11 மாநிலங்களை இணைக்கும் மேலும் 9 வந்தே பாரத் ரயில்கள்

ரயில் போக்குவரத்து

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் பயன்பாட்டுக்காக ரயில் போக்குவரத்து உள்ளது இந்தியாவில் மக்கள் தங்கள் அன்றாட பயணத்தில் ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் ரயில் சேவையை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை தினம் தினம் கூடி வருகிறது.

இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் ஒருவர் பயணம் செய்ய விரும்பினால் அவர் பயண நேரம் குறைந்தது 28 மணி நேரம் ஆகும். மக்கள் தங்கள் பயணத் திட்டங்களை விரைவாக அடைய உதவுவதற்காக இந்திய அரசு வந்தே பாரத் என்ற ரயில் சேவையைத் தொடங்கியுள்ளது. பல்வேறு மாநிலங்களை இணைக்கும் வகையில் அதிவேக வந்தே பாரத் ரயில் சேவை அதிநவீன வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

9 வந்தே பாரத் ரயில்கள்

11 மாநிலங்களை இணைக்கும் மேலும் 9 வந்தே பாரத் ரயில்கள் செப்டம்பர் 24-ஆம் தேதி இயக்கப்பட உள்ளன.

இந்தியாவில் 11 மாநிலங்களில் பல்வேறு இடங்களை இணைக்கும் மொத்தம் ஒன்பது வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். 11 மாநிலங்களில் – ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகியவை அடங்கும்.

இந்த ஒன்பது வந்தே பாரத் ரயில்கள் செல்லும் வழித்தடங்கள்:உதய்பூர்-ஜெய்ப்பூர்; திருநெல்வேலி-மதுரை-சென்னை ஹைதராபாத்-பெங்களூரு விஜயவாடா-சென்னை (ரேணிகுண்டா வழியாக) பாட்னா-ஹவுரா காசர்கோடு-திருவனந்தபுரம்  ரூர்கேலா – புவனேஸ்வர் – பூரி  ராஞ்சி – ஹவுரா மற்றும் ஜாம்நகர்-அகமதாபாத்.

பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் முறையில் புதிய ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார், மேலும் இந்த ரயில் தனது முதல் பயணத்தை ஞாயிறு அன்று. திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது.

திருநெல்வேலி-மதுரை – சென்னை வந்தே பாரத் ரயில்

திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். விருதுநகர் (காலை 7.13), மதுரை (காலை 7.50), திண்டுக்கல் (காலை 8.40), திருச்சி (காலை 9.50) மற்றும் விழுப்புரம் (காலை 11.54) மற்றும் தாம்பரம் (மதியம் 1.13 மணி) ஆகிய இடங்களில் நிறுத்தப்படும். செவ்வாய்க்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் ரயில் இயக்கப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும். மற்றும் 10.40 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இது தாம்பரம் (மதியம் 3.18 மணி), விழுப்புரம் (மாலை 4.39 மணி), திருச்சி (மாலை 6.40 மணி), திண்டுக்கல் (இரவு 7.56 மணி), மதுரை (இரவு 8.40 மணி), விருதுநகர் (இரவு 9.13 மணி) ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்.

கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம் போன்ற பல்வேறு ரயில் நிலையங்களில் வழியாக  திருநெல்வேலி-மதுரை-சென்னை இடையே 2 மணி நேரத்திற்கும் மேலாக  கணிசமான நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.

வந்தே பாரத் ரயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு டிக்கெட்  ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஐஆர்சிடிசி செயலி  மூலம் செய்யலாம்.

இந்த ரயில்கள் நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் ரயில் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குதல் வந்தே பாரத் ரயில்கள் அவற்றின் இயக்கத்தின் வழித்தடங்களில் வேகமான ரயிலாக இருக்கும் மற்றும் கணிசமான நேரத்தை மிச்சப்படுத்த உதவும். போன்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் ஒரு படியாகும்” என்று அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.

Leave a Reply