மாற்றுத்திறனாளிகள் சட்டம் (RPWD) இந்தியா-2016 (அறிக)

ஊனம் என்றால் என்ன?

நான் தொலைவில் உள்ள ஒரு பொருளைப் பார்த்தபோது என் கண்களால் அந்தப் பொருளைப் பார்க்க முடியவில்லை. நான் மீண்டும் முயற்சித்தபோது, ​​என் கண்கள் மங்கி பார்வை தெளிவாக இல்லை என்பதை உணர்ந்தேன். இப்போது எனக்கு பார்வை குறைபாடு உள்ளது. இந்த கண் பார்வை குறைபாட்டை சரி செய்ய கண் கண்ணாடி அணிந்தேன். இப்போது கண்கண்ணாடி அணிந்த பிறகு அந்த பொருளை தெளிவாக என்னால் பார்க்க முடிகிறது. 

தொலைவில் உள்ள பொருளை பார்க்க முடியாதது பார்வை குறைபாடு (visual impairment) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு குறைபாடு (impairment) ஆகும். கண்ணாடி அணிந்த பிறகு நீங்கள் பொருளை பார்க்க முடிந்தால், அந்த குறைபாடு திருத்தக்கூடியது (correctable) என்பதாகும்.பார்வையின்மை (blindness) என்பது முழுமையான பார்வை இழப்பு அல்லது மிகவும் குறைந்த பார்வை கொண்ட நிலையைக் குறிக்கிறது

அதை என்னால் பார்க்க முடியவில்லை  அது பார்வை குறைபாடு உள்ளவர் (impairment) என்று அழைக்கப்படுகிறது.கண்ணாடி அணிந்திருந்தபோதும் என்னால் பார்க்க முடியவில்லை என்றால் அது பார்வையின்மை (blindness)  என்று அழைக்கப்படலாம். (அல்லது) பார்வையற்றவர் நபர் என்று அழைக்கப்படுபவர்

RPWD (Rights of Person With Disability)  சட்டம்-2016 

மாற்றுத்திறனாளிகள் என்ற சொல் நீண்டகால உடல், மன, அறிவுசார் அல்லது உணர்ச்சி குறைபாடுகள் உள்ள அனைத்து குறைபாடுகள் உள்ளவர்களுக்கும் பொருந்தும் இது பல்வேறு மனப்பான்மை மற்றும் சுற்றுச்சூழல் தடைகளுடன் தொடர்புகொண்டு, சமூகத்தில் அவர்களின் முழுமையான மற்றும் பயனுள்ள பங்கேற்பைத் தடுக்கிறது

இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளின் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மற்றும் கண்ணியமாக சமமாக வாழ்வை நடத்த இந்த சட்டம் லோக்சபாவில் “மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மசோதா-2016” நிறைவேற்றப்பட்டது. 21 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட 1995-ம் ஆண்டு pwd  சட்டத்திற்குப் பதிலாக இந்த மசோதா கொண்டுவரப்பட்டு இயற்றபட்டது.

RPWD சட்டம்-2016 அனைத்து வகையான  மாற்றுத்திறனாளிகளின்   பாதுகாப்பு, சமத்துவம், கண்ணியத்துடன் வாழ்வது மற்றும் மற்றவர்களுடன் சமமாக தனது மரியாதைக்கான உரிமையை    என்று   சட்டம் வரையறுகிறது. 

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்ட விதிகள் 2018-ல் வரையறுக்கப்பட்டவாறு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டரா அளவிலான மருத்துவமனையில் பணிபுரியும் சான்றிதழ் அளிக்க அதிகாரம் உடைய மருத்துவர்களால் 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு  சான்று வழங்கப்பட்டு வருகிறது.

ஊனமுற்ற நபர்களின் 21 வகைகள்  கீழே பட்டியலிடப்பட்டுள்ளது

  1. முழுவதும் கண் பார்வையற்றோர்-(blindness)
  2. குறைந்த பார்வையற்றோர் -(Low-vision)
  3. தொழு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர்கள்-(Leprosy Cured persons)
  4.  காது கேளாதவர் மற்றும் செவித்திறன் குறைபாடு- Hearing Impairment (deaf and hard of hearing)
  5. பல்வகை மாற்றுத்திறன் -(Locomotor Disability)
  6. குள்ளத்தன்மை – (Dwarfism)
  7. அறிவுசார் குறைபாடு -(Intellectual Disability)
  8. மனநோய்- (Mental Illness)
  9. புற உலக சிந்தனையற்றோர்- (Autism Spectrum Disorder)
  10. மூளை முடக்கு வாதம் –  (Cerebral Palsy)
  11. தசைநார் சிதைவு -(Muscular Dystrophy)
  12. நாள்பட்ட நரம்பியல் குறைபாடுகள்- (Chronic Neurological conditions)
  13. குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகள்- (Specific Learning Disabilities)
  14. பல வகை ஸ்களீரோசிஸ்- (Multiple Sclerosis)
  15. பேச்சு மற்றும் மொழி குறைபாடு -(Speech and Language disability)
  16. தலசீமியா- (Thalassemia)
  17. ஹீமோபிலியா- (Hemophilia)
  18. அரிவாள் செல் நோய்- (Sickle Cell disease)
  19.  காது கேளாதோர்/ பார்வை  உட்பட பல குறைபாடுகள்- (Multiple Disabilities including deaf-blindness)
  20. ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர் -(Acid Attack victim)
  21. பார்கின்சன் நோய்- (Parkinson’s disease)

பேச்சு மற்றும் மொழி குறைபாடு மற்றும் குறிப்பிட்ட கற்றல் குறைபாடு ஆகியவை முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். குள்ளத்தன்மை, தசைநார் சிதைவு ஆகியவை குறிப்பிட்ட இயலாமையின் தனி வகுப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இயலாமைகளின் புதிய வகைகளில் தலசீமியா, ஹீமோபிலியா மற்றும் அரிவாள் செல் நோய் ஆகிய மூன்று இரத்தக் கோளாறுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

6 வயது முதல் 18 வயது வரையிலான குறைபாடுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசக் கல்விக்கான உரிமை உண்டு.

புதிய சட்டம், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் (UNCRPD) உடன்படிக்கைக்கு இணங்க, அதில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இது UNCRT அடிப்படையில் ஊனமுற்றோர் மீதான இந்தியாவின் கடமைகளை நிறைவேற்றும். மேலும், இந்தப் புதிய சட்டம், உடல் ஊனமுற்றோரின் உரிமைகள் மற்றும் உரிமைகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் அதிகாரம் மற்றும் சமூகத்தில் திருப்திகரமான முறையில் உண்மையான சேர்க்கையை உறுதி செய்வதற்கான பயனுள்ள வழிமுறையையும் வழங்கும்.

மேற்கண்ட பிரிவுகள் இந்திய அரசால் ஊனமுற்றவர்களாக அறிவிக்கப்படுகின்றன. இந்தச் சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தங்கள் அதிகார வரம்பிற்குள் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அனைத்து வகையான சிறப்புத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும். 

Leave a Reply