மாவட்ட ஊராட்சி (District Panchayt)
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் -1994
73-ஆவது இந்திய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் படி தமிழ்நாடு ஊராட்சிகள்-1994 சட்டத்தின் படி மாவட்டஊராட்சிகள் அமைக்கபடவேண்டும் தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்டஊராட்சி அமைக்கபட்டுள்ளது.
மாவட்ட ஊராட்சி அமைப்பு
50,000 மக்கள் தொகை கொண்ட வார்டுகளாக பிரிக்கப்பட்டு முறையாக உள்ளாட்சித் தேர்தலில் அறிவிப்பின்படி மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சி சார்பிலும் மாவட்ட பிரதிநிதியாக நிறுத்தப்படலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட வார்டு உறுப்பினராக மாவட்டத்தின் வளர்ச்சிக்கு செயல்படுவார். இதில் மாவட்ட ஊராட்சிக்கு தலைவர் துணைத் தலைவர் ஆகியோர் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.
பதவி வழி உறுப்பினர்கள்
மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட ஊராட்சியில் பதவி வழி உறுப்பினர்களாக இடம் பெறுவார்கள். இவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது ஆனால் இவர்கள் தலைவர், துணை தலைவர் மற்றும் நிலைக்குழு உறுப்பினர் தேர்தலில் நிற்கவோ வாக்களிக்கவோ உரிமை கிடையாது.
மாவட்ட ஊராட்சியின் பொதுவான அதிகாரங்கள் பிரிவு (164)
- தேவை என்று கருதும் தகவல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
- தேவை என்று கருதும் தகவல் விபரங்களை சேகரிக்கலாம்.
- ஊராட்சி ஒன்றியம் அல்லது கிராம ஊராட்சி நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக அல்லது மேம்படுத்துவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் அளிக்குமாறு ஊராட்சி ஒன்றியம் எதையும் அல்லது கிராம ஊராட்சிக்கு கேட்கலாம்.
- மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சி நடவடிக்கைகளை முறைப்படுத்துதல் அல்லது முன்னேற்றம் குறித்து புள்ளி விவரம் அல்லது ஏனைய தகவல்களை வெளியிடலாம்.
மாவட்ட ஊராட்சி உள்ளாட்சியாக செயல்படுவதால் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து பாதிக்கப்பட்ட மக்களின் பாதிப்புகளுக்கு தீர்வு காணும் பொறுப்பு மாவட்ட ஊராட்சிக்கு உள்ளது.
நிலை குழுக்கள்
மாவட்ட ஊராட்சி அதன் கடமைகளை சரிவர செய்யவும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தவும். சரியான முறையில் கண்காணிக்கவும் கீழ்கண்ட நிலை குழுக்களை அமைத்துக் கொள்ளலாம்.
- உணவு மற்றும் வேளாண்மை
- தொழில்கள் மற்றும் தொழிலாளர்
- பொதுப்பணிகள்
- கல்வி
- மதுவிலக்கு சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வு
மேலும் இவைகளை தவிர கூடுதலான நிலை குழுக்களை அமைத்துக் கொள்ளலாம்
- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்
- பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்
- போக்குவரத்து
- மகளிர் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம்
- சமூக நலம்
- குடிநீர் மற்றும் மின்சாரம்
போன்ற குழுக்களை அமைத்து மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பணிகளை செயல்படுத்த இந்த குழுக்களின் உதவியோடு மாவட்ட வளர்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி நிர்வாகம் பெரிதும் துணை புரியும்.
மாவட்ட ஊராட்சியின் கடமைகள்
- கிராம ஊராட்சி, வட்டார ஊராட்சி பணிகளில் அல்லது கிராம ஊராட்சி, வட்டார ஊராட்சி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் பாலம், கால்வாய், கட்டிடம், அசையும் அல்லது அசையா சொத்துகளின் மாவட்ட ஊராட்சியின் ஒப்புதலுடன் மாவட்ட ஊராட்சி இடம் ஒப்படைத்து அவற்றின் பணிகளை மேற்கொள்ளலாம்.
- மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் அரசின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிற துறை அலுவலக பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கலாம்.