உட்கட்டமைப்பில் தன்னிறைவு அடைந்த கிராம ஊராட்சி/ Infrastructural
உள்கட்டமைப்பு என்றால் என்ன? அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன ?
பொருளாதாரம்-சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய மூன்று தூண்களையும் ஒன்றாகக் கருத்தில் கொண்டால் மட்டுமே நிலையான உள்கட்டமைப்பை வழங்க முடியும்
கிராம வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு முக்கியமானது வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் கல்விகட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள், நீர் மற்றும் சுகாதார , சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைப்புகள், மின் உற்பத்தி வசதிகள், எரிசக்தி, இயந்திரங்கள் கணினிகள் மற்றும் இணையம் போன்றவை
மேலும் கிராம பஞ்சாயத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டால் மட்டுமே அந்த கிராமத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்திற்கான சூழல் உருவாகும். அதாவது, முறையான சாலை வசதி இல்லை என்றால், அந்தப் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்துவது மிகவும் கடினம்.
தொழில் உற்பத்தி நடவடிக்கைகள் கண்ணியமான வேலை உருவாக்கம், தொழில்முனைவு படைப்பாற்றல் மற்றும் புதுமை ஆகியவற்றை ஆதரிக்கும் வளர்ச்சி சார்ந்த கொள்கைகளை ஊக்குவிக்கவும், நிதிச் சேவைகளை அணுகுவது உட்பட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது கூடுதலான வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவது.
இயற்கை வள ஆதாரங்கள் சார்ந்த உள்ளூரின் பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண் நிலம் நீர்நிலைகள் வளங்கள் கால்நடை வளர்ப்பு மூலம் கிடைக்கக்கூடிய அதன் உற்பத்தி திறனையும் உற்பத்தி அளவிற்கு தேவையான உள்ளீடுகளை செய்தல்.
2030ஆம் ஆண்டுக்குள் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து ஆண்களுக்கும், பெண்களுக்கும், வேலைவாய்ப்பு மற்றும் வருமான வேலையை முழுமையாக கிடைக்க செய்தல் சம வேலைக்கு சம ஊதியம் கிடைக்க செய்தல்