14 நிமிடத்தில் வந்தே பாரதத்தை சுத்தம் செய்யும் முறை?

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சமீபத்திய செய்தி 

இந்தியாவில் ரயில் பயணிகளின் வசதியை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இங்கு வந்தே பாரத் என்ற ரயில் சேவையை இந்திய அரசு தொடங்கியுள்ளது வழக்கமாக ரயில் சேவையில் மாநிலங்களில் உள்ள தலைநகரில் இருந்து மற்ற மாநிலங்களில் உள்ள நகரத்திற்கு முழு வசதியுடன் கூடிய ரயில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில்  600 கிமீகளை குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரத்தில் மாநிலத்தில் உள்ள நகரை அடைந்து  மீண்டும் அதே பாதையில் மாநிலத்தின் தலைநகரை அடைகிறது (எ.கா. இந்த ரயில் சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு நெல்லை சென்றடைந்து மீண்டும் 1 மணி நேர இடைவெளியில் சென்னைக்கு புறப்படும்) இந்த இடைபட்ட நேரத்தில் ரயிலை சுத்தம் செய்வதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது அதாவது ரயிலின் தூய்மையை மேம்படுத்துவது குறிப்பாக கழிவறைகளை சுத்தம் செய்வதிலும் ஆறு மணி நேர பயணத்தில் ரயிலில் ஏற்படும் மாசுபாட்டையும் சுத்தம் செய்யவும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நேரப்படி ரயிலை இயக்கவும் குறைந்த நேரத்தில்  ரயிலை சுத்தம் செய்வது மற்றும் தேவையான ஆட்கள்  திட்டம் நேர மேலாண்மை கொண்டு  செயல்படுத்தப்படுகிறது.

14 நிமிட அதிசயம்

இந்திய ரயில்வே வந்தே பாரத் ரயில்களின் சுத்தம் செய்யும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியது தற்போதைய நேரமான 45 நிமிடங்களில் இருந்து வெறும் 14 நிமிடங்களாக குறைக்கிறது “14 நிமிட அதிசயம்” என்று அழைக்கப்படும் இந்த முயற்சி ஆனந்த் விஹார் (டெல்லி) சென்னை,பூரி மற்றும் ஷீரடி உட்பட நாடு முழுவதும்-29 இடங்களில் தொடங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் ரயில்வே அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

தற்போது வந்தே பாரத் ரயில்களை சுத்தம் செய்ய 45 நிமிடங்கள் ஆகும், ஆனால் புதிய முயற்சி இந்த நேரத்தை மூன்றில் இரண்டு பங்கு குறைக்கும். அக்டோபர் 1- 2023 அன்று டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதிய இந்த முயற்சியைத் தொடங்குகிறார்.

புதிய தொழில்நுட்பம் எதுவும் இல்லாமல் 14 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று அமைச்சர் கூறினார் வந்தே பாரத் முதல தொடங்கி மற்ற ரயில்களிலும் இதே சுத்தம் செய்யும் முறையை மெதுவாகவும் படிப்படியாகவும் பயன்படுத்துவோம் என்றும் மற்றும் நேரத்தை குறைத்து சரியான நேர அட்டவணைப்படி ரயிலை இயக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது எனவும் இதனால்  பயணிகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ரயில்வே அமைச்சர் கூறினார்.

14 நிமிட அதிசயம் வந்தே பாரதத்தை எப்படி சுத்தம் செய்யும்?

வந்தே பாரத் ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் மூன்று துப்புரவு பணியாளர்கள் இந்த சுத்தம் செய்யும் செயல்முறைக்காக பயிற்சி பெற்றவர்கள் இருப்பரகள் ரயில்கள் முழுமையாகவும் விரைவாகவும் சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்ய ஊழியர்கள் சிறப்பு உபகரணங்கள் மற்றும் நடைமுறைகள் பயன்படுத்துவர்கள். அதிக ஆட்களை பணியமர்த்தாமல் தற்போதுள்ள துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து ஊக்குவிப்பதன் மூலம் புதிய துப்புரவு சேவை சாத்தியமாகியுள்ளது. வந்தே பாரத் ரயில்களின் வருகை நேரத்தைப் பொறுத்து வாரணாசி,காந்திநகர்,மைசூர்மற்றும் நாக்பூர் போன்ற மற்ற ரயில் நிலையங்களில் இந்த சேவை தொடங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

Leave a Reply