ஜனனி சுரக்ஷா யோஜனா (JSY) ஜனனி சிசு சுரக்க்ஷா காரியாகிராம் (JSSK) திட்டங்கள்
கர்ப்பகால பராமரிப்பு
உலகில் ஒரு பெண் கர்ப்பமாகி குழந்தை பிறக்கும் வரை பல்வேறு உடல் மற்றும் மன பிரச்சனைகளை எதிர்கொள்கிறாள். ஒரு பெண் பிரசவிக்கும் போது சில மருத்துவ காரணங்களால் உடல்ரீதியான காரணங்களால் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதுபோல் பிரசவத்தின் போது குழந்தை மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதை ஆங்கிலத்தில் ஐ.எம்.ஆர் (IMR), எம்.எம்.ஆர்(MMR) என்று அழைப்பார்கள் அதாவது ஒரு குழந்தை ஒரு பெண் கர்ப்ப காலத்தில் பல்வேறு சிக்கல்கள் இன்றி குழந்தையை ஈன்று எடுக்க வேண்டும் மற்றும் தாயும் சேயும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்று இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மகப்பேறு இறப்பு விகிதம் (MMR): இது 100,000 உயிருள்ள பிறப்புகளுக்கு கர்ப்பம் தொடர்பான சிக்கல்களால் ஏற்படும் பெண்களின் இறப்பு எண்ணிக்கையாகும். இது கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது ஒரு பெண் எதிர்கொள்ளும் மரண அபாயத்தின் அளவீடு ஆகும்.
குழந்தை இறப்பு விகிதம் (IMR): இது 1,000 பிறப்புகளுக்கு ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை. இது மக்கள்தொகையின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான சுகாதார சேவைகளின் தரத்தின் குறிகாட்டியாகும்.
ஜனனி சுரக்ஷா யோஜனா (JSY)
2005 ஆம் ஆண்டு முதல் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (NHM) கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரசவ நேரத்தின் போது ஏற்படும் செலவினங்களைக் குறைப்பது மற்றும் கர்ப்பிணிப் பெண்களிடையே நிறுவனப் பிரசவத்தை ஊக்குவிப்பதன் மூலம் தாய் மற்றும் சிசு இறப்பைக் குறைப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள ஏழை கர்ப்பிணிகள் மருத்துவமனைகளில் பிரசவம் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். இத்திட்டத்தின் நோக்கம் கர்ப்பிணிப் பெண்களின் மருத்துவமனை செலவுகள், உடன் வரும் உதவியாளர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்ணின் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வருமான இழப்பு மற்றும் உணவு மற்றும் பிற குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வது.அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு முறையே ரூ.700/- மற்றும் ரூ.600/- மற்றும் வீட்டுப் பிரசவத்திற்கு ரூ.500 மானியத்துடன் தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவைகளை அணுக இந்தத் திட்டம் அவர்களுக்கு உரிமை அளிக்கிறது. குழந்தைகளின் பாதுகாப்பான பிரசவத்தை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- பிரசவத்தின் போது தாய் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும்
- பச்சிளம் குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைக்கவும்
- பயிற்சி பெற்ற சுகாதாரப்பணியாளர்கள் மூலம் பிரசவம் பார்த்து பிறக்கும் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தைக் அதிகரிக்கவும்.
ஜனனி சிசு சுரக்க்ஷா காரியாகிராம் (JSSK)
ஜனனி சிசு சுரக்ஷா காரியக்ரம் (JSSK) தமிழ்நாட்டில் செப்டம்பர் 2011 முதல் தொடங்கப்பட்டது. பிரசவத்திற்காக அரசு மருத்துவ மனைகளை அணுகும் கர்ப்பிணிப்பெண்கள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் பொது சுகாதார மையங்களில் சிகிச்சை பெறும் அனைத்து கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நோயுற்ற குழந்தைகளுக்கும் சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படுகின்றது.
பொது சுகாதார நிலையங்களில் பிரசவிக்கும் அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் சிசேரியன் உட்பட முற்றிலும் இலவச மற்றும் கட்டணமில்லா பிரசவத்திற்கு இது உரிமை அளிக்கிறது.
இத்திட்டத்தின் மூலம் கட்டணமில்லா மருந்து, நோய் கண்டறிதல், குருதியேற்றுதல், மருத்துவமனையில் தங்கும் நாட்களில் இலவச உணவு ஆகியவற்றோடு வீட்டில் இருந்து மருத்துவமனைக்கும் மருத்துவமனையிலிருந்து பரிந்துரை மையங்களுக்கும், சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு அழைத்து செல்ல கட்டணமில்லா போக்குவரத்து சேவைகளும் வழங்கப்படுகின்றது.