e-கிராமஸ்வராஜ் இணைய முகப்பு /e-Gramswaraj portal அறிவோம்

e-GramSwaraj/e-கிராமஸ்வராஜ் இணைய முகப்பு

செயற்கை நுண்ணறிவு அதிகமாக பயன்படுத்தும் இன்றைய காலகட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் கண்காணித்து கிராம ஊராட்சிக்கு தேவையான நிதிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராம ஊராட்சியும் இணைக்கப்பட்டு அவற்றிக்கு தேவையான நிதி கிராம வளர்ச்சி திட்டங்ககளை செயல்படுத்த இந்தியா  முழுவதும் உள்ள பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களில் (PRI) மின்-ஆளுமையை வலுப்படுத்த மற்றும் தகவல் தொழில்நுட்ப மூலம் கிராம வளர்ச்சியை மேம்படுத்த  பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் (MoPR) பயனர் நட்பு இணைய அடிப்படையிலான போர்ட்டலான eGramSwaraj  அறிமுகப்படுத்தியுள்ளது.

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் (MoPR)

தற்போது இந்திய அரசு அனைத்து வகையான வளர்ச்சித் திட்டங்களிலும் இ-பஞ்சாயத்தை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இ-கிராம் ஸ்வராஜ் (https//:egramswaraj.gov.in/) இணையதளம் பஞ்சாயத்துகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், செயல்படுத்தவும் மற்றும் கண்காணிக்கவும் கணினிமயமாக்கப்பட்டு, பரவலாக்கப்பட்ட வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுடன் சிறந்த தன்னாட்சி அரசாக மாற்றப்பட்டுள்ளது. தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்ரல் 24, 2020 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

ஒருங்கிணைந்த நிதி

குடிநீர், கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் வடிகால், சமூக சொத்துக்களை பராமரித்தல், சாலைகளை பராமரித்தல் மற்றும் தெருவிளக்குகள், நடைபாதைகள் மற்றும் சுடுகாடுகள் மற்றும் தகனக் கூடங்கள் போன்ற அடிப்படை சேவைகளின் நிலையை மேம்படுத்த இந்தயாவில் உள்ள மாநிலத்தில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு  மத்திய அரசு ஒருங்கிணைந்த நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதி முறையாக செலவிடப்படுவதை உறுதி செய்வதற்காக மத்திய பஞ்சாயத்து ராஜ்/ நிதி ஆணையம் இந்த இணையதளத்தை தொடங்கியுள்ளது.

e-GramSwaraj மூலம் கிராம ஊராட்சியில் பரவலாக்கப்பட்ட திட்டமிடல் செயல்பாடுகள் வளர்ச்சி திட்டங்களின் முன்னேற்ற அறிக்கைகள் மற்றும் கிராம ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் வரவு செலவினங்கள் கணக்கியல் (வரவு/செலவு)  சிறந்த வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சேவைகள் 

இதன் மூலம் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்கள் உள்ள கிராம ஊராட்சிகள்  கணினியுடன் இணைக்கபட்டு அனைத்து கிராமப்புற மக்களுக்கு புதிய தொழில்நுட்ப உதவியால் தகவல் மற்றும் சேவைகள் பெறவும் தொழில்நுட்ப பண்பாட்டு அணுகுமுறையில் நாட்டில் ஏராளமான திட்டங்கள் மற்றும் சேவைகளை செயல்படுத்துவதற்கும் மின் ஆளுமை தொழில்நுட்ப வசதிகளின் மூலம் சேவைகள் மூலம் நிர்வாகத்தை மேம்படுத்துவதால் கிராம ஊராட்சிகள்  நீண்டகாலம் சிறந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்ற நோக்கில் இந்த முறை பின்பற்றப்படுகிறது 

  1. e-கிராம ஸ்வராஜ் போர்டல் 
  2. e-கிராம ஸ்வராஜ் போர்டல் ஒற்றை சாளர (single window) முறையில் பயன்பாடு
  3. அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த டாஷ்போர்டு
  4. கிராம ஊராட்சியின் முழு விவரங்களை கொண்டுள்ளது
  5. ஊராட்சி செயலாளர் விவரங்கள்
  6. கிராம ஊராட்சியின் நிதி விவரங்கள்
  7. கிராம ஊராட்சியின் பொது சொத்துகள்  விவரம்
  8. கிராம வளர்ச்சித் திட்டத்தில் முன்மொழியப்பட்ட  திட்ட செயல்பாடுகள் விவரங்கள்
  9. இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு -2011 
  10. மிஷன் அந்தோதயா கணக்கெடுப்பு விவரங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது
  11. மாவட்ட அளவில் தயாரித்த வளர்ச்சி திட்டங்களின் பதிவேற்ற விவரம்
  12. வட்டரா அளவில் தயாரித்து வளர்ச்சி திட்டங்களின் பதிவேற்ற விவரம்
  13.  தேர்ந்து எடுக்கபட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதநிதிகளின்  விவரம்.
  14. வளர்ச்சி  திட்டங்களை பதிவேற்றிய விவரங்கள்
  15. திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளின் வரவு செலவுத் தணிக்கை அறிக்கைகள்
  16. பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மற்றும் கொள்முதல் கணக்குகளின் இணைப்பு
  17. கிராம ஊராட்சியில் செயல்படுத்தப்படும் பணிகளின் முன்னேற்ற அறிக்கை மற்றும் அவற்றின் செலவு விவரங்கள் பற்றிய விவரங்களைப் பெறலாம்
  18. ஜியோ-டேக் (geo-tagged) செய்யப்பட்ட செயல்பாடுகளுடன் கூடிய கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை

ஒற்றை சாளர அமைப்பின் நன்மைகள்

ஒற்றைச் சாளர அமைப்பு என்பது அரசாங்க அனுமதிகள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு ஒரு ஒருங்கிணைந்த தளத்தை வழங்கும் முறையாகும். இது பொதுமக்களின் வசதிக்காகவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், ஊழலை குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  1. தேவையான அனைத்து அனுமதிகளையும் சேவைகளையும் ஒரே இடத்தில் பெறலாம்.
  2. பல்வேறு துறைகளுக்குச் சென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை.
  3. அனைத்து செயல்முறைகளும் ஒரே இடத்தில் நடைபெறுவதால் ஊழலுக்கான வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன.
  4. செயல்முறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் பற்றிய தகவல்கள் எளிதில் கிடைக்கின்றன, இதனால் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது, இது அரசாங்கத் துறைகளின் செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது.

Leave a Reply