குழந்தை உரிமைகள் Child Rights
1989 ஆம் ஆண்டு குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கையில் குழந்தைகளின் சிறந்த நலனை பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறது
சமூகப் பிரச்சினைகள்
என் குழந்தையை எப்படிப் பார்த்துக் கொள்வது என்று எனக்குத் தெரியும். பள்ளிக்கு சரியாக வராததால் அடித்துள்ளார். எனக்கு பெண் குழந்தை வேண்டாம், கருவை கலைத்து விடுங்கள். என் மகன் என் குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு செல்கிறான். மகளுக்கு 17 வயது ஆகிறது அவளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள், பெரியவர்கள் அனைவரும் இருக்கும் இடத்தில் நீங்கள் (குழந்தைகள்) கருத்துகளை கூறக்கூடாது
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வார்த்தைகளும் சமூகத்தில் பொதுவான வார்த்தைகள், அவற்றை நாம் எளிதில் கடந்து செல்ல முடியாது. குழந்தைகளுக்கு எதிரான மன மற்றும் உடல்ரீதியான துஷ்பிரயோகம், குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர், பெண் சிசுக்கொலை, குழந்தைத் தொழிலாளர், ஊனமுற்ற குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, தெருவோரக் குழந்தைகள், குழந்தை கடத்தல், குழந்தைகள் பிச்சை எடுப்பது, பாலியல் சுரண்டல் போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குழந்தைகளுக்கு எதிராக உள்ளன.
இரண்டாம் உலகப்போர்
இப்போதும் இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் உள்நாட்டுப் போர் போன்ற மோதல்களால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இரண்டாம் உலகப்போர் 1939-ல் தொடங்கி 1946-ல் முடிந்தது. இந்தப் போரின் மோசமான விளைவுகளைச் சந்தித்த ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி இன்னும் அங்கு வீசப்பட்ட குண்டுகளால் பாதிக்கப்பட்டு இப்போது அந்த நகரங்களில் குழந்தைகள் ஊனத்துடன் பிறக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபை
போரின் மோசமான விளைவுகளைக் கண்டு உலக நாடுகள் ஒன்று கூடி 1946ல் ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கின. அனைத்து மனிதர்களின் உரிமைகளையும் சமத்துவத்தையும் மனிதகுலத்தின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அதன் பல்வேறு அமைப்புகள் மூலம் வெளியிடப்பட்டது
கண்ணியம், சமத்துவம் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே சுதந்திரம், சமூக நீதி மற்றும் அமைதியை உறுதி செய்ய முடியும் என்ற கண்ணோட்டத்துடன் 1948 ஆம் ஆண்டு மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்த ஆவணம் வெளியிடப்பட்ட பின்னர் உலகின் அனைத்து நாடுகளும் அடிப்படை மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டதன் விளைவாக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து குழந்தைகளுக்கும் உரிமைகள் உள்ளன என்று விவாதித்தன.
குழந்தைகளின் உரிமைகள் பற்றிய சர்வதேச மாநாடு (UNCRC)
குழந்தைகளின் உரிமைகளும் மனித உரிமைகள் என்ற அடிப்படையில் 1989 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச சிறுவர் உரிமைகள் மாநாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையால் சட்டமாக அங்கீகரிக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்திற்கு இந்தியா உட்பட பல நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தில் 54 சட்ட பிரிவுகள் உள்ளன அவை குழந்தைகளின் சிறந்த நலன்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட வேண்டிய சட்டங்களை ஐ.நா சபை அவற்றை முன்வைத்துள்ளது. இந்த மாநாட்டில் கையொப்பமிட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும், இதன்படி குழந்தைகளின் உரிமைகள் மற்றும் அவர்களின் நலன் குறித்த அதன் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை ஐநா சபைக்கு இந்தியா சமர்ப்பிக்க வேண்டும்.
குழந்தைகளின் உரிமைகள் பற்றிய சர்வதேச மாநாடு, குழந்தை உரிமைகள் மனித உரிமைகள் என்றும், குழந்தைகள் நலனுக்கு ஒவ்வொரு நாளும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. இது குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான சர்வதேச மாநாட்டின் முதன்மை நோக்கமாகும். மாநாடு பின்வரும் நான்கு அடிப்படை உரிமைகளை வலியுறுத்துகிறது.
உயிர் வாழும் உரிமை (Right to live)
வளர்ச்சிக்கான உரிமை (Right to develop)
பாதுகாப்புக்கான உரிமை (Right to protect)
பங்கேற்பதற்கான உரிமை (Right to participate)
குழந்தைகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் குழந்தைகளின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் குழந்தைகளின் நலன் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
Right to provision வழங்குவதற்கான உரிமை (அளித்தல்)
Right to protection பாதுகாப்பு உரிமை (அணைத்தல்)
Right to participation பங்கேற்பதற்கான உரிமை (அழைத்தல்)
இவை ஒவ்வொரு நாளும் குழந்தைகள் தங்களுடைய நலனுக்காகவும் உயிர் வாழ்வதற்கான உரிமையை பெற்று தன்னுடைய வாழ்நாளில் வளர்ச்சி அடைந்து பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்ந்து அனைத்துவிதமான நிகழ்வுகளில் பங்கேற்பது குழந்தைகளின் உயர்ந்தபட்ச நலனை காக்கும் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை அரசு உறுதிப்படுத்தவும் இதில் பாகுபாடு இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கி கொள்கைத் திட்டங்களை உருவாக்க வேண்டும் குழந்தை உரிமையும் மனித உரிமையே என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.