சுற்றுச்சூழல் பிரச்சனைகள்(Environmental issues) அறிவோம்

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் பூமி மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான அனைத்து சூழல் அமைப்புகளை கொண்டுள்ளது. இந்த சூழல் அமைப்பு அந்தந்த பகுதியில் காணப்படும் உயிரினங்கள் வாழ அனைத்து வளங்களையும் கொண்டுள்ளது எடுத்துக்காட்டாக கடல் சூழ்நிலை அமைப்பில் சிறிய மீன் முதல் பெரிய மீன் வரை ஆமைகள், நண்டுகள், தாவரங்கள் போன்றவை வாழ கடலுக்கு மேலேயும் கடலுக்கு அடியிலும் சூழல் அமைப்பை கொண்டுள்ளது இதுவே சூழல் அமைப்பா ஆகும். இந்த சூழல் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களால் சூழல் பிரச்சனைகள் ஏற்படுகின்றனன இதனால் உணவு சங்கிலியில் இடம் பெற்றுள்ள உயிரினங்கள் இடையே பிரச்சினை ஏற்படும் போது ஒரு உயிரினத்தின் அதிகப்படியான வளர்ச்சியும் ஒரு உயிரினத்தின் குறைவான வளர்ச்சியும் காணப்படுகிறது. இதனால் பூமி சூழலில் பன்முகத்தன்மை குறைந்து சுழல் அமைப்பில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன

சூழல் பிரச்சினைகள்

சுற்றுச்சூழல் என்ற சொல் ஏன் உலகளவில் பேசப்படுகிறது? இந்த வார்த்தை அவ்வளவு முக்கியமா? இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான பிரச்சினை. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் அதை பற்றி நாம் ஏன் பேச வேண்டும்? இன்றைய காலகட்டத்தில், மக்கள் தொகை பெருக்கம் மற்றும் தொழில்மயமாக்கல் ஆகிய இரண்டும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு காரணம். இத்தகைய பிரச்சனைகள் அழிவு, மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற நேரடி தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

நாம் சுவாசிக்கும் காற்றில் இருந்து உடுக்கும் உடை, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் என எண்ணற்ற வளங்களை இயற்கை நமக்கு அளித்துள்ளது.இன்று நாம் வாழும் உலகில் திடீர் வெள்ளம், வெப்ப அலைகள் கனமழை மற்றும் நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுவதற்கு என்ன காரணம்?

காலநிலை மாற்றத்தின் காரணம்

காலநிலை மாற்றம் என்பது வெப்பநிலை மற்றும் வானிலை முறைகளில் நீண்ட கால மாற்றங்களைக் குறிக்கிறது, சூரியனின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது பெரிய எரிமலை வெடிப்புகள் காரணமாக இத்தகைய மாற்றங்கள் இயற்கையாக இருக்கலாம். ஆனால் மனித நடவடிக்கைகளால் ஏற்படும் காலநிலை மாற்றம் 18 ஆம் நூற்றாண்டிலிருந்து ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது.

சுற்று சூழல் மாசடைதல்

  1. சூழல் பிரச்சினைகள்
  2. காற்று மாசடைதல்
  3. நீர் மாசடைதல்
  4. நிலம் மாசடைதல்
  5. ஒலியினால் ஏற்படும் மாசு,
  6. உயிரி மருத்துவ கழிவுகளால் ஏற்படும் மாசுகள்,
  7. மின்னியல் கழிவுகளால் ஏற்படும் மாசுகள்,
  8. சுரங்கம் தோண்டுவதால் ஏற்படும் மாசுக்கள்
    இவைகள் தீங்கு விளைவிக்கக் கூடிய தாக்கங்களை பூமியில் வாழும் உயிரினங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

காற்று மாசடைதல்

கார்பன் புகை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது இதற்கு முக்கிய காரணம் 70 சதவீதம் மோட்டார் வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள் ஆகும் . நைட்ரஜன் ஆக்சைடு, கந்த டை ஆக்சைட், கார்பன் மோனாக்சைடு போன்ற தீங்கு விளைவு கூடிய தீங்கு விளைவிக்க கூடிய நச்சு வாயுக்கள் வெளியேறுகின்றன. மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 2200 முறை 16 கிலோ கிராம் எடையுள்ள காற்றை சுவாசிக்கிறன் காற்றில் உள்ள மாசுகளை சுவாசிப்பதன் மூலம் அவனுக்கு பல்வேறு சுவாச நுரையீரல் பாதிப்புகள் ஏற்படுகின்ற

நீர் மாசடைதல்

உலக சுகாதார நிறுவனம் அறிக்கையின் படி 70% நோய்கள் ஏற்படுவதற்கு அசுத்த நீரே காரணம் என தெரிவிக்கிறது. அதிகமாக நீர் மாசடைவதால் ஏற்படும் பாதிப்புகள் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது 73 சதவீதம் நீர் சூழ்ந்த பகுதியாக இந்த பூமி இருந்தாலும் மனிதன் குடிப்பதற்கு இரண்டு சதவீதம் நீரே உள்ளது இதில் எத்தனை சதவீதம் நீர் மாசடைந்துள்ளது என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் நீர் மாசடைவதற்கு காரணம் மனிதனுடைய  செயல்பாடுகளே.

நிலம் மாசடைதல்

உலகமும் முழுவதும் இருக்கின்ற விவசாயிகள் தங்கள் விளைவிக்கின்ற பொருட்கள் நல்ல விளைச்சலை தருவதற்கு விவசாய நிலங்களை இரசாயன உரங்களை பயன்படுத்துகின்றனர் நிலம் மாசடைவதற்கு இது ஒரு முக்கிய காரணம் இதனால் நிலம் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது இதனால் நிலத்தில் வாழ்கின்ற உயிரினங்கள் இருப்பதற்கான சூழ்நிலை ஏற்படுகிறது நிலம் மாசு அடைவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து பல்வேறு காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

மின்னியல் கழிவுகளால் ஏற்படும் மாசுகள்

தற்போது மிகப்பெரிய பிரச்சனைகளை மின்னணுவியல் கழிவுகளை தான் தொலைபேசி, கணினி, குளிர்சாதன பெட்டிகள் போன்றவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் போது அவற்றை மறு சுழற்சி செய்யாமல் அப்புறப்படுத்துவதால், ஏற்படுகின்ற மின்னினியல் மாசு பெருமளவில் உலகளவில் அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது இந்த கழிவுகளை கடலில் கொட்டுவதால் கடலில் வாழும் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

புவி வெப்பமடைதல்

நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதன் மூலம். இது பசுமை இல்ல வாயுக்கள் எனப்படும் வாயுக்களின் உமிழ்வை உருவாக்குகிறது,அவை பூமியைச் சுற்றி ஒரு போர்வை போல செயல்படுகின்றன சூரியனின் வெப்பத்தைத் தடுக்கின்றன மற்றும் வெப்பநிலையை அதிகரிக்கின்றன

பசுமை வீடு வாயுக்கள் என அழைக்கப்படும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன்,  போன்றவற்றால் வளிமண்டலத்தில் வெப்ப தாக்கம்  அதிகரித்துக் கொண்டு வருகிறது.   இதனால் பருவ நிலையில்  மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இந்தியாவில் பெரும்பாலான சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு அதிக மக்கள் தொகையே காரணமாகும்.  இதனை நாம் சரிசெய்ய சுற்றுச்சூழலை பாதுகாத்து சுகாதாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றால் திறமையான சுற்றுச் சூழலோடு இணைந்து செயற்படுகின்ற தொழில்  நுட்பத்தினை பயன்படுத்தப்பட வேண்டும்.

Leave a Reply