Namma Gram Sabhai App (நம்ம கிராம சபை செயலி) ஓர் பார்வை

நம்ம கிராம சபை செயலி

தமிழகத்தில் ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் கூட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த நிகழ்வுகளைப் பதிவேற்றுவதற்காக இந்தப் பயன்பாடு உருவாக்கப்பட்டது

செயற்கை நுண்ணறிவு AI

இன்று உலகம் தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது இப்போதெல்லாம் செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளும் உள்ளே வந்துவிட்டது கணினிமயமாக்கப்பட்ட இந்த உலகில் பஞ்சாயத்து ராஜ் துறையும் கிராம மக்களின் முன்னேற்றத்திற்கான தொழில்நுட்பத்தில் நுழைவதில் கவனம் செலுத்துகிறது அதன் அடிப்படையில் நம்ம கிராம சபா செயலி என்பது தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் குறிப்பாக ஊரக வளர்ச்சித் துறைக்காக வடிவமைக்கப்பட்ட மொபைல் அப்ளிகேஷன் ஆகும். 

கைபேசி செயலி

நம்ம கிராம சபை என்கிற புதிய கைபேசி செயலி கிராம சபை நிகழ்வுகளை கண்காணித்திடும் பொருட்டு இத்துறையின் மூலம் இவ்வாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த செயலி இயக்குவதற்கு எளிதாகவும் கீழ்காணும் செயல்பாடுகளை பதிவு செய்திடுவோம்  இந்த  கிராம சபா செயலி பயன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்ய வேண்டிய தகவல்கள்

அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் ஆறு நாட்கள் அதாவது ஜனவரி-26 குடியரசு தினம் மார்ச்-22 உலக தண்ணீர் தினம் மே-1 தொழிலாளர் தினம் ஆகஸ்ட் – 15 சுதந்திர தினம் அக்-2 காந்தி பிறந்த நாள் நவம்பர்-1 உள்ளாட்சி அமைப்பு தினம். ஆகிய நாட்களில் நடத்தபடுகிறது 

  • கிராம சபையின் குறைவெண் வரம்பு
  • கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
  • கிராம சபையில் பங்கேற்ற பற்றாளர்களின் விவரங்கள்
  • கிராமசபை நடைபெறும் நேரம்
  • கலந்து கொண்ட துறை அலுவலர்களின் விவரம்
  • கிராம சபை நடைபெற்ற புகைப்பட  ஆதாரங்கள்

ஊராட்சி நிறுவனங்களின் திறனை வலுப்படுத்தவும் கிராம நிர்வாகத்தின் மூலம் கிராம மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும், கிராம சபையின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளவும் கிராம சபைகளில் நடைபெறும் நிகழ்வுகளைப் பதிவுசெய்து அங்கு நடைபெறும் நிகழ்வுகளின் புகைப்படங்களைப் பதிவேற்றவும் கூட்டத்தின் போது பதிவுசெய்யப்பட்ட பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் எந்த அலுவலர் கலந்து கொண்டார் பிறத்துறை அலுவலர்கள் எத்தனை பேர் கலந்து போன்ற கொண்டார் விவரங்ககள்  இந்த இணையதளத்தில் பதிவுசெய்யவும். இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமசபை நிகழ்வுகளை நிகழ் நேரத்தில் கண்காணித்திடவும் அதில் கலந்து கொண்ட அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் குறித்து அறிந்து கொள்ளவும்   இந்த  செயலி பயனுள்ளதாக இருக்கும்.

 

Leave a Reply