குழந்தை

குழந்தைகளின் வயது 

உலக நாடுகள் பல்வேறு சமூக மற்றும் பண்பாடு  காரணிகளின் அடிப்படையில் குழந்தைகளின் வயதை நிர்ணயம் செய்து கொண்டிருந்த நேரத்தில்  மருத்துவம், சமூகவியல், உளவியல், கல்வி போன்ற பல்வேறு துறைகளில் நடத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சியின் மூலம் குழந்தையின் வயது எப்போது தொடங்குகிறது என்ற கருத்து தீர்மானிக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள குழந்தைகள் சமூக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் பருவ வயதை அடைந்த பெண் குழந்தையை பெண்களாகவும், அரும்பு மீசையை வளர தொடங்கிய சிறுவர்கள் இளைஞர்களாகவும் வரையறுக்கப்படுகிறார்கள்.

குழந்தை உரிமைகள் மாநாடு

1989 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தை உரிமைகள் மாநாடு ஒரு குழந்தை உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும் முழுமையாக வளர்ச்சியடைந்த நபராக மாற 18 ஆண்டுகள் தேவை என்று கூறியது எனவே சர்வதேச அளவில் குழந்தையின் வயது 18 ஆக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

உடல் வளர்ச்சி

உடல் வளர்ச்சி குழந்தையின் மண்டை ஓடு, மூட்டுகள், மணிக்கட்டுகள், கழுத்து எலும்புகள், நரம்புகள், உறுப்புகள் மற்றும் கருப்பை விரிவடைவதற்கு 18 ஆண்டுகள் ஆகும். எனவே உடல் காரணங்களுக்காக ஒரு குழந்தை முழுமையான மனிதனாக உருவாக 18 ஆண்டுகள் ஆகும். ஆனால் இது தனி மனிதனுக்கு மாறுபடலாம். ஆனால் பொதுவாக ஒரு குழந்தை முழு வளர்ச்சிக்கு 18 ஆண்டுகள் தேவை.

உளவியலாளர்கள் எரிக் எரிசன் மற்றும் சிக்மண்ட் ஆகியோர் குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் பற்றிய தங்கள் ஆய்வுகளில் புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டனர். குறிப்பாக உடலில் ஏற்படும் மாற்றங்கள், கலாச்சாரம் மற்றும் மனம் ஆகியவற்றின் ஆதிக்கம் வளர்ச்சியை தீர்மானிக்கிறது என்கிறார். அவர்களின் கூற்றுப்படி ஒரு குழந்தை 18 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சமூகத்தில் வேறுபட்ட கலாச்சாரத்தில் வாழக்கூடிய மக்களுடன் தன்னை ஒருங்கிணைக்க முயற்சிக்கிறது. 

குழந்தைகளின் வளர்ச்சி படி நிலை

எரிக் எரிக்சன் குழந்தைகளின் வளர்ச்சி படி நிலையை 8 நிலைகளாக பிரிக்கிறார் அதன்படி குழந்தைகள் கீழ்கண்டவாறு பிறப்பிலிருந்து இறப்பு வரை 8 நிலைகளாகப் பிரிக்கிறார் குழந்தைகளின் வயதுக்கு ஏற்றவாறு நான்கு படிநிலைகளை பள்ளிப்பருவ நிலையாக பிரிக்கிறார்

  • 0 முதல் 3 மழலையர் பள்ளி,
  • 3 முதல் 6 பாலர் பள்ளி,
  • 6 முதல் 12 பள்ளி,
  • 12 முதல் 18 இளமைப் பருவம் என நான்கு நிலைகளாகப் பிரிக்கிறார். 

மழலைப் பருவம்

இந்த பருவத்தில் தான்  குழந்தைகளுக்கு தாய் அன்பும், பரிவும், கவனிப்பும் மிகவும் அவசியம் இந்தப் பருவத்தை குழந்தைகள் வெற்றிகரமாக கடந்து விட்டால் நம்பிக்கை துளிர்விட்டு  வளர தொடங்குகிறது என எரிக்  குறிப்பிடுகிறார். அதாவது வாய் வழியாக உணர்வுகளைப் பெறும் பருவம் எல்லாவற்றிலும் வாயில் வைப்பதையும் விரலில் வாய் வைத்துசப்புவது கவனிக்கலாம் நம்பிக்கையை இப்பருவத்தில் தான் தொடங்குகிறது இந்த பருவத்தில் பெற்றோர்களோ அல்லது குழந்தையை உடன் இருந்து பராமரிப்பவரே நம்பிக்கையை குழந்தையிடம் விதைக்க வேண்டும்.

ஆரம்ப கால  குழந்தைப் பருவம் 18 மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை இந்த காலகட்டத்தில், தன்னம்பிக்கை, கூச்சம், வலிமை, சுயக்கட்டுப்பாடு, உறுதியான தன்மை, உறுதியான தன்மை ஆகியவை தங்களுடைய தற்போதைய திறன்களைப் பயன்படுத்துவதற்கும், நடக்க, பேசுவதற்கு, சாப்பிடுவதற்கும், கழிப்பறைப் பயிற்சிக்கும் கற்றுக்கொள்கிறார்கள் . எது சரி? எது தவறு? என்று அறியத் தொடங்கி, முடியாது, வேண்டாம் போன்ற சக்திவாய்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தத் தொடங்குகிறார். இந்த காலகட்டத்தில் தன்னம்பிக்கை வளரத் தொடங்குகிறது, அதே நேரத்தில் குழந்தைகள் உதவியற்ற தன்மை மற்றும் பலவீனத்தின் உணர்வை உருவகிறது இந்த காலகட்டத்தில் பெற்றோருடனான உறவு மிகவும் முக்கியமானது.

 

Leave a Reply