இந்தியாவில் குழந்தைகள் (Children in India) மதிப்பீடு
இந்தியாவில் குழந்தைகள்
உலக அளவில் அதிகம் குழந்தைகள் கொண்ட நாடுகளில் இந்தியா உள்ளது இங்கு குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு போன்ற சட்டங்கள் இயற்றபட்டு குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்கிறது. இருந்தபோதிலும் இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது அவற்றில் இருந்து குழந்தைகளை பாதுக்க அரசு மற்றும் அரசு சாரா பல்வேறு அமைப்புகள் செயல்பட்ட வருகிறது குறிப்பாக அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி வருகிறது.
குழந்தைகள்
குழந்தைகள் தான் இந்த உலகில் மிகவும் மகிழ்ச்சியான மனிதர்கள் அவர்கள் எதற்கும் கவலைப்படாமல் எல்லா சூழ்நிலைகளிலும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். குழந்தைகள் மென்மையான உள்ளம் கொண்டவர்கள் மற்றும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் சமமான நம்பிக்கை கொண்டவர்கள் மற்றவர்கள் தங்களுடன் விளையாட வேண்டும் என்று குழந்தைகள் எதிர்பார்க்கிறார்கள்.
குழந்தை பருவம்
குழந்தை என்பது கருவுற்ற நிலையிலிருந்து 10 மாதங்களுக்குள் பூமியில் பிறந்து மூன்று மாதங்களில் பூமியில் தவழ்ந்து. ஆறு மாதங்களில் முழங்கால்களை வளைத்து ஒரு வருடத்தில் நடக்கக் கற்றுக்கொள்கிறது. மூன்று வயதில் முழவதும் பேசத் தொடங்குகிறது. ஐந்து வயதில் பள்ளிக்குச் செல்கிறது. 18 வயதுக்குள் பருவநிலையை அடைந்து முழு மனிதனாக மாறுகிறது. இந்த இடைப்பட்ட காலம் குழந்தை பருவம் என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான சில கவனிக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் பாலியல் பாகுபாடு, பெண் சிசுக்கொலை, குழந்தை கடத்தல், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், சாலையோர சிறார்கள், மாற்றுத் திறனுடைய குழந்தைகள், குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்தல், பாலியல் துன்புறுத்தல்கள்,உடல் ரீதியான மன ரீதியான துன்புறுத்துவது மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை பள்ளி படிப்பை இடைநிறுத்தல்,வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள்
குழந்தைகள் உரிமைகள்
1989 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கை மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டது 18 வயதுக்கு உட்பட்டோர் குழந்தைகளாக வரையறுக்கிறது,
குழந்தைகளின் மிக அதிகபட்ச நலனை காப்பதற்கு அரசுகளால் மேற்கொள்ளப்பட வேண்டிய 54 சட்டப்பிரிவுகளை வழங்கி உள்ளது.
இந்தியாவில் உள்ள சட்டங்கள்
இந்தியாவும் தீர்மானத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் ஒன்றாகும் இந்தியாவில் குழந்தைகளின் நலனை காப்பதற்கு பல்வேறு திட்டங்களையும் சட்டங்களையும் இயற்றி குழந்தைகளை பாதுகாத்து வருகிறது.
இந்திய அரசு குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக சில சட்டங்களை இயற்றியுள்ளது. 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் மாநாட்டில் இந்தியா கையெழுத்திட்டது, தற்போதுள்ள சில சட்டங்கள் திருத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன.
- இளசிறார் நீதிச் சட்டம் (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015.
- பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம். 2012.
- குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டம் 2009.
- கருவின் நிலைப்பாட்டை கண்டறியும் நுணக்க முறை
(தவறாக பயன்படுத்துவதை கட்டுப்பாடுத்துதல் மற்றும் முறைப்படுத்தல்) சட்டம் -1994 - ஒழுக்க நெறி சட்டம்- 1956
- 73-வது பஞ்சாயத்து அமைப்பு திருத்தச் சட்டம்-1992
- குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு மற்றும் முறைப்படுத்தல்) திருத்தச் சட்டம்-2016
- தொழிற்சாலைகள் சட்டம்-1948
- சுரங்கச் சட்டம்-1952
- பீடி மற்றும் சுருட்டு தொழிலாளர் சட்டம் -1966
- குழந்தைகள் (உழைப்பு மற்றும் அடமான) சட்டம்- 1933
- கொத்தடிமை ஒழித்தல் சட்டம்- 1976
- குழந்தை திருமணத் தடைச் சட்டம்- 2006
- எச்ஐவி எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம்- 2017
- மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம்- 2016
இந்திய அளவில் இயற்றப்பட்ட சட்டம் மூலம் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது