ஜூலை 22-சர்வதேச மூளை தினம்

உலக மூளை தினம்

மனித மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் மனித உடலில் நரம்பியல் கோளாறுகளால் ஏற்படும் இயலாமை மற்றும் குறைபாடுகளைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உலக நரம்பியல் கூட்டமைப்பு ஆண்டுதோறும் ஜூலை 22ஆம் தேதி உலக மூளை தினம் கொண்டாடப்படுகிறது.

2016 ஆம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டத்தின்படி, மூளை மற்றும் நரம்புகளின் கோளாறுகளால் 14 வகையான குறைபாடுகள் மற்றும் ஏற்படுகின்றன. எனவே இந்த உலக மூளை தினத்தில் அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

மனித மூளை

மைய நரம்பு மண்டலம் மூளை, முதுகுத் தண்டு ஆகியவற்றை உள்ளடக்கியது மற்றும் செய்திகளைச் செயலாக்குதல், கட்டுப்படுத்துதல் மற்றும் கட்டளையிடுதல் போன்ற செயல்களின் மைய உறுப்பு மூளை .

மனித மூளை மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது

  1. முன் மூளை
  2. பின் மூளை
  3. நடுமூளை

பெருமூளை புறணி

மூளையின் பெரும் பகுதி பெருமூளை பெருமூளை புறணி இது நரம்பு செல் கொண்ட பல அடுக்கு சாம்பல் நிற செல்களால் ஆனது. பெருமூளை புறணி பகுதிகள் அதிகப்படியான மடிப்புகளும் பல சுருக்கங்களும் கொண்டு காணப்படும்.
பெருமூளை புறணி மூன்று முக்கிய பகுதிகள்

  • இயக்க பகுதிகள்
  • உணர்வு பகுதிகள்
  • இணைப்பு பகுதிகள் (உணர்வு, இயக்கம் பகுதி அல்லாதவை)

இயக்கப் பகுதிகள்

இயக்கப் பகுதிகள் என்பவை பெருமூளையின் கட்டளை மற்றும் ஒழுங்குபடுத்தும் பகுதி நம் உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்களை கட்டுப்படுத்த கட்டளைகளை இங்கிருந்துதான் தோன்றுகின்றன இச்சை செயல்களும் இங்கிருந்தே தொடங்குகின்றன.

உணர்வு பகுதி

உறுப்புகள் உணர்வு தூண்டல்களை உணர்ச்சி நரம்பின் வழியே பெறப்படும் இடமாகும்

இணைப்பு பகுதி

பல்வேறு உணர்வுகளுக்கு இடையே தொடர்பு நினைவாற்றல், தகவல் பரிமாற்றம் முதலியன சிக்கலான பணிகளுக்கு பொறுப்பேற்கும் பகுதி இணைப்பு பகுதியா ஆகும்.

பெருமூளையின் பணிகள்

உணர்வு, அறிவுக்கூர்மை, நினைவாற்றல், கற்பனைத் திறன், காரண காரியமாய் பகுத்துஅறிதல் முதல்வற்றின் இருப்படியும் இருப்பிடமாக இருக்கிறது பெருமூளையின் குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட பணிகளை செய்வதோடு தொடர்பையும் ஏற்படுத்துகின்றன இவ்வாறு கேட்டல், பார்த்தல்,சுவை அறிதல், நுகர்தல், பேசுதல், போன்றவர்களுக்கு தனித்தனியே மையங்கள் உள்ளன.

தாலமஸ்

தாலமஸ் என்ற அமைப்பு பெருமூளை சுற்றி சூழ்ந்துள்ளது உணர்வு மற்றும் இயக்க உணர்வுகளை கடத்தும் முக்கிய பணியை இது செய்கிறது.

ஹைபோதாலமஸ்

இது தாலமஸ் அடிபகுதியில் என்று அமைந்துள்ளது. இது உடல் வெப்பநிலை, உண்ணுதல் நீர்ப்பருக்குதல் போன்றவற்றிற்கான உந்துதல், பாலுணர்வு நடத்தை ஒழுங்குபடுத்துதல், கிளர்ச்சி, சினம், பயம், தூண்டுதல், போன்ற மனவளர்ச்சி செயல்பாடுகளை வெளிப்பாடுகளை கட்டுப்படுத்தும் செயல்களை செய்கிறது.

நடுமூளை

இது பல்வேறு அனிச்சை செயல்களையும்,பார்வையின் சார்பு இயக்கத்தையும் கட்டுப்படுத்தல் ஒழுங்குப்படுத்துதல் போன்ற செயல்களை செய்கிறது. சிறுமூளை நடத்தல் அல்லது ஓடுதல் போன்ற இயங்கு தசைகளின் இயக்கங்களை ஒழுங்குபடுத்துகிறது.

ஃபானஸ்

இது பெருமூளையில் இருந்து சிறு மூளைக்கு செய்திகளை கடத்துகிறது. இதில் அமைந்துள்ள பிற மையங்கள் உறக்கம்,சுவாசத்திற்கான ஆகும்.

முகுளம்

தண்டுவத்தோடு இணையும் மூளையின் கடைசி பகுதி முகமாகும் மேலும் மற்றும் கீழிறங்கும் நரம்பு பாதைகளை ஒருங்கிணைக்கும் வழித்தடமாக முகுளம் செயலாற்றுகிறது. தண்டுவடத்தோடு இணையும் மூளையின் கடைசி பகுதி முகுளம் ஆகும்.மேலேறும் மற்றும் கீழ் இறங்கும் நரம்பு பாதைகளை ஒருங்கிணைக்கும் வழித்தடமாக முகுளம் செயலாற்றுகிறது இதயத்துடிப்பு, ரத்தக் குழல்கள் சுருக்கம், மூச்சு விடுதல் போன்ற செயல்களை ஒழுங்குபடுத்தும் பல்வேறு அனிச்சை செயல்களின் மையமாக முகுளம் செயல்படுகிறது.

தண்டுவடம்

மூளையின் தொடர்ச்சியான குழல் போன்ற அமைப்பு தண்டுவடம் ஆகும்.விதியையும் நரம்பு தூண்டல்களுக்கு கடத்துவதாகவும் அனிச்சை செயல்களின் மையமாக தண்டுவடம் செயலாற்றுகிறது.மூலையில் இருந்து 12 இணைக்கபால நரம்புகள் உருவாகின்றன கபால நரம்புகள் உணர்ச்சி நரம்புகளாக செயல்படுகின்றன. தண்டுவட நரம்புகள் 31இணை நரம்புகள் உருவாக்குகின்றன ஒவ்வொரு தண்டுவட நரம்பும் உணர்ச்சி வேர்களையும் இயக்கவியல்களையும் கொண்டுள்ளது. எனவே அனைத்து தண்டுவட நரம்புகள் கலப்பு நரம்புகளாக கருதப்படுகின்றது.

மூளைக் கோளாறுகள்

நம் உடலின் அனைத்து முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்துகின்றன இவ்வாறு மூளை நரம்பு மண்டலம் இணைந்து மனிதனுடைய சிபியூவாக செயல்படுகிறது. மூளைக் கோளாறுகள் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 15 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்கள் உட்பட யாரையும் பாதிக்கலாம். பல்வேறு வகையான மூளைக் கோளாறுகளுக்கான ஆபத்து காரணிகள் வேறுபடுகின்றன. மூளைக் கட்டிகள் எந்த வயதினரையும் பாதிக்கலாம். உங்கள் தனிப்பட்ட விபத்து, ஆபத்து உங்கள் மரபணு கோளாறுகள் மற்றும் கதிர்வீச்சு வயதான மற்றும் குடும்ப வரலாறு போன்ற சுற்றுச்சூழல் ஆபத்து ஆகியவை நரம்பியக்கடத்தல் நோய்களுக்கான மிக முக்கியமான ஆபத்து காரணிகளாகும், அவற்றில் மிகவும் பொதுவானவை மனநல கோளாறுகள்.

2016 – மாற்றுத்திறனாளி உரிமை சட்டம்

2016 ஆம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டத்தின்படி, மூளை மற்றும் நரம்புகளின் கோளாறுகளால் 14 வகையான குறைபாடுகள் ஏற்படுகின்றன. எனவே இந்த உலக மூளை தினத்தில் அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

  • அறிவுசார் குறைபாடு -(Intellectual Disability)
  • மனநோய்- (Mental Illness)
  • புற உலக சிந்தனையற்றோர்- (Autism Spectrum Disorder)
  • மூளை முடக்கு வாதம் –  (Cerebral Palsy)
  • தசைநார் சிதைவு -(Muscular Dystrophy)
  • நாள்பட்ட நரம்பியல் குறைபாடுகள்- (Chronic Neurological conditions)
  • குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகள்- (Specific Learning Disabilities)
  • பல வகை ஸ்களீரோசிஸ்- (Multiple Sclerosis)
  • பேச்சு மற்றும் மொழி குறைபாடு -(Speech and Language disability)
  • தலசீமியா- (Thalassemia)
  • ஹீமோபிலியா- (Hemophilia)
  • அரிவாள் செல் நோய்- (Sickle Cell disease)
  • காது கேளாதோர்/ பார்வை  உட்பட பல குறைபாடுகள்- (Multiple Disabilities including deaf-blindness)
  • பார்கின்சன் நோய்- (Parkinson’s disease)

பெருமூளையின் குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் சேதம் அந்த பகுதிக்கான பணிகளை செய்ய இயலாத நிறைய ஏற்படும்.

தீர்வு

மூளைக் கோளாறின் வகை மற்றும் தீவிரத்தன்மையைப் பொறுத்து, பெருமூளை வாதம் உள்ளவர்கள் மருந்து மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்த முடியும். உதாரணமாக, மனநல கோளாறுகள் உள்ளவர்கள் தகுந்த சிகிச்சையுடன் தரமான வாழ்க்கையை வாழ முடியும்.
சில மூளைக் கோளாறுகளுக்கு சிகிச்சை இல்லை. இந்த நிலைமைகள் உள்ளவர்களுக்கு அவர்களின் நடத்தை, மன திறன்கள் அல்லது ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேம்படுத்த உதவுவதன் மூலம் சிகிச்சை மையங்கள் நோயைக் கட்டுப்படுத்தவும், முடிந்தவரை தீவிரமடையாமல் இருக்கவும் உதவுகின்றன.

Leave a Reply