சிறுவர்களுக்கான உதவி எண்-1098 (Child Helpline Number) அறிக
இந்தியாவில் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள்
இந்தியாவில் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தோராயமாக 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 440 மில்லியன் பேர் உள்ளனர். இந்தியாவில் குழந்தைகள் பலவீனமான சூழ்நிலையிலும் அவர்களின் உரிமை, பாதுகாப்புக்கு எதிரான பல விதமான வன்முறைக்கு ஆளாக கூடிய சூழலிலும் உள்ளனர் குழந்தை தொழிலாளர், குழந்தை கடத்தல், பாலியல் வன்முறை இது போன்ற வன்முறைகளால் மோசடிகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். உலக அளவில் எண்ணற்ற குழந்தைகள் உடல் மற்றும் உளவியல் ரீதியாக ஆரோக்கியமற்ற மற்றும் அச்சுறுத்தல் கூடிய தொழிலில் இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகிறது. இது அவர்களின் ஒட்டுமொத்த சமூக மனநல வளர்ச்சியை பாதிக்கிறது. இது போன்ற எண்ணற்ற வன்முறைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க உபோயகப்படும் உதவி தொலைபேசி எண் ஆகும்.
சைல்டு லைன் -1098 child help line number
குழந்தைகள் குடும்பத்தில்,சமூகத்தில் தங்கள் சந்திக்கும் வன்முறைகள், பாலியல் தொந்தரவுகள், கடத்தப்படுதல், குழந்தைத் தொழிலாளர்கள், பிச்சையெடுக்க நிர்ப்பந்திக்கப்படும் குழந்தைகள், உளவியல் பாதிப்புக்குள்ளானகுழந்தைகள், குழந்தை திருமணம் என்று பல்வேறு வகையில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு எதிரான தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகளை தடுக்கும் வகையில் இந்தியாவில் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் 24 மணி நேரமும் கட்டணமில்லா அவசரகால தொலைபேசி (1098) சேவை குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆபத்தான சூழ்நிலையில் உள்ள குழந்தைகள் (அல்லது) பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாதுகாவலர்கள் , குழந்தையின் நலனில் அக்கறை உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் (1098) என்னைத் தொடர்பு கொண்டால் அரசாங்கத்தின் உதவியோடு குழந்தைகளை மீட்டு எடுக்கும் ஓர் அவசரகால மற்றும் உதவி எண் ஆகும்
பில்லிமோரியா
1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் (TISSல்) பேராசிரியராக இருந்த திருமதி. ஜெரூ பில்லிமோரியாவால் CHILDLINE முதலில் தொடங்கப்பட்டது.
திருமதி. பில்லிமோரியாவால் தொடங்கபட்ட இந்த சேவை குழந்தைகளின் அவசர காலங்களில் அதாவது தெருக்களில் உள்ள குழந்தைகள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது, காயமடையும் போது பாதுகாப்பு அற்ற சூழ்நிலையின் போது அவர்களுக்கு போது உடனடி ஆதரவு தேவை என்று உணர்ந்தார். உதவி தேவைப்படும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு தான் மட்டும் பதிலளிப்பது சாத்தியமில்லை என்பதை அவர் உணர்ந்தார். அதன் அடிப்படையில் ஒரு பொதுவான கட்டணம் இல்லா தொலைபேசி உதவி எண் மூலம் தீர்க்க முடியும் என்பதை அவர் உணர்ந்தார்
CHILDLINE India Foundation (CIF)
CHILDLINE India Foundation (CIF) என்பது நாடு முழுவதும் CHILDLINE தொலைபேசி 1098 சேவையை நிறுவுதல், சேவை வழங்கல் மற்றும் நிதி கண்காணிப்பு, பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தல், விழிப்புணர்வு உருவாக்குதல், வாதிடுதல் மற்றும் சேவைக்கான ஆதாரங்களை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு CIF மட்டுமே பொறுப்பாகும்.
மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் கீழ் சைல்ட்லைன் 1098 என்ற சேவை செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 600க்கும் மேற்பட்ட மாவட்டங்கள், 100க்கும் மேற்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், கடத்தப்படும் குழந்தைகள், பற்றி 24 மணி நேரமும் 1098 என்ற எண்ணை அழைத்து உதவி கோரலாம். பாதிக்கப்படும் குழந்தைகளே கூட நேரடியாக இந்த எண்ணை அழைத்துப் பேசலாம் .
பணிகள்
- அனைத்து குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் குழந்தை நேய தேசமாக மாற்றுதல் .
- ஒவ்வொரு குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது
- எந்தவொரு குழந்தையும் அல்லது குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறையுள்ள எந்த ஒரு தனி நபர் இரவும், பகலும் செயல்படும் சைல்ட்லைன் -1098 உதவி எண்ணை அழைத்து உதவி செய்யலாம்.
- CHILDLINE மையத்தால் பெறப்படும் அனைத்து அழைப்புகளும் பற்றிய விவரங்கள் பெறப்பட்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.