கிராம ஊராட்சியின் கடமைகள்/ Duty of village panchayt

கிராம ஊராட்சி

மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்பில் கிராம ஊராட்சிக்கு மிக அதிக முக்கியத்துவம் ஏன் தரப்படுகிறது? அதற்கான காரணங்கள் என்ன?

கிராம ஊராட்சியே மக்களின் அன்றாட தேவைகளை தீர்க்கவும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் கிராம ஊராட்சியே மக்களுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருப்பதால் கிராம ஊராட்சிகளுக்கு அதிக கடமைகள், அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய அரசியலமைப்பு சட்டம்

உலகின் மிகப்பெரிய குடியரசு நாடுகளில் இந்தியாவும் ஒன்று உலக நாடுகளுக்கிடையே எழுதப்பட்ட மிக நீண்ட அரசியலமைப்பு சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆகும். இந்திய அரசியலமைப்பு சட்டம் குடிமக்களுக்கு பேச்சுரிமை, எழுத்த்துரிமை, கருத்தரிமை, கூட்டங்களை நடத்தும் உரிமைகளை வழங்கியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி 6 சட்டப்பிரிவு 40-ல் ஒவ்வொரு மாநில அரசும் கிராம ஊராட்சியை கட்டாயமாக உருவாக்கி அதற்கு சுய ஆட்சி அந்தஸ்தை வழங்க வேண்டும் என கூறுகிறது.

உள்ளாட்சி அமைப்பில் வட்டார ஊராட்சி,மாவட்ட ஊராட்சி என்கின்ற மற்ற இரண்டு ஊராட்சிகளை காட்டிலும் கிராம ஊராட்சிகள் மட்டும் மக்களோடு மக்களாக  நேரடி தொடர்பு கொண்டு அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்க முடிகிறது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்

இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி 4 பிரிவு 40 இன் கீழ் கிராம ஊராட்சிகளை அமைத்து அவைகளுக்கு அதிகாரங்களும் பொறுப்புகளும் வழங்க வழிவகை செய்யப்பட்டது.அதன் அடிப்படையில் 73-ஆவது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் 1992 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது 1993 ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 243 ஏ முதல் 243 ஓ வரை ஊராட்சிகளை பற்றி தெரிவிப்பதாகும் 243(1)சட்டப்பகுதியில் விதிமுறைகளுக்கு ஏற்ப கிராம இடைநிலை மற்றும் மாவட்டங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஊராட்சிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற விதியின் கீழ் கிராம ஊராட்சியில் அமைக்கப்பட்டு கிராம ஊராட்சியில் உள்ள மக்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக நீதிக்கான திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பினை ஊராட்சிகளுக்கு ஒப்படைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள தமிழக அரசின் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 22-04-1994 நடைமுறைக்கு வந்தது.

தமிழ்நாடு கிராம ஊராட்சி சட்டத்தில் மிக முக்கிய பிரிவுகள் ஆன கட்டாயக் கடமைகள்(பிரிவு-110) மற்றும் விருப்பக் கடமைகள்(பிரிவு-111) மற்றும் ஒப்பளிப்புபணிகள் (பிரிவு 113,114) மற்றும் பிற துறைகளின் பணிகளின் கீழ் கிராம ஊராட்சியில் பல்வேறு தேவைகளை நிறைவேற்றி கொள்ள கிராம ஊராட்சிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.   

மக்களின் பிரதிநிதியாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற குழு அவர்களின் தேவைகளை தீரக்கின்ற வகையில் கிராம ஊராட்சிக்கு அதிகமான கடமைகளும் அதிகாரங்களும், பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. 

கட்டாய கடமைகள்-110

  1. ஆண்டு திட்டத்தை தீட்டி செயல்படுத்துதல்
  2. கிராம பொது சொத்துக்களை பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல் கிராம சாலை
  3. அமைத்தல்
  4. பாலங்கள் தரைப் பாலங்கள் சிறு பாலங்கள் அமைத்தல் அதனை பழுதுபார்த்தல்
  5. குடியிருப்பு பகுதிக்கு மற்றும் பொது இடங்களில் தெருவிளக்கு அமைத்தல்
  6. பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்தல் வடிகால்களை கட்டுதல் கழிவு நீரையை அகற்றுதல்
  7. துப்புரவு செய்தல் அகற்றுதல் துப்புரவு குப்பை போன்றவற்றை அகற்றுதல்
  8. இடுகாடு, சுடுகாடு ஏற்படுத்துதல்  மற்றும் பராமரித்தல்
  9. கிராம அளவில் நிறைவேற்றப்படும் மத்திய மாநில அரசு திட்டங்களை கண்காணிததல் செயல்படுத்துதல்
  10. ஊராட்சியின் வீட்டு வரி, சொத்து வரி, தொழில்வரி மதிப்பீடு செய்தல் மற்றும் வசூலித்தல்
  11. வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்துதல் 

 விருப்ப கடமைகள்-111   

  1. கிராமத்தில் உள்ள சாலைகளில் மற்றும் பொது இடங்களில் மரங்களை நடுதல்
  2. குடியிருப்பு இல்லாத பகுதிகளுக்கும் இடுகாடு போன்ற இடங்களில் தெருவிளக்கு அமைத்தல்
  3. திருவிழா நேரங்களில் சுகாதார வசதி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கு ஏற்பாடு செய்தல்
  4. இறைச்சி கூடங்களை அமைத்தல் மற்றும் பராமரித்தல்
  5. விளையாட்டு மைதானங்கள் உடற்பயிற்சி நிலையங்கள் அமைத்தல் சுகாதார பாதுகாப்பு பொதுநலம் போன்ற வசதிகளை ஏற்படுத்துதல்

பிற துறைகள் 

பிற துறைகளில் இருந்து பல்வேறு பணிகளை நிறைவேற்றிக் கொள்ள கிராம ஊராட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராமத்தில் குடிநீர் போதுமாக இல்லை எனில் குடிநீர் வடிகால வாரிய பொறியாளர்களும் தொடர்பு கொண்டு கிராம ஊராட்சியின் தீர்மானத்தை வழங்கி குறைந்தபட்ச குடிநீர் தேவைகள் திட்டம், குடிநீர் விரிவுபடுத்த குடிநீர் திட்டம் போன்றவற்றின் மூலம் புதிய குடிநீர் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார மேம்பாடு அடைய குடும்ப நலத் துறையிடம் இணைந்து சுகாதார நிலையம் அமைக்க மேற்கொள்ள வேண்டும் கொத்தடிமை ஒழிப்பு, மத நல்லிணக்கம், தீண்டாமை ஒழிப்பு போன்ற பல்வேறு சமுதாய பிரச்சனைகளை ஊராட்சிகள் திட்டமிட்டு பிரச்சாரங்கள் மேற்கொண்டு விழிப்புணர் ஏற்படுத்த வேண்டும். திடக்கழிவு மேலாண்மை, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு தெரு விளக்குகள், வீட்டுமனை இல்லாதவர்களுக்கு பட்டா வழங்குதல் முதியோர் உதவித்தொகை போன்ற சமூக நலத்திட்டங்கள் வருவாய்த்துறை மற்றும் சமூக நலத்துரை மூலமாக தகுதியானவர்களுக்கு ஒரு உதவிகளைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply