குழந்தை திருமணத்தின் தாக்கம்/ Impact of child marriage

குழந்தை திருமணம்

என்னுடைய குழந்தை திருமண நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட என் கதையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் நான் பராமரிப்பு இல்லத்திலிருந்து வீடு திரும்பிய பிறகு என் குடும்ப உறுப்பினர்கள் யாரும் என்னிடம் பேசவில்லை. நான் மிகவும் தனிமையாக உணர்ந்தேன் என்னால் மேற்கொண்டு பள்ளிக்கூடம் செல்ல முடியவில்லை அதனால் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர நான் தற்போது பக்கத்து ஊரில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறேன்.

இதற்கு உதாரணம் ஒரு உண்மை சம்பவம்

தமிழகத்தின் மிக முக்கியமான ரயில்வே ஜங்ஷனில் 16 வயது சிறுமி சுற்றித் திரிந்த நிலையில், குழந்தையின் செயல்பாட்டை ரயில் நிலையத்தில் இருந்த குழந்தைகள் நல அலுவலர் கவனித்தார். குழந்தை எங்கே போவது என்று தெரியாமல் அலைந்தது. இதைப் பார்த்த குழந்தைகள் நல அலுவலர், நேராக குழந்தையிடம் சென்று குழந்தை குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

அந்த சிறுமி தன்னுடைய பெயர் வேண்டா என்றும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நான் தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து வருகிறேன் என்றும் கூறினார். எனது தந்தை ஒரு விவசாய கூலித் தொழிலாளி நாங்கள் ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் எனது சகோதர சகோதரிகளுடன் ஒரு குடிசையில் வசிக்கிறோம். என்று கூறினாள்

சிறுமி தன்னுடைய கதையை விவரித்தார்

நான் தற்பொழுது பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டு வருகிறேன் எனக்கு வீட்டில் திருமணம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அது பிடிக்காமல் நான் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன் என்று கூறினாள். அவள் மேலும் கூறினாள்

பள்ளிக்கு செல்லும் போது

நான் 11 ஆம் வகுப்பு படித்து வருகின்றேன் நான் எனது நண்பர்களுடன் தினமும் பள்ளிக்கு செல்வேன். கடந்த இரண்டு மாதங்களாக பள்ளிக்குச் செல்லும் போது எனது தூரத்து உறவினர் என்னைப் பின்தொடர்ந்து வந்தார்.அவர்  வருவதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.அவர் வேறு வேலை விஷயமாக வருகிறார்  என்று நினைத்து அமைதியாக இருந்தேன். அவர் என்னை விட 10 வயது மூத்தவர்.  ஒரு நாள் திடீரென்று என் முன் வந்து நான் உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார். திடீரென என் முன்னாள் வந்து அவர் அப்படி சொன்னது எனக்கு ஒரு பயம் கலந்த பதற்றத்தை உண்டாக்கியது. நான் என் நண்பர்களை பார்த்து வாருங்கள் போகலாம் என்று கூறி அவரிடம் ஏதும் பதில் சொல்லாமல் வந்துவிட்டேன்.

அப்பாவின் சம்மதம்

அடுத்த வாரம் அவர் தனது உறவினர்களுடன் வந்து என் தந்தையிடம் உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் நான் அவரை விரும்புகிறேன் என்று கேட்டார். என் அப்பாவும் என்னிடம் எவ்வித சம்மதமும் கேட்காமல் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு சம்மதம் தெரிவித்தார். இது எனக்கு பெரிய  அதிர்ச்சியாக இருந்தது என்னால் அந்த நேரத்தில் என் தந்தையை எதிர்த்து என்னால் எந்த பதிலும் கூற இயலவில்லை

நான் எதிர்ப்பு தெரிவித்தேன்

அடுத்த நாள் என் தந்தையிடம் என்னுடைய எதிர்ப்பை தெரிவித்தேன் நான் மேற்கொண்டு படிக்க வேண்டும் இப்போது எனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறினேன். ஆனால் என் தந்தை என்னுடைய முடிவை ஏற்க மறுத்து விட்டார் மற்றும் என் அம்மா  முதற்கொண்டு என் அப்பாவின் கருத்துக்கு சம்மதம் தெரிவித்தார்கள்.என் மனதை மாற்றுவதற்கு என் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர. ஆனால் நான் பிடிவாதமாக எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்று கூறிவிட்டேன் இதனால் என் குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் யாரும் என்னிடம் பேசுவதில்லை.

திருமண ஏற்பாடுகள்

எனது திருமண ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடந்தன. நான் என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் சிரமப்பட்டேன். மேற்கொண்டு படித்தால் என் படிப்புக்கு ஏற்ற மாப்பிள்ளையை எப்படி தேடுவது, கல்யாண செலவு தம்பி தங்கைகளின் படிப்பு அவர்களின் வாழ்க்கையைப் பற்றி சிந்தனை அவர்களுக்கு மேலோங்கி இருந்ததால் என்னுடைய வாழ்க்கையை பற்றி ஒரு புரிதலும் இல்லாமல் நான் மிகவும் கஷ்டமான நிலைக்கு தள்ளபட்டேன்.

வீட்டை விட்டு வெளியேறுதல் 

நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே போனது நான் பல பிரச்சனைகளை சந்தித்தேன். என் பெற்றோர் என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய முயன்றனர். அப்போது திடீரென வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து ரயிலில் இங்கு வந்தேன். நான் இந்த ரயில் நிலையத்தில் இறங்கி எங்கே போவது என்று தெரியாமல் இருந்தபோது, ​​குழந்தைகள் நல அலுவலர் என்னைக் கவனித்தபோது, ​​நீங்கள் யார்? ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டார். அப்போது என்னால் பேச முடியவில்லை.

பராமரிப்பு இல்லம்

அதன் பிறகு எனது பிரச்சனைகளை அதிகாரி முன் விளக்கினேன். அனைத்து விசாரணைகளுக்கும் பிறகு அந்த அதிகாரி என்னை பராமரிப்பு இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அவள்  இரண்டு மாதங்கள் பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருந்தாள்,

மீண்டும் பிரச்சனைகள்

வேண்டா  பெற்றோரிடம் செல்ல சம்மதித்தாள் பெற்றோர் வந்து  அழைத்துச் சென்றனர் வீட்டிற்கு சென்றதும் பெற்றோர் உறவினர்கள் யாரும் இவளிடம் பேசவில்லை பள்ளிக்கு சென்றதால் அங்கும் தனிமைப்படுத்தப்பட்டாள்.

துணிக்கடையில் வேலை

அவள் பள்ளிப் படிப்பைத் தொடராமல் பக்கத்து ஊருக்கு துணிக்கடையில் வேலைக்குச் சென்றாள்.மேலும்  என் வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இல்லாமல் இருந்தது. இதுபோன்ற குழந்தை திருமணங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.

முடிவுரை

வேண்டா போன்ற பெண் குழந்தைகளுக்கு இது போன்ற பிரச்சனைகள் தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது அவர்களின் சமூக மற்றும் குடும்ப பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கபெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களைக் குறைத்தல் குழந்தைத் திருமணத்தைத் தடுப்பது மற்றும் அரசியல், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சமூகம் சார்ந்த அமைப்புகளில் அனைத்து மட்டங்களிலும் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்தல். பாலின பாகுபாடு தடுப்பு இருபால் குழந்தைகளுக்கு தரமான கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குதல். பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல். தீங்கு விளைவிக்கும் போதைப்பொருள் பயன்பாடு தடுப்பு. குழந்தைகளை நேய மற்றும் பெண்கள் நேய கிராம  மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்

Leave a Reply