கல்விக் குழுவின் பணிகள் Functions of Education Committee

 முன்னுரை 

கல்வி என்பது குழந்தைகளளின் உடல் மற்றும் மனவளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் இளையதலைமுறையை முறையாக வழி நடத்துவதிலும் சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வியாளர்கள் கூற்றின்படி கல்வி என்பது மற்றவர்களுக்கு அறிவைக் கற்பிக்கும் செயல் மற்றும் பிறரிடம் இருந்து அறிவைப் பெறுதல் இந்த செயற்பாடுகள் அந்த கிராமத்தின் ஓட்டு மொத்த வளர்ச்சிக்கு உதவும்

கிராமப்புற இந்தியாவில் சமூக நீதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு கல்வி ஒரு அத்தியாவசிய கருவியாகும் கல்வி அனைத்து மக்களுக்கும் சமூக, பொருளாதார மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதன் மூலமும் சமூக ஒற்றுமை மற்றும் மக்களின் ஒருங்கிணைப்பை வளர்ப்பதன் மூலமும் சமவாய்ப்புகளை வழங்குவதன் மூலமும் சமூக நீதியை மேம்படுத்துகிறது தனிநபர்களையும் குடும்பங்களையும் வறுமையிலிருந்து மீட்டெடுக்கவும் இது உதவுகிறது.

கல்வி அனைத்து குழந்தைகளுக்கும், அவர்களின் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் தரமான கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இது சமூகத்தில் சமத்துவமின்மையைக் குறைத்து அனைவருக்கும் வளமான வாழ்க்கை வாழ்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

பெண்களுக்கான கல்விக்கான அணுகல் அவர்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. இது குடும்ப வன்முறை மற்றும் குழந்தை திருமணம் போன்ற பாலின அடிப்படையிலான பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது

மக்களுக்கு அவர்களின் உரிமைகள் மற்றும் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கல்வி உதவுகிறது. சமூக அநீதிக்கு எதிராகப் பேசுவதற்கும், அவர்களின் சமூகங்களில் மாற்றத்தைத் தூண்டுவதற்கும் இது அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

கல்வி குழுவின் உறுப்பினர்கள்

  • கிராம ஊராட்சி தலைவர் (கல்வி குழுவின் தலைவர் ஆவார்)
  • தலைமை ஆசிரியர்
  • சுய உதவி குழு உறுப்பினர்
  • பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதி
  • பெற்றோர்
  • சத்துணவு அமைப்பாளர்
  • இளைஞர் அணி உறுப்பினர்
  • மாற்றுத்திறனாளி குழந்தையின் பெற்றோர்
  • தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் குழந்தையின் பெற்றோர்
  • பெண் வார்டு உறுப்பினர்
  • கிராம செவிலியர்
  • தன்னார்வத் தொண்டு நிறுவன பிரதிநிதி

கல்வி குழவின் பணிகள்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 73வது திருத்தத்தின் 11வது அட்டவணையின்படி கிராம ஊராட்சியில் உள்ள ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி, தொழில் பயிற்சி, வயது வந்தோர்  போன்ற கல்வி நிறுவனங்களின் செயல்படுகளை கண்காணித்து மேம்படுத்த கிராம ஊராட்சிக்கு ஆலோசனை வழங்க வேண்டும் தரத்தை மேம்படுத்த கிராம ஊராட்சி உள்ள  ஆலோசனை வழங்க வேண்டும். 

கீழ்க்கண்ட பணிகளை  கல்வி குழு கண்காணிக்கும் 

  • 100 சதவீதம் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது மற்றும் பள்ளியில் இடைநிறுத்தம்  இல்லாத  சூழலை உருவாக்குதல் 
  • கிராம ஊராட்சியில் உள்ள குழந்தைகளுக்கு  தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்தல் 
  • கிராம ஊராட்சியில் உள்ள குழந்தைகள் பாதியில் படிப்பை நிறுத்தும் மாணவர்களை பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல் 
  • ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணித்தல்.
  • கிராம ஊராட்சியில் உள்ள பள்ளியின் உட்கட்டமைப்புகளை மேப்படுத்துதல் மற்றும்  மக்களின் பங்கேற்பு உறுதி செய்தல்
  • மாதத்திற்கு ஒருமுறை கிராம ஊராட்சி தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக கல்விக்குழுவினர் ஆகியோர் உடன் இணைந்து  பள்ளியின் கழிப்பறைகள் வகுப்பறை மற்றும்  பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள் வேண்டும் 
  • அரசு வழங்கும் காலை உணவு மற்றும் மதிய உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தல் 
  • மாற்றுத்திறனாளிகளாக உள்ள குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்வதற்கும் அவர்களுக்கான கற்ற சூழலை ஏற்படுத்துவதற்கும் உதவிகளை வழங்குதல் அவர்களுக்கான சிறப்பு பள்ளிகளுக்கு ஏற்பாடு செய்தல்.
  • கல்வி உதவித்தொகை, இலவச சீருடை, பாட புத்தகங்கள், காப்பீடு திட்டம், கற்றல் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள், மதிய உணவு ஆகிய குழந்தைகளுக்கு சரிவர கிடைக்கிறதா என்பதை கண்காணித்தல் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்ய செய்தல்

இவற்றையெல்லாம் கண்காணிக்கவும் செயல்படுத்தவும் கிராம ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கல்வி குழுவின் பணிகள் ஆகும்

Leave a Reply