மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (MGNREGA) அறிக

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் மூலம், இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் 100 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்து அவர்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க முடியும்.

இந்தியாவில் வறுமை

இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது என்பது வறுமை இல்லாத நிலையை அடைவதற்கான சிக்கலான மற்றும் பன்முக சவாலாகும் வறுமைக்கு மிக முக்கியமான காரணம் வேலையில்லா திண்டாட்டம், குறைந்த ஊதியத்தில் வேலை கிடைப்பது மற்றும் வேலை பாதுகாப்பு இல்லாதது கல்வியறிவின்மை திறமையான வேலை வாய்ப்புகளை குறைக்கிறது உடல்நலப் பிரச்சினைகள் கடுமையான வறுமைக்கு வழிவகுக்கும் சுகாதாரமற்ற சூழ்நிலைகள் நோய் மற்றும் வருமான இழப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன இதைத் தவிர சாதி, பாலினம் வறுமைக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது சாலைகள், மின்சாரம், பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் வறுமை நிலையை மேலும் மோசமாக்குகின்றன.

மில்லினியம் வளர்ச்சி இலக்குகள்-2000

2000 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகளின் மில்லினியம் வளர்ச்சி இலக்குகள் அதன் முதல் நோக்கமாக வறுமை ஒழிப்புக்கு முன்னுரிமை அளித்தது. உறுப்பு நாடான இந்தியா இந்த உலகளாவிய இலக்கை அடைய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது அதன் ஒரு பகுதியாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் வழங்கிட 2005ஆம் ஆண்டு வேலை உறுதி அளிப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு அச்சட்டத்தின் மூலமாக திட்டம் செயல்படுத்தப்படுகிறது இத்திட்டம் மட்டுமே வேலை மக்களின் வேலை செய்யும் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் வறுமையை ஒழிக்க சட்டபூர்வமான பாதுகாப்பு கொண்ட ஒரே வறுமை ஒழிப்பு திட்டமாகும்.

ஒவ்வொரு நிதியாண்டிலும் கிராமப்புறங்களில் இருக்கும் திறன் சாரா உடல் உழைப்பினை மேற்கொள்ளும் விருப்பமுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாட்களுக்கு குறையாமல் வேலைவாய்ப்பை அளிப்பதன் மூலம் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கபட்ட திட்டம்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட தரமான மற்றும் நிலையான சொத்துக்களை கிராமங்களில் உருவாக்குதல். நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதார மற்றும் வறுமையை குறைக்கவும் சமூகபாதுகாப்பை உறுதி செய்வதை  நோக்கமாகக் கொண்டது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் நூறு நாட்களுக்கு உத்தரவாதமான  வேலைவாய்ப்பை வழங்குகிறது. இந்த திட்டம் நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தபடுகிறது.  

தமிழநாட்டில் அறிமுகம் 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழக நாட்டில் முதல் முதலாக 2006 ஆம் ஆண்டு கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை நாகப்பட்டினம் திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. பின்னர் 2008க்கு பிறகு அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

தொழிலாளர் நிதிநிலை அறிக்கை (Labour Budget)

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் தொழிலாளர் நிதிநிலை அறிக்கை (Labour Budget)  தயாரிப்பதில் மகளிர் சுய உதவி குழுக்களும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளும் பங்கு பெற்றனர் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளும் கிராம ஊராட்சியின் மூலமாக செயல்படுவதால் மகளிர் குழுக்கள் உடன் ஒருங்கிணைப்பு அவசியமானது.

இந்த திட்டத்தின் படி பயனாளிகளுக்கு அளிக்கப்பட்ட முக்கிய சட்ட உரிமைகள்

  • வேலைய அட்டை பெறுவதற்கான உரிமை
  • வேலை வழங்கிய கோரி 15 தினங்களுக்கு வேலை பெறுவதற்கான உரிமை
  • வேலை வாய்ப்பு இல்லாதபடி வேலைய பெறுவதற்காக உரிமை

திட்டங்களின் முக்கிய நோக்கங்கள்

  1. கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில்  உத்தரவாதமான வேலை அளித்தல் 
  2. நூறு நாட்களுக்குக் குறையாத  வேலைகளை வழங்குதல்
  3.  நீடித்து நிலைத்த  சொத்துக்களை உருவாக்குதல்
  4.  ஏழைகளின் வாழ்வாதார ஆதாரங்களை வலுப்படுத்துதல்
  5.  சமூக பொறுப்புணர்வு உறுதி செய்தல்
  6.  பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தை வலுப்படுத்துதல்.

Leave a Reply