சுய உதவிக்கு குழு தெரியும்! உயிரிப்பல்வகைமை மேலாண்மை குழு (BMC) பற்றி தெரியுமா?
சுய உதவிக்கு குழு தெரியும்! உயிரிப்பல்வகைமை (பல்லுயிர்) மேலாண்மை குழு (biodiversity management committee) பற்றி தெரியுமா?
சுய உதவிக் குழு என்பது நமக்கு நன்கு தெரிந்த பெண்களின் சமூக பொருளாதர முன்னேற்றம் அடையு உதவும் ஓர் அமைப்பு ஆனால் உயிரிப்பல்வகைமை மேலாண்மை குழு என்ற சொல் சற்று புதிதாக இருக்கலாம் ஆம் உயிரிப்பல்வகைமை மேலாண்மை குழு என்றால் என்ன? அதை பற்றிய விவரிவான இந்த செய்தி தொகுப்பை இங்கு காணலாம்
சுயஉதவிக்குழு என்பது இந்தியாவில் உள்ள கிராமங்களில் உள்ள பெண்களை மையமாகக் கொண்ட குழுவாகும் இந்த குழுவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மற்றும் சமூக பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்களையும் ஒன்றிணைத்து குழுக்களை உருவாக்கி அவர்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி குழுவில் உள்ள மகளிர் அனைவரும் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டை அடைய நடவடிக்கை எடுப்பதே இக்குழுவின் நோக்கமாகும்.
குழுவின் செயல்பாடுகள்
ஒற்றுமை
பெண்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி அவர்களுக்கு ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கும் வகையில் ஒரு பெண்கள் நேய சமூகத்தை உருவாக்குதல் இந்த குழவின் முக்கிய நோக்கம் ஆகும்
அதிகாரமளித்தல்
பெண்களுக்கு தங்கள் வாழ்க்கையில் முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்குதல் மற்றும் அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்தல்.அரசியல் பங்கேற்பு போன்ற
குழுவின் செயல்பாடுகள்
சிறுசேமிப்பு கடன் வழங்குதல் தொழில்பயிற்சி, சுகாதாரவிழிப்புணர்வு போன்றவை.
பயன்கள்
பொருளாதார சமூக மேம்பாடு , பெண்களின் அதிகாரமளிப்பு.
உயிரிப்பல்வகைமை மேலாண்மை குழு
இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் இந்த பூமியில் வாழும் மற்ற உயிரணங்ககளை பாதுகாத்தது உணவு சங்கிலியின் சம நிலயை பாதுகாத்தது காலநிலை மாற்றத்தை தடுத்து மற்றும் உயிர் வளங்களின் பயன்பாட்டினை சரிசமமாக பகிர்ந்து அந்த பகுதியில் உள்ள பல்லுயிர் வளங்களை பாதுகாத்து அழிவின் விளம்பில் உள்ள உள்ளூர் வளங்ககளை பாதுகாத்து நிலைபேறாத தன்மையை நிர்வகிப்பது தான் இந்த குழவின் நோக்கம் ஆகும்
நோக்கம்
இந்த குழு அந்த பகுதியில் உள்ள தாவரங்கள், விலங்குகள், நீர்நிலைகள், வனவளங்கள் போன்ற அனைத்து உயிர் உள்ள உயிரினங்களும் உயிரற்ற சூழல் அமைப்பு உயிரியல் வளங்களைப் பாதுகாத்தல் ஆவணப்படுத்துதல் மற்றும் சமமாகப் பகிர்தல் போன்றவற்றை செயல்படுத்துதல் இக் குழுவின் நோக்கம் ஆகும்.
அமைப்பு
உயிரிப்பல்வகைமை சட்டத்தின் 41-வது பிரிவின்படி ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பு அதன் பகுதிக்குள்ளாக ஒரு உயிரிப் பல்வகை மேலாண்மை குழுவை அமைக்க வேண்டும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றக் கூட்டத்தின் தீர்மானத்தின்படி நிர்வாகக் குழு அமைக்கவேண்டும் கிராம ஊராட்சி அளவில் அந்தந்த பகுதி மக்களையும் பிரதிநிதிகளாகக் 7 நபர்களை கொண்ட இந்த குழு அமைக்கவேண்டும்.
குழுவின் கட்டமைப்பு
உயிரிப்பல்வகைமை மேலாண்மை குழுவின் கட்டமைப்பு உறுப்பினர்கள் மொத்தம் ஏழு நபர்கள் இருக்க வேண்டும் குறிப்பாக கிராம ஊராட்சியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும்.
- தலைவர் உறுப்பினர்களில் இருந்து ஒரு நபர் தேர்ந்தெடுக்கபட வேண்டும்.
- மகளிர் உறுப்பினர் மூன்றில் ஒரு பகுதி (3/1) இருக்க வேண்டும்.
- (எஸ்சி/ எஸ்டி) SC/ST பிரிவைச் சார்ந்த உறுப்பினர்கள் 18 சதவீதம் இருக்க வேண்டும்.
செயல்பாடுகள்
உயிரிப்பல்வகைமை மேலாண்மை குழுவின் பொறுப்புகள்
வனப்பகுதிக்கு வெளியே உள்ள உயிரியல் வளங்களை பாதுகாத்தல் மற்றும் சூழல்களை நிலைத்து நீடித்து இருக்க வழிவகை செய்தல்.
முதனமையான மற்றும் முக்கிய பொறுப்புகள்
மக்களின் உயிரிப்பல்வகமை பதிவேடு தயாரித்தல், அங்கீகரித்தல் மற்றும் பாதுகாத்தல்
அறிவுசார் சொத்து மற்றும் பாரம்பரிய அறிவு மக்களின் அறிவு பற்றிய தகவல்களை ஆவணப்படுத்துதல் மற்றும் உள்ளூர் பல்லுயிர் பிரச்சனைகள் தொடர்பாக இந்திய அளவில் மாநில பல்லுயிர் வாரியம் மற்றும் பல்லுயிர் ஆணையத்திற்கு துல்லியமான தகவல்களை வழங்குதல்.
தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் புனித தோப்புகள் (ஐயனார் கோயில்) மற்றும் கோயில் குளங்கள் போன்ற பல்லுயிர் பாரம்பரிய தளங்களின் மேலாண்மை செய்தல்.
வணிக ரீதியாக உயிரில் வளங்கள் மற்றும் அதன் தொடர்புடைய வளங்களை பயன்படுத்தும் போது அதன் மூலம் பெறப்படும் லாபத்தினை சட்டத்தின் விதிமுறைகளை உட்பட்டு நியாயமான முறையில் சமமான முறையில் பகிர்ந்து அளித்தல்.
பயன்கள்
இயற்கை வளங்களை பாதுகாத்தல், சுற்றுச்சூழல் சமநிலையை பேணுதல், உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்.
இரண்டையும் ஒப்பிடும் போது
சுய உதவி குழுக்கள் மனிதர்களின் நலனை முக்கியமாகக் கொள்கின்றன உயிரிப்பல்வகைமை மேலாண்மைக் குழுக்கள் இயற்கை வளங்களின் பாதுகாப்பை முக்கியமாகக் கொள்கின்றன.
சுய உதவி குழுக்கள் பொதுவாக சிறிய அளவில் செயல்படுகின்றன. பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியை உள்ளடக்கியதாக இருக்கும்.
செயல்பாடுகள்
இரண்டுமே உள்ளூர் அளவில் செயல்படுகின்றன என்றாலும் அவற்றின் செயல்பாடுகள் முற்றிலும் வேறுபட்டவை
முடிவு
சுய உதவி குழுக்கள் மற்றும் பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் இரண்டும் சமூக மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுய உதவி குழுக்கள் மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தினால், பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் இயற்கை வளங்களை பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்கு நல்ல ஒரு வாழ்க்கையை உருவாக்குகின்றன.
இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை
ஒரு பகுதியின் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட்டால், அந்த பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்.
சுய உதவி குழுக்கள் மூலம் இயற்கை வள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
எனவே இந்த இரண்டு குழுக்களும் ஒன்றை ஒன்று பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட வேண்டும்.
பட உதவி திரு.வெங்கடேஷ். G அவர்கள் (FRO தமிழ்நாடு வனத்துறை)