வறுமை அற்ற கிராம ஊராட்சி

“எல்லா இடங்களிலும் அதன் அனைத்து வடிவங்களிலும் வறுமையை ஒழிக்க வேண்டும்”

கொரோனா வைரஸ் தாக்கம் 

2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகளில் வாழும் 90 மில்லியன் மக்கள் முதல் முறையாக வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர்.இந்நிலை நீடித்தால் உலக மக்கள் தொகையில் 7 சதவீதம் பேர் மீண்டும் வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது  இதன் காரணமாக 2021 ஆம் ஆண்டில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்கை கிராமப்புறங்களில் செயல்படுத்துவதற்கான அறிக்கையைத் தயாரிக்க ஒரு நிபுணர் குழுவை உருவாக்கியது அந்த நிபுணர் குழு 17 நிலையான வளர்ச்சி இலக்கை ஒன்பது கருப்பொருள்களாக தொகுத்தது கிராமப்புறங்களில் அவற்றை செயல்படுத்த அறிக்கை சமர்பித்தது அந்த அறிக்கையின்படி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முதல் கருபொருள் வறுமையில்லா கிராம ஊராட்சி என்ற கருப்பொருளை கிராம ஊராட்சி செயல்படுத்த வேண்டும் எனவே பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கருப்பொருளை செயல்படுத்த பல்வேறு பயிற்சி திட்டங்களை உருவாக்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் உள்ள கிட்டத்தட்ட 700 மில்லியன் மக்கள் $2.15க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள் என்று ஐ . நா வின் முன்னேற்ற அறிக்கை  சொல்கிறது.

வறுமையில்லா கிராமம்

வறுமையில்லா கிராமம் என்பது அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையும் சமூகநிதியையும் சமூகப்பாதுகாப்பையும் உறுதிசெய்து பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதாகும். அங்கு உள்ள மக்கள் அனைவரும்  யாரும் வறுமைக்குத் மீண்டும் திரும்புவதில்லை மற்றும் அனைத்து மக்களுக்கும் மேம்பட்ட வாழ்வாதாரத்துடன் வளர்ச்சி மற்றும் செழிப்பு கொண்ட கிராமமாக மாற்ற நிலையை உருவாக்குதல்

வறுமை என்பது பொருளாதார, சமூக மற்றும் பாலின சமத்துவமின்மையில் முக்கிய பங்கு வகிக்கும் பல பரிமாண நிகழ்வு ஆகும். வறுமை சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கிறது. வறுமை மற்றும் வேலையின்மை பிரச்சனைகள் ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை.

வறுமைக்கும் இயலாமைக்கும் இடையே மிகவும் வலுவான இணைப்பு உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு, மோசமான சுகாதாரம்,  கல்வியறிவின்மை, மோசமான ஊட்டச்சத்து நிலை, குறைந்த நோய்த்தடுப்பு பாதுகாப்புகள், குறைந்த எடை பிறக்கும் குழந்தைகள் அதிக வேலையின்மை குறைந்த தொழில் இயக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் காட்டுகின்றன.

கல்வி, நலவாழ்வு, வீட்டுவசதி, சுகாதாரவசதி,சமூக பாதுகாப்பு வேலைவாய்ப்பு தொழில்பயிற்சி தொழில் தொடங்குவதற்கான அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது வேலை வாய்ப்புகள் சூழ்நிலையை உருவாக்குதல் விவசாய உற்பத்தியை மேம்படுத்துவது  உணவு உற்பத்தியை பெருக்குவதில் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய கிராம அளவில் திட்டங்களை செயல்படுத்தப்பட வேண்டும்.

Leave a Reply