வியின் நிலையை மேம்படுத்த நிலைத்த வளர்ச்சியின் குறிக்கோள் அடைய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சனைகளை களைவதன் மூலம் பல்வேறு மக்கள் தங்களுடைய கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்வதற்கும் தரமான கல்வி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க பல்வேறு முயற்சிகளை செய்து கொண்டு வருகிறது.

Leave a Reply