சுத்தமான மற்றும் பசுமையான கிராம ஊராட்சி Clean and green village
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. (குறள்)
மழை பொழிவு இல்லை என்றால்
மேகத்திலிருந்து ஒரு துளி மழை பொழியவில்லை என்றால் இங்குள்ள புல்லின் நுனியைக் கூட காண்பது அரிதாகிவிடும் என்பதை இந்த குறள் நமக்கு உணர்த்துகிறது.பூமியில் மழை இல்லை என்றால் என்ன? என்ன நடக்கும் என்பது பெரிய கேள்விக்குறி?
ஒட்டுமொத்தமாக மழையின்மை உணவுச் சங்கிலியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் இது பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகளை அடிப்படையாக மாற்றும் மற்றும் மனிதர்கள் உட்பட பெரும்பாலான உயிரினங்கள் உயிர்வாழ இயலாது பூமியில் வாழ்வதற்கு மழை இன்றியமையாதது மழையின்றி புல், செடிகள் செழிக்க முடியாது உணவுச் சங்கிலி பாதிப்பு ஒவ்வொரு உயிரினமும் மற்றொன்றைச் சார்ந்து இருப்பதால் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படும் இந்த உணவுச் சங்கிலியில் மழை ஒரு முக்கிய இணைப்பு.
இயற்கை பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்வாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகிறது. இது நமக்கு சுற்றுச்சூழல் குறித்த பொறுப்பை உணர்த்துகிறது மேலும் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு ஆரோக்கியமான நாம் இயற்கையுடன் இணைந்து வாழ வேண்டும் அதை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
“பசுமை” என்பது இந்த பூமியின் சுற்றுச்சூழலின் இயற்கை வளங்களான கடல், நிலம் மற்றும் காடுகளை பாதுகாப்பதை உறுதி செய்வதும் நமக்கு உணவு, நீர், காற்று, உடைகள் ஆகியவற்றை வழங்கும் பல்லுயிர்களை பாதுகாப்பதும் நமது தேவைகளை பூர்த்தி செய்யும் உயிரினங்கள் அழிவதை தடுப்பதும் ஆகும். பாதுகாப்பான நிலையை உருவாக்குவதைக் குறிக்கிறது.
“சுத்தமான” சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் அவசியம் என்பது நமது வாழ்க்கையில் மட்டுமல்ல நம்முடைய கிராமத்தில் இருக்கும் மற்ற மக்களின் முன்னேற்றத்திற்கும் எதிர்கால நமது சந்ததியினருக்கும் நல்வாழ்வுக்கும் பாதுகாப்பான மிக முக்கியமான செயலாகும்.
தூய்மையான சூழல் என்பது நோயைத் தடுப்பது, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், மனநலத்தை மேம்படுத்துதல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான வழிகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு நன்மைகளை வழங்கும் ஒரு செயல்முறையாகும்.
சுத்தம் மற்றும் சுகாதாரம் என்பது நம் அனைவரின் தார்மீக கடமை. நாம் ஒவ்வொருவரும் சுத்தமாக இருப்பதன் மூலம் நம் குடும்பத்தினரை நம் சமூகத்தை மற்றும் எதிர்கால சந்ததியினரை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
பெட்ரோல், நிலக்கரி, எரிவாயு, மண்ணெண்ணெய். மின்சாரம் போன்ற ஆற்றல் இல்லாத உலகத்தை நம் வாழ்விலும் உலக மக்களின் வாழ்விலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இவை அனைத்தும் புதுப்பிக்க முடியாதவை.
இவற்றை பூமியில் இருந்து படிமங்களாக எடுத்து பயன்படுத்துகிறோம். இவை உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். இந்த ஆற்றல்கள் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன, இது புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணமாகும்.
நமது குழந்தைகளின் நல்ல எதிர் காலத்திற்காக, நாம் செய்ய வேண்டிய செயல்கள்
- நமது கிராமத்தை மரங்கள் நிறைந்த பசுமையான கிராமமாக குப்பைகள் அற்ற தூய்மையான கிராமமாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தும் கிராமமாக சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் கிராமமாக பருவ நிலை மாற்றத்தை எதிர் கொள்ளும் கிராமமாக உருவாக்குவோம்
- 100 சதவீதம் புதுப்பிக்கவல்ல, மாற்று எரி சக்தியை பயன்படுத்துதல்
- நாற்றங்கால் உருவாக்கி மரங்களை நடுவதன் மூலம் கிராமத்தை பசுமையாக மாற்றுதல்
- வேளாண்மை பணிகளுக்கு தேவையான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்
- சூரிய சக்தி பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.
- ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழி பைகளின் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும்