மக்கள் உயிரிப்பல்வகைமை பதிவேடு (People Biodiversity Register)
அறிமுகம்
உலக அளவில் மனிதன் ஏற்படுத்திய தாக்கம் உயிரிப்பல்வகமையை வெகுவாக குறைத்துள்ளது குறிப்பாக வனப்பகுதியின் இழப்பு, பூச்சி, தாவரங்கள், அந்நிய நாட்டின் தாவரங்களின் ஆக்கிரமிப்பு ஏதாவது ஒரு சிறிய உயிர்ப்பல்வகைமை குறைவாகவோ அல்லது அதிகமாக இருத்தல் சில உயிர் பல்வகை அச்சுறுத்துவ நிலையில் இருத்தல் போன்றவை அந்தப் பகுதியில் காணப்படும் சில அச்சுறுத்தல்கள் உயிரிப்பல்வகமையை குறித்தான தகவல்கள் இருந்தால் நிலையான மேலாண்மை மூலம் ஓரளவு சரி செய்ய இயலும் ஆனால் இயற்கை சூழல், காலநிலை மாற்றம் பேரிடர்கள் போன்றவாற்றல் ஏற்படும் பாதிப்புகள் இருந்து உயிரிப்பல்வகமையை காப்பாற்ற மிகவும் கடினமான செயலாகும்.
மக்கள் உயிரிப்பல்வகமை பதிவேடு
இன்று பல தரப்பட்ட மக்கள் தங்களின் உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல்வேறு சிகிச்சை முறையை மேற்கொண்டு இருக்கின்றனர் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நமது முன்னோர்கள் நோய்களை குணப்படுத்த சித்த, ஆயுர்வேதா, யுனானி போன்ற மருத்துவ முறைகளை பின்பற்றி வந்தனர் தற்போது கூட உலக அளவில் மிகவும் பிரபலமான யோகா கலைகள் போன்றவை மனிதர்களின் உடல் நல பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன
இந்த மருத்துவ முறைகள் நமக்கு நம் முன்னோர்கள் கொடுத்த நன்கொடையாகும் இந்த மருத்துவமனைகளில் நமக்கு அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்கள் மூலிகை தாவரங்கள் உயிரினங்கள் போன்றவை ஆகும் இன்று நாம் உண்ணுகிற உணவுகள் காய்கறிகள், கீரைகள், கோழி, மீன் போன்றவை நம் உடல் நலத்தை பேணிக் காக்கும் நல வாழ்விற்கும் உயிரிபலவகாமையை சார்ந்து இருக்கிறோம். உலகளவில் இந்த மருத்துவ சிகிச்சையின் மருந்துகள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன வணிக ரீதியிலான இந்த வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
உயிர்ப்பல்வகைமை பதிவேடுகளின் அவசியம் ஏன்?
இந்தியாவில் நிறைவேற்றபட்ட உயிரிப்பல்வகைச் சட்டம்-2002 பிரிவு 41 இன் படி இந்தியாவில் உள்ள கிராம, நகரப் பகுதியில் காணப்படும் மூலிகை தாவரங்கள்,உயிரினங்கள் மற்றும் வனப்பகுதியில் காணப்படும் தாவரங்கள், உயிரினங்கள் வனமல்லாத பகுதியில் காணப்படும் தாவரங்கள், உயிரினங்கள் இவற்றின் நிலையை அறிந்து கொள்ள இந்த பதிவேடுகள் மிகவும் அவசியமாகும் இந்த பதிவேடுகளை ஆவணப்படுத்தவேண்டும் என இந்த சட்டம் வலியுறுத்துகிறது.
பாரம்பரிய அறிவு
இந்த உயிர்ப்பல்வகைமை பதிவேடுகள் நவீன அறிவியலையும் மக்களின் பாரம்பரிய அறிவையும் ஒருங்கிணைக்கும் வகையில் தகவல் சேகரிப்பில் படிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் உள்ளூர் அளவிலான உயிரி மூலங்களின் நிலையை அறிதல் அவற்றின் முழுமையான தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கும் இந்த பதிவேடுகள் கீழ் கொண்ட தகவல்களை கொண்டிருக்கும் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, பற்றிய மக்களின் பாரம்பரிய அறிவு அப்பகுதியில் உள்ள நிலம் மற்றும் நீர் நிலைகளின் அமைப்பை பற்றிய விவரம். சுற்றுச்சூழல் மேலாண்மை பிரச்சினைகளின் மேல் மக்களின் பார்வை மக்களின் உயிர்ப்பல்வகைமை சார்ந்து இருக்கும்.
இந்த விவரங்கள் நமது முன்னோர்களின் பாரம்பரிய அறிவு அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த உயிர்ப்பல்வகைமை பதிவேடுகள் விவரங்கள் கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக ஏடிஎஸ் கொசுவினால் ஏற்படும் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை முறையில் சித்த மருத்துவத்தின் நிலவேம்பு குடிநீர் அந்த நோயின் தாக்கத்தை குறைப்பது போன்ற பல்வேறு நமது முன்னோர்களின் அறிவு அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்த உயிர்ப்பல்வகைமை பதிவேடு அமைக்கப்பட்டுள்ளது.
உயிர்ப்பல்வகைமை மேலாண்மை குழுக்கள் (BMC)
இந்தப் பதிவேடுகளை ஆவணப்படுத்துவதற்கு உள்ளூர் அளவில் உயிர்பல்வகைச் சட்டத்தின் படி உயிர்ப்பல்வகைமை மேலாண்மை குழுக்கள் என்ற குழுக்களை அமைக்க வேண்டும். இந்த குழுக்கள் இந்த பதிவேடுகளை தயாரித்து ஆவணப்படுத்தும் ஒரு குழுவாகும். இந்த குழுக்கள் ஒவ்வொரு நகர மற்றும் கிராமப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த குழுவினர் தங்கள் எல்லைக்குட்பட்ட கிராம, நகரப் பகுதியில் பாரம்பரிய அறிவுடைய நாட்டு வைத்தியர்கள், கை வைத்தியர்கள் பாரம்பரிய மருத்துவத்தில் ஈடுபட்டிருக்கும் நபர்களை மற்றும் வேளாண்மை காடுகள், மரங்கள், நீர் வாழ் உயிரினங்கள் பற்றிய விவரங்களை அறிந்திருக்கும் பாரம்பரிய அறிவுமிக்க நபர்களின் தகவல்களை சேகரிக்கும் இந்த தகவல்களை சேகரித்து உயிர்ப்பல்வகைமை பதிவேட்டில் ஆவணப்படுத்தும்
32 வகையான தகவல் சேகரிப்பு படிவங்கள்
உயிர்ப்பல்வகைமை பதிவேட்டில் 32 வகையான தகவல் சேகரிப்பு படிவங்கள் உள்ளன.
அவற்றில் கிராம நகரப் பகுதியில் வனப்பகுதியில் காணப்படும் பொதுவான தகவல்கள்
பொது குறிப்புகள், சமூக பொருளாதார குறிப்புகள், மக்கள் தொகை, குடிநீர் ஆதாரங்கள் வகைகள், விவசாய நிலையம் பற்றிய விவரங்கள்,
அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் தொழில்கள் அப்பகுதியில் காணப்படும் இயற்கை வளங்கள், உயிரற்ற, இயற்கை வளங்கள் நில ஆதாரங்கள், விவசாய நிலம் சதுப்பு நிலங்கள், தரிசு நிலம், ஆறுகள், கால்வாய், சிற்றோடைகள், காடுகள், புதர் காடுகள சார்ந்த நிலம், சோலைகள், குளங்கள், வனப்பகுதியின் சிறப்பு இயல்புகள் மலைப்பகுதி, வறண்ட நிலம், நிலச்சரிவு பகுதி, கடல் பகுதிகள், மேற்பரப்பு நீர் வளம், போன்ற பல்வேறு விவரங்களை உள்ளடக்கியதாக இந்த மக்கள் உயிரிப் பல்வகை பதிவேடு இருக்க வேண்டும்.
தேசிய உயிர்ப்பல்வகைமை ஆணையம்
இந்த உயிர்ப்பல்வகைமை பதிவேடுகள் தேசிய உயிர்ப்பல்வகைமை பதிவேடுகள் ஆணையம் வடிவமைத்து ஒவ்வொரு கிராம ஊராட்சி அளவிலும் இதை ஒவ்வொரு நகர மற்றும் கிராமப் பகுதிகளில் ஆவனப்படுத்த படவேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது