குழந்தைகளின் மனம்
குழந்தைகளுக்காக நாங்கள் எங்கள் உயிரை கூட தருவோம் குழந்தையே எங்கள் உயிர் நாடி என்று கூறுவர்மேலும் குழந்தைகள் தருகின்ற மகிழ்ச்சி இயற்கையானது இயல்பானது பிரிக்க முடியாது என்று கூறுவார்கள் மகிழ்ச்சி என்பது குழந்தைகளின் உள்ளார்ந்த இயல்பு குழந்தையின் மகிழ்ச்சியை கொண்டாடுகின்ற குடும்பம் அந்த குழந்தையின் உண்மையான உரிமைகளை நிலைநாட்டுகிறது குழந்தைக்கான மகிழ்ச்சி மறுக்கப்படுகின்ற போது அந்த குழந்தையின் தேவைகளும் உரிமைகளும் மறுக்கப்படுகின்றன அதாவது குழந்தையின் அடிப்படை உரிமையை மறுக்கப்படுகிறது என்பதை இது காட்டுகிறது.
குழந்தைகள் ஒவ்வொரு நாளும் வளர்கின்றனர் அந்த வளர்ச்சியில் குழந்தைகளிடம் இருக்கின்ற இயல்பான படைப்பாற்றல் ஒளிவு மறைவு இல்லை சமத்துவ உணவை புரிந்து கொள்ள மறுக்கின்ற இந்த சமூகம் அந்த குழந்தையின் மகிழ்ச்சியை கெடுக்கும் விதமாக பல்வேறு சூழல் அமைப்புகள் இந்த சமூகத்தில் அவ்வப்போது நடந்து வருகிறது
மனிதகுலத்தின் மிக முக்கியமான வளர்ச்சிக் காலம் குழந்தைப் பருவம். குழந்தைகள் நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கும் முக்கியமான சாமுதாயத்தின் ஆணி வேர். ஆனால் அவர்கள் சவால்கள் நிறைந்த இந்த உலகில் புறக்கணிக்கப்படுகிறார்கள், மேலும் மன அழுத்தம், சுரண்டல், கல்வி புறக்கணிப்பு, உடல்நலம், பாலியல் துஷ்பிரயோகம் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகளின் மகிழ்ச்சி மறுக்கப்படுகின்ற போது குழந்தைகளின் தேவைகளும் உரிமைகளும் மறுக்கப்படுகின்றன குழந்தைகளுக்கு தேவை என்பது அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும்
குழந்தைகளுக்காக நான் பணியாற்றும் போது எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குழந்தைகளின் மனநிலை புரிந்து கொள்ளவும் அவர்களின் சரியான வழிகாட்டுதலுடன் அவர்களை வழிநடத்தினார் சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வரக்கூடிய அடுத்த தலைமுறைகளை உருவாக்குகிறோம் என்று நம்பிக்கையோடு செயல்பட்டால் அவர்களின் வாழ்வில் ஒளி கொண்டு வரலாம் இந்த பருவங்களில் அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் பற்றிய உண்மையான இந்தப் பகுதியில் நிகழ்வுகளைக் காணலாம்.