மனித மூளையை உண்ணும் அமீபா free-living cell (Naegleria fowleri)

மனித மூளையை உண்ணும் அமீபா

மனித மூளையை உண்ணும் அமீபா என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் ஆனால் அது என்ன? உண்மையில் அமீபா உண்ணி  மூளையை சாப்பிடுகிறதா?

கேரளாவில் கடந்த சில மாதங்களில் பல்வேறு உடல் உபாதைகளால் மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் அந்த 3 சிறுவர்களின் மரணத்திற்கான காரணத்தை டாக்டர்கள் சொன்ன வார்த்தைகள் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது? மூளையை பாதிக்கும் அமீபாவால் பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இறந்த மூன்று குழந்தைகளும் அருகிலுள்ள ஆற்றில் அல்லது நீச்சல் குளத்தில் குளித்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர் இந்த மூன்று சிறுவர்களின் மரணம் இந்த தொற்று எவ்வளவு ஆபத்தானது என்பதை நமக்கு காட்டுகிறது. 

இந்த அமீபா உண்மையில் உங்கள் மூளையை உண்பதில்லை.இருப்பினும் நெக்லேரியா நோய்த்தொற்று கடுமையான மூளை பாதிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் இது பெரும்பாலும் மரணத்திற்கு வழிவகுக்கும் இந்த நோய் தொற்றின் முதல்நிலை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM primary amebic meningoencephalitis) என்று அழைக்கப்படுகிறது.

Naegleria fowleri

இந்த அமீபாவின் அறிவியல் பெயர் Naegleria fowleri இது சூடான நன்னீர் மற்றும் மண்ணில் காணப்படும் ஒரு சிறிய ஒற்றை செல் உயிரினமாகும்.

மிதமான வெதுவெதுப்பான நன்னீர் பகுதிகளான ஏரிகள்,ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற பிற நீர் ஆதாரங்களில் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது ஆனால் இவைகள் அரிதாகவே நோய் தொற்றை ஏற்படுத்துகிறது சில நேரங்களில் நீந்தும்போது அல்லது குளிக்கும்போது பொதுவாக தொற்று ஏற்படுகிறது. நெக்லேரியா ஃபோலேரி அமீபா  மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்து, பின்னர் மூக்கிலிருந்து மூளைக்குச் சென்று இனப்பெருக்கம் செய்து தொற்றுநோயை ஏற்படுத்தத் தொடங்குகிறது.

ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால், அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதன் மூலம் அமீபா மனிதர்களுக்கு பரவாது. பராமரிக்கப்படாத நீச்சல் குளங்கள் அசுத்தமான ஏரி, ஆறு, குளங்கள் நேக்லேரியா ஃபோலியேரி வெதுவெதுப்பான நீரில் செழித்து வளரும் மற்றும் 115 டிகிரி பாரன்ஹீட் (46டிகிரி செல்சியஸ்) வெப்பநிலையில் வளரக்கூடியது எனவே கோடையில் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நெக்லேரியா பெரும்பாலும் வெப்பமான காலநிலை உள்ள நாடுகளில் பிராந்தியத்தில் காணப்படுகிறது

நெக்லேரியா நோய்த்தொற்றின் அறிகுறிகள்

அமீபா தொற்று ஏற்பட்ட முதல் 24 மணி நேரம் முதல் 14 நாட்களுக்குள் பின்வரும் ஆரம்ப அறிகுறிகள் தோன்றும்.இவை மூளைக்காய்ச்சலின் அறிகுறிகளுக்கு ஒத்தவையாக இருக்கும் மற்றும் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம் காய்ச்சல், கடுமையான தலைவலி, குமட்டல் அல்லது வாந்தி ஆரம்ப அறிகுறிகள் தோன்றியவுடன், தொற்று வேகமாக பரவுகிறது.

இந்த அமீபா வேகமாக வளரக்கூடியது என்பதால் அறிகுறி தோன்றிய 1 முதல் 18 நாட்களுக்கு கழுத்து விறைப்பு, சுற்றுப்புறங்களில் கவனக்குறைவு, சமநிலை இழப்பு மற்றும் மாயத்தோற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தும் ஐந்து நாட்களுக்குப் பிறகு கோமா மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

தொற்றுநோயைத் தடுப்பது எப்படி?

உங்களுக்கு Naegleria தொற்று இருக்கலாம் என நீங்கள் நினைத்தால் உங்கள் சுகாதார மருத்துவரைப் பார்க்க காத்திருக்க வேண்டாம் உடனே சென்று பார்க்க வேண்டும். அமெரிக்காவில் வருடத்திற்கு சுமார் பத்து பேரை இந்த தொற்று பாதித்து அதிக இறப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன இந்த தொற்றை ஆண்டிபயாடிக் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.ஆனால் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அமீபியாசிஸ் உயிருக்கு ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்தும். நீங்கள் சமீபத்தில் ஏதேனும் ஆறு, குளம் போன்ற்வற்றில் குளித்து  இருந்திருந்தால் மருத்துவர்க்கு தெரியப்படுத்துங்கள்.

Naegleria தொற்று மிகவும் அரிதானது, ஆனால் நீங்கள் தண்ணீரில் நேரத்தை செலவிடும்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது எப்போதும் நல்லது. 

ஏரிகள் மற்றும் குளங்கள் போன்ற சூடான நீர் நிலைகள் மற்றும் குறைந்த நீர் நிலைகள் ஆகியவை நோய் தொற்றுக்கு காரணம் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன குறிப்பாக வெப்பமான காலநிலையில் நன்னீர் ஏரிகள், ஆறுகள் அல்லது ஓடைகளில் நீந்துவதையோ அல்லது குதிப்பதையோ தவிர்க்கவும்.

உங்கள் ஆபத்தை குறைக்க சில குறிப்புகள் இங்கே உள்ளன

நீங்கள் ஆற்றில் நீந்த திட்டமிட்டால், உங்கள் தலையை தண்ணீருக்கு மேல் வைக்க முயற்சி செய்யுங்கள். மூக்கு கிளிப்களைப் பயன்படுத்தவும் அல்லது உங்கள் விரல்களால் மூக்கை மூடவும். புதிய நீரில் நீந்தும்போது, ​​கிருமி நீக்கம் செய்யப்பட்ட குளங்களில் மட்டுமே நீந்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நீர்நிலைகள் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்

நோய் பரவாமல் தடுக்க அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை குளோரின் மூலம் சுத்தம் செய்து கண்காணிக்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும், விழிப்புணர்வோடு இருக்கவும் இந்தத் தகவலை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் தகவல் எழுதப்பட்டுள்ளது

 

 

Leave a Reply