73-வது இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தம் அறிக
இந்தியாவில் உள்ள கிராமங்கள் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் தனித்துவமான மற்றும் ஒருங்கிணைந்த பகுதியாகும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் சமூகநீதி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக இந்திய அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தன்னாட்சி அமைப்புகளாக மற்றும் அதிகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
73-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
73-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 1992 இல் இயற்றப்பட்டு 1993 ஆம் ஆண்டு ஏப்ரல்-24 முதல் நடைமுறைக்கு வந்தது. இதில் பிரிவுகள் 243 (A) முதல் 243 k வரை உள்ள பிரிவுகள் ஊராட்சிகளை தொடர்பானது. 243-(1) இச்சட்டத்தின் விதிகளின்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும்
- கிராம ஊராட்சி
- இடைநிலை ஊராட்சி @ வட்டரா ஊராட்சி
- மாவட்ட ஊராட்சி
இந்த மூன்று நிலையில் ஊராட்சிகளை அமைக்கப்பட வேண்டும்.இடைநிலை ஊராட்சிகள் 20 லட்சம் மக்கள் தொகைக்கு மேற்பட்ட மாநிலத்தில் மட்டுமே அமைக்கப்படும்
73வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் படி இந்திய அரசாங்கங்களின் மூன்று அடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளை ஏற்ப்படுத்த இந்த சட்ட திருத்தம் வழி வகை செய்கிறது.
இந்திய அரசியலமைப்பின் 73வது திருத்தத்தின் பிரிவு 243-ஜி பஞ்சாயத்துக்கு அதிகாரங்களையும் பொறுப்புகளையும் வழங்குகிறது பஞ்சாயத்துகள் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக நீதிக்காகவும், மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை செயல்படுத்தவும் கிராமப்புறங்களில் உள்ளாட்சி அளவில் சுயராஜ்ய அமைப்புகளாக செயல்படுவதற்கு ஒரே மாதிரியான கட்டமைப்பையும் ஆணையையும் வழங்கும் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
- கிராம ஊராட்சியின் அனைத்து வாக்காளர்களும் உறுப்பினர்களாகக் கொண்ட கிராம சபை ஏற்படுத்துதல்
- கிராம ஊராட்சி, வட்டார(இடைநிலை) ஊராட்சி, மாவட்ட ஊராட்சி என மூன்றடுக்கு ஊராட்சி நிர்வாகத்தை அமைத்தல்
- மூன்று நிலை ஊராட்சிகளில் உறுபினர்களை வாக்காளர் மூலமாக நேரடியாக தேர்ந்தெடுத்தல்
- ஊராட்சி உறுப்பினர்கள் தலைவர்கள் ஆகியோரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்
- ஊராட்சிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி மாநில நிதி ஆணையம் அமைத்தல் மாநில தேர்தல் ஆணையம் அமைத்தல்.
- உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களை தேர்ந்தெடுக்க தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு சுழற்சி முறையில் இடங்களை ஒதுக்கீடு செய்தல்
- பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக நீதிக்கான திட்டங்களை நிறைவேற்றுதல் அதற்கான பொறுப்புகளை ஊராட்சிகள் நிர்வாகம் செய்தல்