கிராம சபை Grama Sabha (அறிவோம்)
கிராம சபை
ஊர் கூடி தேர் இழுத்தால் என்ற பழமொழிக்கேற்ப மக்களாட்சித் தத்துவத்தை அடித்தளமாக விளங்குவது கிராமசபை ஆகும்.
கிராம ஊராட்சியில் வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிர்வாகத்தை மேம்படுத்தவும். கிராம ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை திட்டமிடவும் அதற்கான திட்டங்களை செயல்படுத்தவும். பல்வேறு தரப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும். கிராம ஊராட்சியில் உள்ள பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கவும். ஒவ்வொரு கிராம ஊராட்சியில் பயனுள்ள கிராம சபை அமைக்கப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சியில் வசிக்கும் 18 வயது நிரம்பிய அந்த கிராம ஊராட்சியில் உள்ள வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட நபர்கள் கிராம சபையின் உறுப்பினர்கள் ஆவார்கள். இந்திய அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 1992 சட்டப்பிரிவு-2(13) சட்டப்பிரிவு-3படி கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் உறுப்பினர்களாக கொண்டது கிராமசபை ஆகும்.
கிராம சபை நோக்கம்
- மக்களாட்சி: கிராம சபைகள் ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு. கிராம மக்கள் தங்கள் கிராம வளர்ச்சித் திட்டங்களைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் போன்ற தங்கள் சொந்த விவகாரங்களில் பங்கேற்கவும் நிர்வகிக்கவும் மற்றும் அவர்களைப் பாதிக்கும் முடிவுகளைத் தவிர்க்கவும் பஞ்சாயத்து நிர்வாகத்தை நேர்மையுடன் கொண்டு வருவதில் வாக்காளர்கள் அனைவரும் பங்கேற்கும் ஜனநாயக அமைப்பாகும்.. ஊராட்சி திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில் மக்கள் தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் வெளிப்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
- வெளிப்படைத்தன்மை: கிராம சபைகள் ஊராட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துகின்றன. ஊராட்சி திட்டங்கள் மற்றும் வரவு செலவுத் திட்டங்கள் பற்றிய தகவல்கள் மக்களுக்கு கிடைக்கின்றன மேலும் அவர்கள் நிர்வாகத்தை கேள்வி கேட்கலாம்.
- பொறுப்பு: கிராம சபைகள் ஊராட்சி நிர்வாகத்தை பொறுப்புடன் செயல்பட ஊக்குவிக்கின்றன. ஊராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தங்கள் செயல்களுக்கு மக்களிடம் பொறுப்புக்கூற வேண்டும்.
-
கிராம சபை கூட்டம் கிராம ஊராட்சி தலைவரால் நடத்தப்பட வேண்டும், தலைவர் இல்லாத நிலையில் துணைத் தலைவரால் கூட்டத்தை நடத்த வேண்டும். ஒருவரும் இல்லாத நிலையில் ஊராட்சிகளின் ஆய்வாளர் கூட்டத்தை நடத்துவார்
வெளிப்படையான பொறுப்பான நிர்வாகத்தை ஊக்குவித்தல் கிராம சபையின் நோக்கமாகும். அனைத்து வாக்காளர்களும் பங்கேற்கும் அமைப்பாக கிராமசபை விளங்குகிறது.
ஊராட்சி நிதி வருவாயை செலவினங்களை பங்கேற்பு மூலமாக ஒப்புதல் அளித்து கிராமத்தின் திட்டங்களை கண்காணிப்பது கிராம சபையின் கடமையாகும்
சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் முடிவெடுப்பதில் பொதுமக்கள் நேரடியாக பங்கேற்பதை ஊக்குவித்தல் போன்றவை கிராம சபையின் கடமை ஆகும் -
பயனாளிகள் தேர்வு மற்றும் சமூகப் பங்கேற்பு மூலம் அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் உள்ளீடுகளுடன் திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்தவும். சமூக தணிக்கை மூலம் நிதி திட்டங்களின் செயல்திறனை கண்காணித்தல் மற்றும் அதற்கான வழிகளை வகுத்தல்
கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம்
கிராம ஊராட்சியின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் கிராம ஊராட்சியில் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஏற்படுத்தவும் தேவையான நோக்கங்களை திட்டமிட்டு அவற்றின் நிறைவேற்றிட உரிய ஆதாரங்களை ஒருங்கிணைத்து கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். மேற்கண்ட வழிமுறைகளின் படி தயாரிக்கப்பட்ட வளர்ச்சி திட்டத்தை அனைத்து துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலர் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள், திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கிராம சபை கூட்டத்தில் தாக்கல் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்திறக்கு அனுமதி பெற வேண்டும். இது கிராம சபையின் முக்கியமான பணிகளில் ஒன்றாகும்