10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது
2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு நிகழ்வில் தங்கப் பதக்கத்தைப் பெற்று இந்தியாவுக்கு உலக சாதனை படைத்தனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
ஆசியாட் என்று அழைக்கப்படும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இதில் ஆசிய நாடுகளின் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனை பங்குபெறும் விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இது சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் மேற்பார்வையில் ஆசிய ஒலிம்பிக் குழுவின் மூலம் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் 11 நாடுகள் சீனா, ஜப்ப,ன். தென்கொரியா, ஈரான், இந்தியா, கசகஸ்தான், தாய்லாந்து, வடகொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் தங்களுடைய நாட்டின் வீரர், வீராங்கனைகளை அனுப்புகிறது.இதன் முதல் போட்டி ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951 ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் நடைபெற்றது.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சூ நகரில் நடந்து வருகிறது. மகளிர் கிரிக்கெட், படகுப் போட்டி, ஏர் ரைபிள் என பல்வேறு போட்டிகள் நேற்று முதல் நடந்து வருகிறது. இதில் இந்தியா ஏற்கனவே 3 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
10 மீட்டர் ஏர் ரைபிள்
10 மீட்டர் ஏர் ரைபிள் என்பது ஒரு சர்வதேச துப்பாக்கி சுடும் விளையாட்டு நிகழ்வாகும், இது 4.5 மிமீ (0.177 அங்குலம்) காலிபர் ஏர் ரைஃபிளைப் பயன்படுத்தி 10 மீட்டர் (10.94 கெஜம்) தொலைவில் உள்ள புல்ஸ்ஐ இலக்கை நோக்கி 5.5 கிலோ (அதிகபட்ச எடை) சுடப்படுகிறது. 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து கோடைகால ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ள துப்பாக்கி சுடும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.
திவ்யன்ஷ் சிங் பன்வார், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் மற்றும் ருத்ராங்க் பாட்டீல் ஆகியோர் தங்கம் வென்றது மட்டுமல்லாமல் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு நிகழ்வில் தங்கப் பதக்கத்தைப் பெற்று இந்தியாவுக்கு உலக சாதனை படைத்தனர்.
2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்ததன் மூலம் வரலாற்றில் தங்கள் பெயர்களைப் பொறித்துள்ளனர். அவர்கள் புள்ளிகள் 1893. 7 பெற்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகுவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் முந்தைய சாதனையான 1893.3 புள்ளிகளை முறியடித்தனர்.
மேலும், கொரிய குடியரசு 1890.1 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. சீனா வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.