நலவாழ்வு கிராம ஊராட்சி (Healthy Village)
கொரோனா வைரஸின் சர்வதேசப் பரவல்
2019 ஆம் ஆண்டு இந்த உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரஸின் சர்வதேச அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த தொற்று நோய் உலகின் பல நாடுகளில் பல மனிதர்கள் இழப்புக்கு காரணமாக இருந்தது பல நாடுகளில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது, கொரோனா தடுப்பூசி இல்லாமல், பல உயிர்கள் இறந்தன, மக்கள் உயிருக்கு பயந்து வாழ்ந்தனர், உலக நாடுகள் மீண்ட பிறகு, பல நாடுகளில் மக்கள் வறுமையில் தள்ளப்பட்டனர்.
தேசிய சுகாதார திட்டம்
இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழித்தல், தொற்று நோய்களைத் தடுப்பதில் முன்னேற்றம், சுற்றுச்சூழல் சுகாதாரம், ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்துதல், மக்கள்தொகை கட்டுப்பாடு மற்றும் கிராமப்புற சுகாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகின்றன. தேசிய சுகாதார அமைச்சகம் இந்த நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடல் நலம் தான் அனைத்து செல்வங்களையும் விட உயர்ந்த செல்வமாகும். மற்ற செல்வங்களை பெறவும் பெற்ற செல்வங்களை அனுபவிக்கவும் உடல் நலம் மிக அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிசெய்து, எல்லா வயதினருக்கும் நல்வாழ்வை உறுதி செய்தல்
மனித வளர்ச்சிக் குறியீடு மூன்று பரிமாணங்களைக் கொண்டுள்ளது
கல்விக் குறியீடு, வாழ்க்கைக் குறியீடு, சுகாதாரக் குறியீடு மனித வளர்ச்சிக் குறியீட்டில் மூன்றாவது இடத்தில் நல்வாழ்வு இருப்பதால், கிராமப் பஞ்சாயத்தில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படாத வரை, மனித வளர்ச்சிக் குறியீட்டில் முன்னேற்றம் காண முடியாது. அதை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஏன் செயல்படுத்தவேண்டும்?
கிராம ஊராட்சி சமூக-பொருளாதார மற்றும் மனித மேம்பாட்டை உறுதி செய்வதற்கான நிர்வாக திட்டமிடல் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு மனிதன் நோயில்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் அவனுடைய உடல், மனம், மற்றும் சமூகத்தின் அர்ப்பணிப்பும், நலவாழ்வு, ஆகியவற்றில் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று உலக சுகாதார நிறுவனம் வழங்கும் வரையறை ஆகும் இது நோய் அல்லது பலவீனம் இல்லாத நிலையை மட்டும் குறிப்பிடுவது அல்ல.
உடல் நலமின்மை என்பது தனி நபர்கள் வேலைக்கு செல்வதை தடுப்பது மட்டுமன்றி மருத்துவ செலவு மற்றவர்களின் உதவி நேரம் வேலை இழப்பு ஆகியவைகளுக்கு காரணமாகிறது. மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வது கிராம ஊராட்சியின் கடமை ஆகும். சுகாதாரமான நிலையை மக்கள் அடைவதற்கு நிலைத்த வளர்ச்சி குறிக்கோள் நிலைத்த தன்மையை அடைந்து அனைத்து வயதிற்கும் நல்ல வாழ்வை மேம்படுத்துவதை உறுதி செய்வதே இலக்கின் நிலையாகும்.