நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகள்UN-SDG அறிக
நமது உலகை மாற்றுவோம்
அமைதி, வளர்ச்சி, மனித உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஏழைகள் மற்றும் பசியால் வாடும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக இந்தியா உட்பட 193 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த இலக்குகள் மனிதர்களும் அனைத்து உயிரினங்களும் நல்லிணக்கத்துடன் செழித்து வளரும் உலகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன மேலும் நமது பூமியை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கப்பட வேண்டும். இந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்க 2030க்குள் 169 குறிகாட்டிகளை எட்டுவதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் மற்றும் அனைவரும் “நம் உலகத்தை மாற்றுவதை” உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மில்லினியம் வளர்ச்சி இலக்குகள் (MDI)
1990 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டு வரப்பட்ட மனித வளர்ச்சி குறியீட்டு அறிக்கையின்படி 2000 ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சியை அடைய மில்லினியம் வளர்ச்சி இலக்குகள் உருவாக்கப்பட்டன. MDI 2015 ஆம் ஆண்டில் அந்த இலக்குகளை அடைய 193 நாடுகள் கையெழுத்திட்டன. MDIயின் எட்டு இலக்குகள் வறுமையை ஒழிப்பதாகும் அனைவருக்கும் ஆரம்பக்கல்வி வழங்குதல் பெண்களுக்கு அதிகாரமளித்தல் சிசுஇறப்பைக் குறைத்தல் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் வளர்ச்சிக்கான புதிய திறன்களை உருவாக்குதல். மில்லினியம் வளர்ச்சி இலக்குகள் டிசம்பர் 2015 இல் முடிவடைந்தன,அதைத் தொடர்ந்து 17 நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) ஜனவரி 2016 முதல் 169 இலக்குகளுடன் 193 நாடுகள் 2030 க்குள் அவற்றை அடைய செயல்படுகின்றன.
வளர்ச்சி
வளர்ச்சி என்பது வறுமை, கல்வி, நலன், வேலைவாய்ப்பு சமத்துவம், மக்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்துதல் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளான வீடுகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஆகியவை அடங்கும். வளர்ச்சி என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் மற்றும் மனித திறன்களை மேம்படுத்த வேண்டும்.
மனித வளர்ச்சிக் குறியீடு
மனித வளர்ச்சி குறியீட்டின் அடிப்படையில் வளர்ச்சி அளவிடப்படுகிறது. மனித வளர்ச்சிக் குறியீட்டை பொருளாதார வளர்ச்சியாகக் கருதக் கூடாது. மனித வளர்ச்சிக் குறியீடு முப்பரிமாணமானது உடல்நலம் (மனிதனின் ஆயுட்காலம்) கல்வி (25 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பள்ளிப்படிப்பின் சராசரி ஆண்டுகள் மற்றும் பள்ளி வயது குழந்தைகளுக்கான பள்ளிப்படிப்பை எதிர்பார்க்கும் ஆண்டுகள்) வாழ்க்கைத்தரம் (தனிநபர் மொத்த தேசிய வருமானம்)
17 ஐக்கிய நாடுகளின் இலக்குகள் (SDG)
(1) வறுமை ஒழிப்பு
(2) பட்டினி இல்லா நிலை
(3) ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு
(4) அனைவருக்கும் தரமான கல்வி
(5) பாலின சமத்துவம்
(6) சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம்
(7) மாற்று எரிசக்தி ஆற்றல்
(8) நல்ல வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி
(9) தொழில் புதுமை மற்றும் உள்கட்டமைப்பு
(10) சமத்துவமின்மையை குறைத்தல்
(11) நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள்
(12) பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி
(13) கால நிலை மாற்ற நடவடிக்கை
(14) கடல்சார் வளங்களை பாதுகாத்தல்
(15) நிலப் பாதுகாப்பு
(16) அமைதி, நீதி மற்றும் வலுவான நிறுவனங்கள்
(17) இலக்குகளுக்கான கூட்டாண்மைகள்
இவைகளை அடிப்படையாகக் கொண்டு 2030ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்குகளை அடைவதற்கு 25 செப்டம்பர் 2015 அன்று UN பொதுச் சபையின் கூட்டத்தில் 193 நாடுகள் 2030 நிலைத்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு ஏற்றுக்கொண்டனர். அதன் தலைப்பு “நமது உலகை மாற்றுவோம்” இந்த (agenda) நிகழ்ச்சி நிரலில் 92 பத்திகள் உள்ளன. நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய 169 இலக்குகள் (targets) மற்றும் 232 குறிகாட்டிகளை (indicators) உள்ளது.
நிலைத்த வளர்ச்சி குறிக்கோள்கள் தீர்மானத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாடு முழுக்க இந்த வளர்ச்சி இலக்குகளை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை இந்தியா பல்வேறு திட்டங்கள் மூலமாக செயல்படுத்தி வருகிறது. இந்திய நாட்டின் அமைப்பான நிதி ஆயோக் சேர்ந்து தொலைநோக்கு பார்வையுடன் மாநில மத்திய அரசுகளின் உதவியுடன் உள்ளூர் அளவில் கொண்டு செல்வதற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் செயல்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நமது பூமியை மாற்றி புதிய உலகை படைப்போம்