நெல்லை to சென்னை வந்தே பாரத் ரயில்

பெரம்பூர் ICF ரயில் பெட்டி தொழிற்சாலை

சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ICF) அக்டோபர் 2, 1955 அன்று நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையானது இந்தியாவில் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும் மேலும் இது நாட்டில் ரயில் சேவையை அதிகரிக்கும் உற்பத்தி செய்யப்படும் அலகுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ICF தொழிற்சாலை ஆண்டுதோறும் 4,000 பெட்டிகளை உற்பத்தி செய்கிறது

சென்னையில் அமைந்துள்ள பெரம்பூர் ICF ரயில் பெட்டி தொழிற்சாலை மிக நீண்ட காலமாக பெட்டிகள் மற்றும் இன்ஜின்களை உற்பத்தி செய்யும் மத்திய அரசு நிறுவனமாகும். மேலும் இந்தியாவில் பல பயணிகள் பயணிக்கும் ரயில் பெட்டிகள் இங்கு தயாரிக்கப்பட்டவை.

சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ICF) வந்தே பாரத் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்து வந்தே பாரத் விரைவு ரயிலை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களை அதிநவீன வசதிகளுடன் இணைக்கும் வகையில் மணிக்கு 100 முதல் 150 கிமீ வேகத்தில் பயணிக்கும் வகையில் 8 பெட்டிகளை கொண்ட முழுவதும் குளிரூட்டி வசதிகளை கொண்டு அனைத்து வசதிகளையும் வகையில் இருக்கும்மாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் விரைவு ரயில் 

சற்று முன் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் நெல்லை-சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத்  முன் பதிவுகள் இருக்கைகள் அனைத்தும் வருகின்ற  அக்டோபர் 02ம் தேதி வரை   முழுவதும் முன்  பதிவு செய்யபட்டுள்ளது. 

இதன் கூட  தொடங்கி வைக்கபட்ட மற்ற வந்தே பாரத் ரயில்களை காட்டிலும் தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத்கக்கு நல்ல வரவேறப்பு காணப்படுகிறது. 

பயண கட்டணம்

திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 8 வழி தடங்ககளில்  நிறுத்தப்படுகிறது. அதிகபட்டச கட்டணம் திருநெல்வேலி நகரத்தில் இருந்து சென்னைக்கு-3005 ரூபாய் வசூலிக்கபடுகிறது. அதே போல சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வரும் போது-3055 ரூபாய் வசூலிக்கபடுகிறது இந்த பயண கட்டணம் உணவுக்கான கட்டணம்  சேர்த்து வங்கப்படுகிறது.   

பயண நேரம் 

திருநெல்வேலியில் நகரத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை ரயில் நிலையத்திற்கு சென்றடையும்.

விருதுநகர் (காலை 7.13) மதுரை (காலை 7.50) திண்டுக்கல் (காலை 8.40) திருச்சி (காலை 9.50) மற்றும் விழுப்புரம் (காலை 11.54) மற்றும் தாம்பரம் (மதியம் 1.13 மணி) ஆகிய  நகரத்தில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் செவ்வாய்க்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படும்.

திருச்சி மற்றும் மதுரையில் ரயில் நிலையங்களில்  5 நிமிடங்கள் நின்று செல்லும் மற்ற நிறுத்தங்களில் உள்ள ரயில் நிலையங்களில் இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும் 

சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும். இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். 

தாம்பரம் (மதியம் 3.18 மணி) விழுப்புரம் (மாலை 4.39 மணி) திருச்சி (மாலை 6.40 மணி) திண்டுக்கல் (இரவு 7.56 மணி) மதுரை (இரவு 8.40 மணி), விருதுநகர் (இரவு 9.13 மணி) உள்ள ரயில் நிலையங்களில்  நின்று செல்லும்.

fare detil

மேற்கண்ட தகவல் தெற்க்கு ரயில்வே மற்றும் IRTC இணைய தளம் மூலம் பெறப்பட்டது

 

Leave a Reply