உயிரிப் பல்வகைமை சட்டம் (Biodiversity Act) -2002 ஓர் பார்வை

Biodiversity Act உயிரிப்பல்வகமை சட்டம்-2002

இந்த பூமியில் வாழும் உயிரினங்களின் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்க உதவும் எண்ணற்ற வளங்களை இயற்கை நமக்கு வழங்குகிறது. ஆனால் மனிதன் தன் தேவைக்கு இயற்கையை பயன்படுத்தி வருகிறான். பூமியில் காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் தாக்கம் பூமியில் உள்ள பல பூச்சிகள், தாவர இனங்கள் மற்றும் விலங்குகள் பாதிக்கப்பட்டு அழிவின் விளிம்பில் உள்ளன. 

மனிதன் தனது தேவைகளுக்காக பூமியிலிருந்து உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் சிறிய உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமின்றி, நகரமயமாக்கல் போன்ற பல்வேறு காரணிகள் பூமியில் உள்ள சிறு உயிரினங்கள் மற்றும் தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றைப் பாதித்து உணவுச் சங்கிலியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக ஒரு உயிரினம் குறைவாகவும் ஒரு உயிரினம் அதிகமாகவும் இருக்கும் சூழல் நிலவுவதால் பல்லுயிர் பெருக்கத்தில் சுற்றுச்சூழலில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

UNEP

1972 இல் ஸ்டாக்ஹோம் நகரில் மாசுபாட்டைக் குறைத்தல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது தொடர்பான மாநாடு ஒன்று நடைபெற்றது அதில்  பல்வேறு சுற்றுச்சூழல் குறித்த தீர்மானங்களை நிறைவேற்றபட்டது அதை  பல்வேறு நாடுகள் ஏற்றுக்கொண்டது.  அந்த மாநாட்டில் UNEP அமைப்பு  தொடங்கப்பட்டது.

1992 இல் ரியோ ஜெனீவாவில் நடைபெற்ற புவி உச்சி மாநாட்டில் உறுப்பு நாடுகள் பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்க உயிரியல் பன்முகத்தன்மை பற்றிய சர்வதேச ஒப்பந்ததை நிறைவேற்றின அதை  பல்வேறு நாடுகள் ஏற்றுக்கொண்டன. இதில் இந்தியாவும் உறுப்பு நாடு ஆகும்.

புவி  உச்சி மாநாடு ஒப்பந்தம் மூன்று நோக்கங்களைக் கொண்டிருந்தது

1 உயிரிப்பல்வகமை  பாதுகாப்பு 

2. உயிரி வளங்ககளை நீடித்த நிலைத்து பயன்படுத்தல் 

3.  பாரம்பரிய வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம்  வருகின்ற வருவாய் பயன்களை சமமான முறையில் பங்கீடுவது 

இந்தியா பிப்ரவரி 1994-இல் மாநாட்டின்  ஒப்பந்ததை  அங்கீகரித்தது மட்டுமல்லாமல், நாட்டின் உயிரியல் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டிற்காக பல்லுயிர்ச் சட்டத்தை 2002-ஆம் ஆண்டு  இயற்றியது.

உயிரியல் வளங்கள் மற்றும் தொடர்புடைய அறிவைப் பயன்படுத்துவதன் மூலம் எழும் நன்மைகளின் நியாயமான மற்றும் சமமான பகிர்வை உறுதி செய்வதையும் இந்த சட்டம்  நோக்கமாகக் கொண்டுள்ளது.

சட்டம் அதன் விதிகளை செயல்படுத்த (சட்டம்) மூன்று  நிறுவனங்களை நிறுவுகிறது:

  • தேசிய பல்லுயிர் ஆணையம்- (National Biodiversity Authority)
  • மாநில பல்லுயிர் வாரியங்கள்- (State Biodiversity Boards)
  • பல்லுயிர் மேலாண்மை குழுக்கள்-(Biodiversity Management Committees)

வெளிநாட்டு தனிநபர்கள் நிறுவனங்கள் அல்லது நிறுவனங்களால் உயிரியல் வளங்கள் மற்றும் தொடர்புடைய அறிவை அணுகுவதையும் சட்டம் ஒழுங்குபடுத்துகிறது, மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தேசிய பல்லுயிர் ஆணையத்தின் முன் அனுமதி தேவைப்படுகிறது.

இந்த சட்டம் 12 உட்பிரிவுகளை கொண்டது

Leave a Reply