காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல்/Climate Change அறிவோம்
பூமி
மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இந்த பூமிதான்.இந்த பூமி மட்டுமே எண்ணற்ற இயற்கை வளங்களைக் கொண்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அழகும், ஆபத்தும் நிறைந்த இந்த பூமி யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நுட்பமாக அமைந்து உள்ளது இந்த அழகிய பூமியில் கடல் மற்றும் கடல் சார்ந்த இடங்கள், மலை மற்றும் மலை தொடர்பான இடங்கள், பாலைவனம் மற்றும் பாலைவனம் தொடர்பான இடங்கள், சமவெளி பகுதிகள் ஆகியவற்றின் சுற்றுச்சூழல் அமைப்புகளும் இந்த பூமியில் அடங்கும். ஆனாலும் சில நேரங்களில் ஏற்படும் நிலச்சரிவு, புயல், வெள்ளம் மற்றும் சுனாமி ஆகியவை மக்களுக்கு ஆபத்துக்களை உருவாக்கி பெரும் பாதிப்புகளை உருவாக்குகின்றன
இவற்றிலிருந்து பாதுகாக்க நாம் என்ன செய்யலாம்? நாம் என்ன செய்யக்கூடாது ? இந்த பூமியை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் வரும் நம்முடைய சந்ததியினருக்கு பூமிமியை எவ்வாறு தர போகிறோம் ? இந்த கேள்விக்குக்கு என்ன விடை
சில முக்கிய பிரச்சனைகள் பற்றி புரிந்து கொண்டால் போதும்
காலநிலை மாற்றம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற ஓர் வார்த்தை இன்று உலக அளவில் அதிகமாக பேசப்படுகிறது. ஏன் இந்த வார்த்தை இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது.?
நம்முடைய நாம் தினசரி வாழ்வில் உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று என அனைத்தும் பல்லுயிர் சார்ந்தவை. காடு, பவளப்பாறைகள் மற்றும் ஈரநிலங்கள் போன்ற இயற்கை சூழல் நமது அன்றாட தேவைகளுக்கு அத்தியாவசிய வளங்களை வழங்குகிறது.இன்றைய காலகட்டத்தில் சுற்றுசூழலில் பாதுகாத்தல் என்பது மிகவும் முக்கிய பிரச்சினையாகும். உலக அளவில் உள்ள நாடுகள் அனைத்தும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் இதை குறித்து ஏன் பேச வேண்டும்? இன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகை வளர்ச்சி தொழில்மயமாதல் ஆகிய இரண்டும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு காரணமாய் உள்ளன இத்தகைய பிரச்சனைகள் அழிவு,மாசடைதல் மற்றும் காலநிலை மாற்றம் என நேரடி தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
காலநிலை மாற்றத்தின் காரணம்
காலநிலை மாற்றம் என்பது வெப்பநிலை மற்றும் வானிலை முறைகளில் நீண்ட கால மாற்றங்களைக் குறிக்கிறது. சூரியனின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது பெரிய எரிமலை வெடிப்புகள் காரணமாக இத்தகைய மாற்றங்கள் இயற்கையானதாக இருக்கலாம். ஆனால் 1800 ஆண்டுகளில் இருந்து, மனித செயல்பாடுகள் மூலம் காலநிலை மாற்றத்தின் முக்கிய காரணியாக இருந்து வருகின்றன,
நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால். கிரீன்ஹவுஸ் எனப்படும் வாயுவை உமிழ்வை உருவாக்குகிறது, அவை பூமியைச் சுற்றி போர்வையைப் போல செயல்படுகின்றன, சூரியனின் வெப்பத்தைத் தடுக்கின்றன மற்றும் வெப்பநிலையை அதிகரிக்கின்றன.
சூழல் பிரச்சினைகள்
காற்று மாசடைதல், நீர் மாசடைதல்,நிலம் மாசடைதல், ஒலியினால் ஏற்படும் மாசு, உயிரி மருத்துவ கழிவுகளால் ஏற்படும் மாசுகள், மின்னியல் கழிவுகளால் ஏற்படும் மாசுகள், சுரங்கம் தோண்டுவதால் ஏற்படும் மாசுக்கள் இவைகள் தீங்கு விளைவிக்கக் கூடிய தாக்கங்களைபூமியில் வாழும் உயிரினங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
புவி வெப்பமடைதல்
பசுமை வீடு வாயுக்கள் என அழைக்கப்படும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், போன்றவற்றால் வளிமண்டலத்தில் வெப்ப தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனால் பருவ நிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இந்தியாவில் பெரும்பாலான சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு அதிக மக்கள் தொகையே காரணமாகும். இதனை நாம் சரிசெய்ய சுற்றுச்சூழலை பாதுகாத்து சுகாதாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றால் திறமையான சுற்றுச் சூழலோடு இணைந்து செயற்படுகின்ற நுட்பத்தினை பயன்படுத்தப்பட வேண்டும்.
பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ உரிமை உண்டு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்