ஒரே ஓவரில் சூர்யகுமார் யாதவ் 6,6,6,6
சூரியகுமார் யாதவ் வைரல் வீடியோ
இந்தூரில் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர்-25) நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர் (6,6,6,6) அடித்த இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் தனது கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரைப் பதிவு செய்தார்.
மட்டைப்பந்து என்று தமிழில் அழைக்கப்படும் கிரிக்கெட் இந்தியாவில் உள்ள அனைத்து ஒவ்வொரு மூலை முடுக்கிலும் விளையாடப்படுகிறது. இதற்கு காரணம் 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி மேற்கு இந்திய அணியை விழுத்தி உலக கோப்பையை வென்றது அப்போதெல்லாம் கிரிக்கெட் 60 ஓவர் விளையாடினார்கள் பின்னர் 50 ஓவர் ஆக குறைக்கப்பட்டு ஒரு நாள் விளையாட்டு போட்டியாக விளையாடினார்கள் தற்பொழுது 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் ஆடி வருகிறார் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பல உலக சாதனைகள் அவ்வப்போது படைக்கப்பட்டு வருகிறது.
360 டிகிரி வீரர் சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ், ஆக்ரோஷமான மற்றும் அச்சமற்ற பேட்டிங் பாணிக்கு பெயர் பெற்ற இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன் ஆவார் அவர் 360 டிகிரி வீரர் என்று அழைக்கப்படுகிறார் சூர்யகுமார் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்களுக்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அடித்தார் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர் கேமரூனை கிரீன் ஓவரில் அடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணத்தை வழங்கினார்.
43-வது ஓவரில் கேமரூன் கிரீனை ஓவரை வீசும் போது போட்டி ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியது கிரீனின் ஓவரின் முதல் பந்தை யாதவ் சரியான கணித்து தாக்கினார் பந்து எல்லை கோட்டுக்கு ஒரு பெரிய சிக்ஸருக்கு பறந்தது. ஒரு வரலாற்று வெற்றித் தொடராக மாறப்போகும் முதல் காட்சியைக் கண்டபோது கூட்டம் மகிழ்ச்சியில் திளைத்தது.இன்னும் முடிவடையவில்லை இந்தூரில் உள்ள மக்கள் அனைவரும் யாதவ் அடிக்கும் காட்சியை ரசிக்கத் தயாராக இருந்தனர். அவர் தொடர்ந்து கேமரூன் கிரீன் வீசிய அடுத்த மூன்று பந்துகளை சரியான திசையில் எல்லை கோட்டுக்கு மேல் அடித்தார் ஒவ்வொரு பந்தும் ஆறும் (6) ஓட்டம் மாக மாறியது இதனால் இந்தியா அணி-399 ரன் இலக்க நிர்ணயம் செய்தது.
சாதனை பக்கத்தில்
இந்த நான்கு ஆறு ஓட்டங்கள் மூலமாக ஒரு புதிய சாதனையை சூரியகுமார் யாதவ் தனது கிரிக்கெட்டின் புத்தகத்தில் உள்ள சாதனை பக்கத்தில் எழுதிக் கொண்டார். யாதவ் மும்பை நகரில் சாதாரண தெருவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர் அவருடைய 360 கோணங்களில் விளையாடி கூடிய விளையாட்டு திறமையை பார்த்து அவருடைய தந்தை விளையாட்டு சென்டர்ரில் சேர்த்து விட்டார். அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ரஞ்சி ஆட்டத்தில் டெல்லிக்கு எதிராக தனது முதல் தர விளையாட்டில் அறிமுகமானார். அவர் மும்பை அணிக்காக 73 ஓட்டங்களை குவித்து முதல் ஆட்டத்திலே 50க்கு மேல் ஓட்டங்களை பெற்ற வென்ற பெருமையைப் பெற்றார்.இதன் தொடர்ச்சியாக இந்திய அணி வெற்றியில் மிக முக்கிய பங்கு ஆற்றி வருகிறார்.