ஒரு குடையின் கீழ் அங்கன்வாடி மையங்கள் -ICDS

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் 1975-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 106 வது பிறந்த நாளில் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் கிராம  ஊராட்சியில்  உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத  நிலையை  உருவாக்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த திட்டம் குழந்தைகளின் ஆரம்ப கால பருவ பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான உலகின் மிகப்பெரிய மற்றும் தனித்துவமான திட்டங்களில் ஒன்றாகும்.பாலூட்டும் தாய்மார்களுக்கு ஆரோக்கியமான குழந்தைபேறு பெறவும். குழந்தைகளின் ஊட்டச்சத்து மேம்பாடு அடையவும் குழந்தைகளின் முன் பள்ளி முறைசாரா கல்வியை வழங்க ஒவ்வொரு கிராமத்திலும் முதன்மை அங்கன்வாடி மையத்திற்கு 400 முதல் 800 மக்கள் தொகை எனவும் குறு அங்கன்வாடி மையத்திற்கு 150 முதல் 400 மக்கள் தொகை எனவும் மலைப்பகுதியில் முதன்மை அங்கன்வாடி மையத்திற்கு 300 முதல் 800 மக்கள் தொகை எனவும் மலைப்பகுதியில் குறு அங்கன்வாடி மையத்திற்கு 150 முதல் 300 மக்கள் தொகை எனவும் மற்றும் 25 குழந்தையை கொண்டு ஒரு மையம் அமைக்கப்படும். குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு நோயுற்ற தன்மையின் குறைத்தல் மற்றும் தாய் சேய் இறப்பு விகிதம் குறைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள அங்கன்வாடி ஆசிரியர் மற்றும் உதவியாளர் கொண்டு இந்த மையங்கள் செயல்படும்.

உலக சுகாதார நிறுவனம் வழங்கிய விளக்கப்படத்தின்படி, குழந்தையின் எடை மற்றும் உயரம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கணக்கீட்டு அட்டையில் குறிப்பிடப்பட்டு, ஆரஞ்சு நிறத்தில் இருந்தால், அவர்கள் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள். பச்சை நிறத்தில் இருந்தால், ஆரோக்கியமாக உள்ள குழந்தை . சிவப்பு நிறத்தில் இருந்தால், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் என வகைப்படுத்தப்பட்டு, மையத்தில் எத்தனை குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ உதவிகள் வழங்குவது, மற்றும்   மாதந்தோறும் குழந்தைகளை கவனித்து கண்காணித்து அவர்களை நல்ல ஆரோக்கிய நிலைக்கு கொண்டு வருவார்கள்.

  • ஊட்டச்சத்து குறைபாடு என்பது நமது உடல் போதுமான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளாமல் அல்லது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடலால் உறிஞ்சப்படாமல் இருக்கும் நிலை.
  • குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
  • ஊட்டச்சத்து குறைபாடுள்ள கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர்.
  • ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சனைகள் வயிற்றுப்போக்கு, தட்டம்மை, நிமோனியா மற்றும் பல்வேறு தொற்றுகள்
  • குழந்தைகளின் இறப்பு
  • குழந்தைகளின் அறிவுத்திறன் மற்றும் படிப்பு ஆற்றல் குறைதல்
  • குழந்தைகள் வளர்ந்த பின்பும் உடல் எடை பிரச்சினைகள் நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோயினால் பாதிக்கப்படுவது பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.

ஒரு குடையின் கீழ் (UMBERLALLA ICDS)


ஒருணக்கினைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டமானது இந்திய அரசு மறு சீரமைக்கப்பட்ட ஒரு குடையின் கீழ் திட்டமாக ICDS -யை  2017 ஆம் ஆண்டு மாற்றியது.

இந்தத் திட்டம் மத்திய அரசின் நிதியுதவியுடன் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் திட்டமாகும். தேசிய ஊட்டச்சத்து குழு (NNM), பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குநரகம் மூலம் 2018-2019 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

.  ஒரு குடையின் கீழ் ICDS -யில் உள்ளடக்கிய துணை திட்டங்கள் பின்வருமாறு

  1. அங்கன்வாடி சேவைகள்,
  2. வளர்இளம் பெண்களுக்கான திட்டம்.
  3. குழந்தை பாதுகாப்பு சேவைகள். 
  4. தேசிய குழந்தைகள் காப்பக திட்டம்.
  5. போஷன் அபியான் (தேசிய ஊட்டச்சத்து மிஷன்).
  6. பிரதான் மந்தரி மாத்ரு வந்தன யோஜனா திட்டம்

Leave a Reply